Biodata

நட்சத்திரங்களின் வாழ்க்கைத் துணை: மனந்திறக்கிறார் நடிகர் விஜய்

By  | 

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவை பல விழாக்களில் கணவர், குழந்தை சகிதமாகப் பார்த்­தி­ருக்கிறோம். திருமதி விஜ­யின் அழகான முகமும் அடக்க­மான தோற்ற­மும் நினைவில் பதிந்திருக்கி­றதே தவிர, அவரது குணாதி­சயங்கள் விஜய்க்குத்தானே தெரியும்? விஜய்யின் வாயினாலேயே அவரது மனைவிப் பற்றி சொல்லக் கேட்போமே!

காதலிக்கிற வயசுதான்… ஆனாலும், அப்ப அதுக்கு எனக்கு நேரமில்லைங்­கிறதுதான் உண்மை. ஒரே நேரத்­துல ரெண்டு, மூணு படங்கள் பண்­ணிட்டிருந்த பீரியட். ‘ப்ரியமுடன்’ டைம்ல தான் கீதா அறிமுகமானாங்க. லண்டன்லேருந்து ஹொலிடேஸுக்கு வந்திருந்தவங்க, பொதுவான ஒரு நண்பர் மூலமா எங்க குடும்பத்துக்கு அறிமுகமானாங்க. ‘ஹாய்… ஹலோ’ சொன்னதோட சரி… பல்பு எரியலை… பட்டாம்பூச்சி பறக்கலை.

ரெண்டு வீட்டுப் பெரியவங்களும் பேசி, கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணினாங்க. அப்புறம்தான் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம். அந்த நேரம் எனக்கு சுவிட்சர்லாந்து, பிரான்ஸ்ல நிறைய ஷூட்டிங் இருந்­தது. அதை சாக்கு வச்சு முடியற போதெல்­லாம் லண்டனுக்கு ஓடுவேன். அவங்களுக்கு நேரம் கிடைச்சா இந்­தியா வந்துடு­வாங்க… இப்படியே ஒன்றரை வருஷம் போச்சு. கல்யாணம் பண்ணிக்­கிட­்­­டோம். அப்­பவும் ரொம்ப விளை­யாட்டுத்­தன­மாத்தான் இருந்தேன்.

25 வயசுல கல்யாணம்… 26 வயசுல பையன் பிறந்துட்டான். நானே குழந்தை மாதிரி இருந்தப்ப, எனக்கொரு குழந்தை வந்ததும்தான், திடீர்னு ஒரு பொறுப்பு வந்தது. கொஞ்சம் கொஞ்சமா அந்த வாழ்க்­கைக்கு என்னைத் தயார்படுத்திக்க ஆரம்பிச்சேன்.

கீதாவும், நானும் பழக ஆரம்பிச்ச முதல் நாளே பேசித் தெளிவுப்­படுத்­திக்கிட்ட விஷயம்னா, அது என் தொழிலைப் பத்தினதுதான். எது நிஜம், எது நிழல்னு அவங்க ரொம்பத் தெளிவா புரிஞ்சுக்கிட்டாங்க. நடிப்புங்கிறது என் தொழில். ‘ஒன் ஸ்கிரீன்’ல நான் எத்தனையோ நடிகைக­ளோட கட்டிப்பிடிச்சு, நெருக்கமா நடிக்க வேண்டியிருக்கும். கெமராவுக்கு முன்னாடி நடக்கற அந்த விஷயங்கள், கெமராவுக்கு பின்னாடி எங்க குடும்ப வாழ்க்கையை, நிம்மதியை பாதிக்கக்­ கூடாதுங்கிறதுல ரெண்டு பேரும் தெளிவா இருந்தோம். இப்பவும் என்னோட ஹீரோயின்கள் எல்லோரை­யும் நான் கீதாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சிடுவேன்.

என்னைவிட, அவங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆயிடுவாங்க. நமக்கும் பிரச்சினை இல்லை பாருங்க!Man of few words… மீடியாவுக்கு தெரிந்த விஜய் இப்படித்தான்! வீட்டிலும் சார் அப்படித்தானா? மேடம் டென்ஷன் ஆக மாட்டாங்களா? நான் வேணும்னே அப்படிப் பண்ற­தில்லீங்க… சின்ன வயசு லேருந்தே என் கேரக்டர் அப்படி. வீட்லேயும் அப்படித்தான். கல்யாணமான புதுசுல என்னோட இந்த கேரக்டரால கீதா கொஞ்சம் இரிட்டேட் ஆயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்புறம் பழகிட்டாங்க. இப்ப எனக்கும் சேர்த்து அவங்களே பேசிடறாங்க!

காதலைக் காலத்துக்கும் நினைவு­படுத்து விதத்தில் ஏதாவது ஞாபகமிருக்கா ?
எனக்கு கிஃப்ட் கொடுக்கற பழக்­கமே கிடையாது. கீதாகிட்ட ‘உனக்குப் பிடிச்சதை நீயே வாங்கிக்கோ’ன்னு சொல்லிடுவேன். என் செலக் ஷன் ரொம்ப மோசமா இருக்கும். கிஃப்டா கொடுத்ததுக்காக, அவங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் அதை யூஸ் பண்ணணுங்கிற கட்டாயம் எதுக்கு? இன்னும் சொல்லப் போனா, எனக்கான தேவைகளையே கீதாதான் செலக்ட் பண்ணுவாங்க. என்னோட டிரஸ்லேருந்து, சகலமும் அவங்க தெரிவுதான்… அவங்க எனக்கு நிறைய வாங்கிக் கொடுத்திருக்காங்க. முதல் கிஃப்ட் ஒரு டிரஸ். கீதா தன் கையால எனக்கு சமைச்சுக் கொடுத்த முதல் அயிட்டம் தோசை. சும்மா சொல்லக் கூடாது, சூப்பரா இருந்துச்சு.

கல்யாணத்துக்குப் பிறகு சங்கீதா பார்த்த உங்க படம்? என்ன கமென்ட் சொன் னாங்க? உங்க படங்களோட கதைகளைப் பத்தி அவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணுவீங்களா?
99இல் கல்யாணம் முடிஞ்சதும் ரிலீசான படம் ‘மின்சாரக் கண்ணா.’ என்ன கமென்ட் அடிச்சாங்கன்னு தயவு செய்து கேட்காதீங்க… என கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்கிறார்.
என்ன படம் பண்றேன்னு சொல்­வேனே தவிர, கதையெல்லாம் சொல்ற­தில்லை. கதை கேட்கறது, ஓ.கே. பண்றதெல்லாம் என்னோட தனிப்பட்ட முடிவு. 90 வீதம் சரியாவே இருந்திருக்கு. 10 வீதம் அப்படி இப்படி தப்பாயிருக்கலாம். ரீமேக் படங்கள் பண்றதா இருந்தா மட்டும், ஒரிஜினல் வெர்ஷனை கீதாவுக்கு போட்டுக் காட்டுவேன்.
கீதாவுக்கு ரசனை அதிகம். சராசரி ரசிகையா ஒரு படத்தை பிரமாதமா விமர்சனம் பண்ணுவாங்க. என் படமாவே இருந்தாலும், நல்லாருந்தா, நல்லாருக்­கும்பாங்க. இல்லாட்டி, கிழி கிழின்னு கிழிச்சிடுவாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் ‘நண்பன்’ படத்தைப் பார்த்துட்டு, ‘பெஸ்ட் மூவி’ன்னு பாராட்டியிருக்காங்க…

எந்தெந்த விஷயங்களுக்கு உங்களுக்­குள் சண்டை வரும்? யார் முதலில் சரண்டர் ஆவீங்க?
காரணமே இல்லாம அடிக்கடி சண்டை போட்டுக்குவோம். எங்கயாவது வெளில கிளம்பறோம்னா, சொன்ன டைமுக்கு ரெடியாக மாட்டாங்க. போன வாரம்கூட அப்படி ஒரு இடத்துக்குப் போறதா பிளான். நான் ரெடியாகி, கார்ல ஏறிட்டேன். மேடம் வரவே இல்லை. எனக்கு செம டென்ஷன். காரை எடுத்துட்டு, எங்க ஏரியாவை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு திரும்பி வந்தா, நான் விட்டுட்டுப் போயிட்டேன் போலன்னு வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. திட்டினேன். அப்புறம் சகஜமாயிட்டோம். பொதுவா சண்டை வந்தா ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்க மாட்டோம். யார் முதல்ல வந்து சாரி கேட்கறாங்கன்றதுல ஒரு சின்ன த்ரில். வராங்களா, வராங்களான்னு வெயிட் பண்ணிட்டே இருப்பேன். மனசுக்குள்ள ஒரு டெட்லைன் போட்டு வச்சிருப்பேன். அது நெருங்கப் போகுது, அப்படியும் அவங்களுக்கு கோபம் குறையலைன்னு தெரிஞ்சா, வேற வழியே இல்லை, சரண்டர் தான்… ஆனாலும், அவங்களைக் காக்க வச்சுப் பார்க்கறதுல எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்.

தனிக்குடித்தனம் கல்யாணத்துக்குப் பிறகு 2 வருஷம் எங்கம்மா-அப்பாகூட ஒண்ணாதான் இருந்தோம். தனிக்குடித்தனம் போனா, எனக்கு பொறுப்புகள் அதிகமாகும்னு தோணவே, நான்தான் அந்த முடிவை எடுத்தேன். எங்கப்பாவும் அதையே சொன்னார். உண்மைதான்… முன்னல்லாம் அதான் அம்மா-அப்பா பக்கத்துலயே இருக்காங்களேன்னு விளையாட்டுத்தனமா இருப்பேன். இப்ப தனிக்குடித்தனம் வந்த பிறகு, கீதாவும் குழந்தைங்களும் தனியா இருப்பாங்களேன்னு பொறுப்பா வீட்டுக்கு ஓடி வந்துடறேன். அந்த அனுபவம் புதுசாவும் சந்தோஷமாவும் இருக்கு.

மனைவி குழந்தைங்களை மிஸ் பண்றீங்களா ?
என்னை மாதிரி அப்பாக்களுக்கு பிள்ளைங்களோட அதிக நேரம் செலவிட முடியாதுன்னாலும், இருக்கிற நேரத்தை சந்தோஷமா செலவிடணும்னு நினைக்கறவன் நான். குழந்தைங்க பிறந்தப்ப, அவங்களைக் குளிப்பாட்டறது, நாப்பி மாத்தறதுன்னு எல்லா வேலைகளையும் எனக்குக் கத்துக் கொடுத்துட்டாங்க கீதா. அவங்க வீட்ல இல்லாட்டாலும், என்னால தனியா மேனேஜ் பண்ண முடியுங்கிற அளவுக்கு செம எக்ஸ்பீரியன்ஸ்… ஆனா, இப்ப வரைக்கும் படிப்பு, நடத்தைன்னு பசங்க டிபார்ட்மென்ட் முழுக்க கீதாவோட நிர்வாகம்தான்.

ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல ஃப்ரீ டைம் கிடைச்சா, வீடுதான் எனக்கு உலகம். கீதாவோடவும் குழந்தைங்களோடவும் வீட்ல இருக்கத்தான் விரும்புவேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் எங்க ஏரியாலதான் இருக்காங்க. பல பேர் கல்யாணமானவங்க. அவங்க எல்லாரும், அவங்கவங்க ஒயிஃபோட எங்க வீட்டுக்கு வருவாங்க. வெளில போகணும், தனியா இருக்கணும்­னெல்­­லாம் ஒரு நாளும் கீதா சொன்ன­தில்லை.

நான் என் மனைவிக்கு ரொம்ப சின்சியர். ஷூட்டிங் ஸ்பாட்ல அதிகம் பேச மாட்டேன். என்னைப் பத்தி கிசுகிசு வர்ற அளவுக்கு நடந்துக்க மாட்டேன். அதையும் மீறி யாராவது என்னைப் பத்தி சொன்னாக்கூட கீதா நம்ப மாட்டாங்க.
இதைச் சொன்னா, ஏதோ சினிமால நான் பேசின டயலாக் மாதிரித் தோணலாம். ஆனாலும், அதுதான் உண்மை! அடுத்த ஜென்மம் இருக்கான்னு தெரியலை ஒருவேளை இருந்தா, கீதாதான் எனக்கு மனைவியா வரணும்….. என் ஆசை, பிரார்த்தனை, நம்பிக்கை எல்லாம் அதுதான்!’’

நட்சத்திரங்களின் குடும்ப வாழ்க்கை என்பது காலம் காலமாக நிலையற்றதாகவே இருந்து கொண்டிருக்கிறது. காரணம், பரஸ்பரம் நம்பிக்கையின்மை. இந்த விஷயத்தில் விஜய் மிகவும் பக்குவப்பட்டவராக இருக்கிறார். குடும்பம் எனும் வண்டியின் அச்சாணியே ஒருவர் மீது மற்றவர் வைக்கும் நம்பிக்கைதான் என்பதை வெகு அழகாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *