
Cinema
சமந்தா – நாக சைதன்யா திருமண வீடியோ வெளியானது
நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது. உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.
நடிகை சமந்தாவும் தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரண்டு பேர் வீட்டிலும் பச்சைக் கொடி காட்டினர். பின்னர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சமந்தா, கிறிஸ்தவர் நாக சைதன்யா இந்து. எனவே திருமணத்தை இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது.
இவர்களின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
0 comments