Fashion

பார்ட்டிகளுக்கான பேஷன் ஆடைகள்

By  | 

கிளாசிக் லுக் வெயிஸ்கோட்

சிம்பிளான சட்டையுடன் நல்ல காட்டன் அல்லது டெனிம் பேண்ட் அணிந்து, சட்டைக்கு மேல் ஒரு வெயிஸ்கோட் அணிந்தால் ஒரு கிளாசிக் லுக் கிடைக்கும்.இது புரஃபஷனல் பார்ட்டிகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஸ்டைல் டெனிம் ஜாக்கெட்

டெனிம் ஜாக்கெட் அவுட்டோர் பார்ட்டிகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இது ஒரு கூலான லுக்கை கொடுக்கும். பிரைட்டான செக்டு சர்ட், புளூ ஜீன்ஸ் அதோடு ஒரு லைட் கலர் ஷேடு டெனிம் ஜாக்கெட் அணிந்தால் போதும். அந்த பார்ட்டியில் நீங்கள் தான் ஹீரோ

டீவோர் ஷிப்ட் டிரஸ்

பெஸ்ட்டுடன் கூடிய இந்த ஷிப்ட் டிரஸ் இறுக்கமாக இல்லாமல், நார்மல் சைஸில் இருக்கும். இதனுடைய நீளம் முழங்கால் வரையிலும், கைகள் ஃபுல் ஸ்லீவாகவும் இருக்கும். பேக் பட்டன் வைத்து, கொஞ்சம் லூஸ் ஃபிட்டாக இருக்கும் இந்த ஆடை பார்ட்டி செல்லும் பெண்களுக்கு நல்ல சாய்ஸ்.

ஃபுளோரல் பிரிண்டட் டிராப்ஸ்

பெண்களுக்கு மிகப் பொருத்தமான மற்றொரு பார்ட்டி வியர் டிரஸ் இது. ஷிப்ட் டிரஸ் வகையைச் சேர்ந்த இந்த டிராப் டிரஸ் பூக்கள் பிரிண்டட் செய்யப்பட்டிருக்கும். இதில் எங்கும் லைக் ஸ்டிச்சிங் இருக்காது. பெரும்பாலும் பாலியஸ்டர் ஃபேப்ரிக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ளும் பார்ட்டி மற்றும் உடன் வருபவர்களின் ஆடைகளைப் பொருத்து நீங்கள் வண்ணங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

வெல்வெட் பிளேஸர்

பார்ட்டியில் மின்னுவதற்கு வெல்வெட் பிளேஸருக்கு மாற்று வுறு உடை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இரவு நேர பார்ட்டிகளில், வண்ண விளக்குகளில் இந்த வகை பிளேஸர்கள் மின்னும். உங்கள் பர்சனாலிட்டியை உயர்த்திக் காட்டும். சிம்பிளான ஒரு சர்ட் மற்றும் காட்டன் டிரவுஸர் அணிந்து அதற்கு மேல்,ஏதேனும் நல்ல டார்க் நிறத்தில் வெல்வெட் பிளேஸர் அணிந்து செல்லுங்கள். நிச்சயம் பார்ட்டியில் நீங்கள் றோயல் லுக்காகத் தெரிவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *