Cookery

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

By  | 

தேவையான பொருட்கள் :

  • உருளைக்கிழங்கு – 3
  • வெங்காயம் – 2
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கேரட் – 2
  • சீஸ் – 1/2 கப்
  • கார்ன் – தேவைக்கேற்ப
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  • சோள மாவு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – பொரிப்பதற்கு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • பாண் தூள் – தேவைக்கேற்ப

 

செய்முறை :

கேரட், சீஸை துருவிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள்,  கரம் மசாலா, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

துருவிய கேரட், சீஸ்,கொத்தமல்லி  என்பவற்றை மிக்ஸ் செய்து கொள்க.

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டி நடுவில் துளைத்து  சீஸ் கலவையை  அதனுல்வைத்து மீண்டும் உருண்டையாக்கிக் கொள்க.

உருண்டைகளை கரைத்து வைத்துள்ள சோள மாவில் முக்கி எடுத்து, பின்னர் பாண் தூளில் பிரட்டி வைக்கவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அதில் இந்த உருண்டைகளை போட்டு பொரிக்கவும். உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *