Cookery

பட்டர் பிரியோஜீ பன் செய்முறை

By  | 

தேவையான பொருட்கள்

  • கோதுமை மா – 750g
  • உப்பு – அரை மேசை கரண்டி
  • சீனி – 75g
  • பட்டர் – 150g
  • பால் மா – 3 மேசை கரண்டி
  • ஈஸ்ட் – அரை மேசை கரண்டி
  • முட்டை – 3
  • தண்ணீர் – 250ml

 

செய்முறை

கோதுமை மாவுடன் ஈஸ்டைசேர்த்து 1 நிமிடம் வரை நன்றாக கலக்கவும். தொடர்ந்து அதனுடன் சீனி, உப்பு, பால்மா என்பவற்றை சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளுங்கள்.

முட்டை மற்றும் பட்டரை மா வுடன் சேர்த்து அடித்துக்கொள்க.
தண்ணீரையும் அதனுடன் சேர்த்து மாவை பினைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

30 நிடமிடங்களின் பின்பு மாவில் மூன்றில் ஒரு பகுதியை எதுத்து உருண்டைகளாக்கி மீண்டும் 10 நிமிடம் வைக்கவும்.

மிகுதி மாவை முன்னதைவிட சிறு உருண்டைகளாக்கி 10 நிமிடம் வைக்கவும்.

இப்பொழுது பெரிய உருண்டையை உள்ளங்கையில் வைத்து சிறிது அழுத்தி துலையிட்டு அதனுல் சிறு உருண்டையை வைத்து தயார் செய்து கொள்ளுங்கள்.

தயார் செய்த டோ வை ஹவனில் கீழ் உள்ள வெப்பநிலையிவைத்து பேக் செய்து கொள்க.

  • மேல் வெப்பநிலை 200 C
  • கீழ் வெப்பநிலை 210 C
  • நேரம் 15 நிமிடங்கள்

சுவையான பட்டர் பிரியோஜீ தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *