Beauty

வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்ய சில டிப்ஸ்!

By  | 

வீட்டிலேயே எப்படி ஹேர் கலரிங் பண்ணுறது அப்டின்னு உங்களுக்கு குழப்பத்துல இருக்குறவங்களா நீங்க’ கவலையே வேண்டாம். எந்த பின்விளைவுகளும் இல்லாத மாதரி உங்க கூந்தலை அழகா ஹேர் கலரிங் செய்ய இதோ சில டிப்ஸ்…!

தேவையான பொருள்

  • ஹென்னாவுடன் (மருதாணி பொடி) – 50 கிராம்.
  • தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் – 50 மி.லி.
  • டீ டிகாஸன் – அரை டம்ளர்.

செய்முறை

ஹென்னாவுடன் (மருதாணி பொடி), தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் மற்றும் டீ டிகாஸன் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்துக் கொள்ளவும். அந்த கலவையை 3 மணி நேரம் அதை அப்படியே வைக்கவும்.

மூன்று மணி நேரத்திற்கு பின்னர் அந்த கலவையை தலையில் செய்தது சுமார் 2 மணி நேரம் காய வைக்கவும்.

பின்னர் கலரிங் ப்ரூஃப் ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். அது மட்டுமின்றி வெறும் பீட்ரூட்டையும் கேரட்டையும் கூட நன்றாக அரைத்து தலையில் போட்டு 30 நிமிடம் வெயிலில் காய வைத்து. பின்னர் கலரிங் ப்ரூஃப் ஷாம்பூ கொண்டு தலையை அலசலாம்.

எந்த வித கெமிக்கல்களும் இல்லாத இது உங்கள் தலைக்கு ஒரு நேச்சுரல் கலரைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *