Cinema

மகள் ஷிவா பற்றிய தந்தை தோனியின் நெகிழ்ச்சி பேச்சு

By  | 

ஒரு கிரிக்கெட் வீரராக இருந்த என்னை மகள் ஷிவா தான் மனிதராக மாற்றினார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் களத்தில் இறங்கிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவின் போது மற்ற வீரர்கள் வெற்றி கோப்பையுடன் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் டோனி தனது மகள் ஷிவாவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டோனி, தனது மகள் ஷிவாவுடன் நேரம் செலவிட்டது குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ஷிவா பிறப்பதற்கு முன்பு என்னுடைய பெரும்பாலான நாட்களை கிரிக்கெட் விளையாடுவதிலேயே கழித்து வந்தேன். ஷிவா பிறந்த போது என்னால் அவளுடன் நேரம் செலவிட முடியவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே மூழ்கிவிட்டேன். இதனால் ஒரு தந்தையாக பலவற்றை இழந்தேன். எப்போதுமே அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் இருக்கும் நெருக்கம் அதிகம். அதேபோன்று தான் என் மகளும் உள்ளார்.

ஐபிஎல் போட்டியின் போது ஐபிஎல் போட்டி தொடர் முழுவதும் ஷிவா என்னுடன் இருந்தார். போட்டிக்கு முன்னும், பின்னும் மைதானத்தில் புல் தரையில் என்னுடன் விளையாட, மைதான பராமரிப்பாளர்களிடம் அனுமதி கோரினேன். எனது கோரிக்கைக்கு அனுமதியும் கிடைத்தது. அதனால் அவளுடன் அதிக நேரத்தை செலவிட்டேன். ஷிவாவுடன் செலவிட்ட ஒவ்வொரு நொடியும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. வெறும் கிரிக்கெட் வீரராக இருந்த என்னை நல்ல மனிதராக மாற்றியது மகள் ஷிவாதான் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *