Cinema

வைரலாகும் அம்பானி குடும்ப திருமண அழைப்பிதழ்

By  | 

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளி தோழியும் பிரபல வைர வியாபாரியின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும்  திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இவர்களின் திருமண அழைப்பிதழ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக  அச்சடிக்கப்பட்டுள்ளது.

பெரிய பரிசு பெட்டி வடிவில் அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது. பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒரு அழைப்பிதழ் தயாரிக்க மட்டும் இந்திய விலை மதிப்பில் சுமார் ரூ.1 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக அம்பானியின் குடும்பத்தினர் கோயிலுக்கு சென்று அழைப்பிதழை சுவாமியிடம் வைத்து வழிபாடு நடத்தினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *