Children

பிரச்சினைக்கு காரணம் நீங்கள்தான் ?

By  | 

எனக்கும் என் மனைவிக்கும் வயது 47. எங்களுக்கு ஒரே மகன். வயது 23. படித்து முடித்து நல்ல வேலைக்குச் செல்கிறார். நானும் பிரபல நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறேன். எனது மனைவியும் ஆசிரி­யை­யாகப் பணியாற்றுகிறார். எங்களுக்கு இருக்கும் பிரச்சினை எங்கள் மகன்தான்! நன்றாகப் படித்து நல்ல தொழில் செய்தாலும் இங்கி­தம், மரியாதை எதுவுமே இல்லை.

எடுத்­தெறிந்து பேசுவது அவரது வழமையாகி­விட்டது. எத்தனையோ முறை எடுத்துச் சொல்லிப் பார்த்துவிட்டோம். ஆனால், திருந்த­வில்லை. எங்களுடன் என்று மட்டுமில்லை. எல்லோருடனும் சிடுமூஞ்சித்தனமாகத்தான் பழகுகி­றார். இதனால் சில சந்தர்ப்பங்களில் உறவினர்கள் எம்முடன் கோபித்துக்­கொண்டதும் உண்டு. ஏன் இப்படி? இதை எப்படி மாற்றுவது?

பதில்:
நீங்கள்தான் காரணம்!
வசதிக்குக் குறைவில்லாத குடும்பம் உங்களுடையது என்று தெரிகிறது. இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரே பிள்ளை. அவருக்கு நீங்கள் கொடுத்த செல்லத்தைப் பற்றிக் கேட்­­கவா வேண்டும்? அவர் கண்ணில் கண்ணீர் வந்துவிடக் கூடாது என்பதற்­காக அவர் கேட்டது அனைத்தை­யும் செய்து கொடுத்திருப்­பீர்கள். அதனால்­தான் நீங்கள் இன்று இரத்தக் கண்ணீர் வடிக்கிறீர்கள்.

பிள்ளைகளைச் செல்லமாக வளர்ப்­ப­தில் தவறில்லை. ஆனால், அதற்கும் ஒரு அளவுண்டு. கேட்டதை­யெல்லாம் கேட்ட உடனேயே வாங்­­­கிக்­கொடுக்­கும் பெற்றோர்கள், அவர்களது பிள்ளை­களின் சமூகம் குறித்த பார்­வையை மாற்றிவிடு­கி­றார்­கள். எது கேட்டாலும் கொடுக்­­கும் சமூகம் இது என்று நினைத்துவிடுகிறார்கள்.
தமது சந்தோஷம்தான் இந்த உல­குக்கு முக்கியம் என்று எண்ணி­விடுகி­றார்­கள். இதனால், தாம் விரும்பிய ஒன்று கிடைக்கா­விட்டால், மற்றெ­தைப் பற்றியும் சிந்திக்க முடியாத மனக் குருடர்கள் ஆகிவிடுகி­றார்கள். இதனால், தமது நடத்தையின் மாற்­றத்தையும் அதனால் தனக்கு ஏற்படும் அவ­மானத்தையும் அவர்கள் சிந்தித்­துப் பார்ப்பதில்லை.

இது, ஆரம்பத்திலேயே களையப்­பட­வேண்டிய ஒன்று. இதை, 23 வருடங்கள் கழித்து எப்படிச் செய்வது என்பதுதான் இப்போது பிரச்சினை!ஒரே பிள்ளை, வயதும் 23 வயதாகி­­விட்டது. திருமணம் செய்து­­வைத்து­விட்டால் மனைவி வந்து அவ­ரைத் திருத்தி­விடுவார் என்ற எண்­ணத்தில் அவ­சரப்­பட்டு அவருக்கு திருமணம் செய்து வைத்து­­­விடாதீர்கள். அதெல்­லாம் திரைப்­படங்களில்தான் சாத்தியம்! மேலும் அவ்வாறான ஒரு கண­வனைத் திருத்துவது தன் வேலையில்லை என்பதில் தற்போதைய இளம் பெண்கள் தெளி­­வாக இருக்கிறார்கள். எனவே, திருமணம் செய்து வைத்து, ஒரு பெண்­ணின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்.
இப்போது நீங்கள் செய்யவேண்டி­யது படிப்படியாக அவர் மீதான பொறுப்புக்களைக் கூட்டுவதுதான்! ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது உண்மைதான்! ஆனால், அப்படியே விட்டுவிடவும் முடியாது. அவரது கவனம் குடும்பத்­தில் இல்லாததால்தான் அவருக்கு உறவுகளின் தாற்பர்யம் தெரிய­வில்லை. எனவே, அவரது சந்தோஷத்­தில் கை வையுங்கள்.

வசதியான குடும்பம், கை நிறையச் சம்பளம், இளம் வயது…. இவை போதும் நண்பர்களுடன் பொழுதை உல்லாசமாகப் போக்க! முதலில், அந்த நண்பர் வட்டத்தில் இருந்து உங்கள் மகனை வெளிக்கொண்டு வாருங்கள். அதற்கு, வீட்டின் பொறுப்­­­­பான வேலைகளை அவர் வசம் ஒப்படைப்பதே சரி! உங்கள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்­கும் விசேஷங்களுக்கும் அவரை கட்டாயமாக அழைத்துச் செல்லுங்கள்.
ஆரம்பத்தில் முரண்டுபிடிக்கத்தான் செய்வார். அசந்துவிடாமல், தொடர்ச்சி­யாக நச்சரித்துக்கொண்டே இருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வழிக்கு வருவார்.
அவரது நண்பர்களே தனது உலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அவருக்கு, உறவுகளும் அவர்களுடன் கலந்து உறவாடும்­போது கிடைக்­கும் சந்தோஷமும் கொஞ்சம் கொஞ்ச­மாகப் புரிய வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *