Cookery

வேர்க்கடலை குழம்பு செய்முறை…!

By  | 

தேவையான பொருட்கள் :

  • பச்சை வேர்க்கடலை – 1 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி சாறு – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வேர்க்கடலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சாற்றை விட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளற வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்த விடவும்.குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *