Articles

“மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தொடர்

By  | 

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்ததை அடித்தளமாகக்  கொண்டு தமிழக மக்கள் மனங்களில் அம்மாவாக திகழும் செல்வி ஜெயலலிதா ஜெயராம், அவர்கள்  16-06-2016 அன்று  நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள ஆர்.கே நகரில் போட்டியிட்டு 134 இடங்கள் ,86474 வாக்குகளை பெற்று வெற்றி கண்டத்தை தொடர்ந்து மீண்டும் முதல்வர் ஆனார்.

1984 ஆம் ஆண்டு இவரது அரசியல் ஆசான்  எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியிலிருந்த வேளை சட்டமன்றத் தேர்தல் நடைப்பெற்றது . அப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் பிரசாரம் எதிலும் கலந்து கொள்ளாது மாபெரும் வெற்றி வாக்குகளை பெற்று மீண்டும் முதல்வர் ஆனார். எம். ஜி. ஆர் அதன் பிறகு தற்போது (32 வருடங்களுக்குப் பின்னர் )2016 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியிலிருந்த அ.இ.அ.தி.மு.க (அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்) மீண்டும்  ஆளுங்கட்சி அந்தஸ்த்தைப்  பெற்று ஜெயலலிதா முதல்வர் பதவியை தக்கவைத்தக் கொண்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் தேர்தல் காலம் வந்தாலே இவர்  வெல்வாரா,  அவர் வெல்வாரா என்று கலந்து கணிப்பிட்டு குழம்பித் தவிக்கும் மக்கள் இந்தத் தேர்தலில் ஜெயாதான்  வருவார் என அறுதியிட்டுக் கொண்டனர் . அதுவே அவரது வெற்றியையும்  உறுதியிட்டது.

1977-1980 வரை எம்.ஜி.ஆர்,  அ.இ.அ.தி.மு.க வின் தலைமையில் ஆட்சியமைத்தார். அதன் பின்னர்1980 ஆம் ஆண்டு பெப்ரவரி தொடக்கம்  ஜூன்  வரை குடியரசு தலைவர் ஆட்சியும் நிகழ்ந்தது. 9 ஜூன் 1980 முதல் 24 டிசம்பர் 1987 வரை  2 முறை தொடர்ந்து முதல்வராக பதவியில் இருந்ததுடன்  மரணத்தையும் சந்தித்தார்.  அவர் மரணிக்காமல் இருந்திருந்தால் அடுத்த ஆட்சியும் அவரது அ.இ.அ.தி.மு.க தலைமையிலேயே அமைந்திருக்கும்  என்பது ஒருபுறமிருந்தாலும் 3 முறை முதல்வராக இருந்ததன் அரசியல்  ஆசானின் டாக்கட்டை இம்முறை இரண்டு மடங்கில் ஜெ முறியடித்துள்ளார்.

தான்  அடைந்த வெற்றி தமிழக மக்களின்  வெற்றி என்பதைப் வெளிக்காட்டுவதைப்  போல முதலமைச்சரின்  பதவியேற்பு விழா சென்னை பல்கலை நுற்றாண்டு விழா அரங்கில் நடந்தேறியது.

கடந்த 23.05.2016 அன்று தமிழகமே பேணர் (Banner) கலாசாரத்தை ஒழித்து விழாக்கோலம்  பூண்டிருந்தது. வீதியின் இரு மருங்கிலும் மக்கள் ஆரவாரமாய் சூழ்ந்திருந்து முதல்வரை வரவேற்றனர்.

அவரை ஏற்றி வந்த வாகனத்தின் மீது வண்ண மலர்களை துவி ஆனந்தமாய்  கொண்டாடினர் . அ.தி.மு.க கொடி வடிவிலான வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன . மேலும்  பல வாத்தியக் கருவிகள்  முழங்க ஜெயலலிதா வரவேற்கப்பட்ட காட்சி தமழக மக்கள் முதல்வர்  மீது கொண்டுள்ள பற்றை பறைச்சாற்றின.

ஆறாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதாவும் அவருடன் 28 அமைச்சர்களும் தமிழக ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் ஆண்டவன்  பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போது “நான் சொன்னதைச் செய்தேன்.… சொல்லாத பலவற்றையும் நான் செய்துள்ளேன்” என்று ஜெயலலிதா கூறிய வார்த்தைகளும் வாக்குறுதிகளும் பலரது விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சுக்களுக்கும் ஆளாயின.

நான் என்ற பேச்சில் ஆணவமும் அகங்காரமும் கலந்திருக்கிறது.. வாக்குறுதிகள்  வழங்குவதோடு சரி சொன்ன  எதனையும் அம்மா செய்ததில்லை செய்யப்போவதுமில்லை என கலைஞர்  மு.கருணாநிதியை தலைவராகக் கொண்ட அ.தி.மு.க (திராவிட முன்னேற்ற  கழகம்) வினரும் அம்மாவுக்கு வயதாகிவிட்டது இனி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டியதுதானே என நடிகர் விஜயகாந்தை தலைவராகக் கொண்ட தே.மு தி.க (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) வினரும் இவரை எப்படியாவது எந்த வழக்கிலேனும் சிக்க வைத்து வீழ்த்திவிட வேண்டும் என வேறு பல கட்சிகளும் அரசியல்  எதிரிகள்…  இப்படி பல எதிர்ப்புக்கள்  தன்னை நோக்கி வந்த போதும் எதற்குமே அசராது சேலை கட்டிய சிங்கமாய் வீர நடைப்போட்டார்.

‘சொன்னீங்களே செஞ்சீங்களா’ என இவரை தனியார் ஊடங்களுடாக கேலிக்குள்ளாக்கியவர்களுக்கு இவர் வைத்த செக் பதவியேற்ற அன்றே பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணச் சலுகை  ,திருkண உதவித் திட்டம், நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை, மதுபான கடைகளின் பாவனை நேரம் குறைப்பு ஆகிய 5 கோப்புகளில் கையொப்பமிட்டார். இதைப் போல இன்னும் பல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றுவார் என தமிழக மக்கள் இதன் மூலம் புது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரமாய்  திகழ்ந்த ‘அம்மு ‘ அரசியலில்  சிம்மாசனம் போட்டு அம்மாவாக உட்காந்திருப்பது எப்படி என்று பலரும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

ஒரு சினிமா நடிகை அதுவும் இப்படிப்பட்ட கவர்ச்சி நடிகை அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது என இதுவரை முகம்  சுழித்து தூற்றியவர்களும்கூட ” பெண் என்றால் இவரைப் போல தான் இருக்க வேண்டும்  என்னவொரு திறமை சாதித்துவிட்டாரே ” என வாய் பிழந்து அதிசயிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க கட்சியை இன்று வரை கட்டி காத்து வருகிறார் என்றால் அது மிகையாகாது .

எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப்பின்னர் இரா .நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சரானார். அப்போது இவருடன் இணைந்திருந்த சத்யா மூவிஸ் சினிமா பட நிறுவனத்துக்கு சொந்தகாரரரும்  அரசியல்வாதியுமான ஆர்.எம் வீரப்பன் எம்.ஜி.ஆரின் மனைவியாரான ஜானகி இராமசந்திரனை முதலமைச்சராக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி ஜானகி அம்மாள்  முதல்வராக 7 ஜனவரி 1988 அன்று பதவியேற்றார் . அவரது ஆட்சிகாலம்  வெறும் 27 நாட்கள் மட்டுமே  நீடித்திருந்தது.

இந்த விடயத்தில் ஆர்.எம் வீரப்பனுடன் இருந்த கருத்து முரண்பாட்டால் நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.

அதன்  பின்னர் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கினர் .அப்போதுஅ.திமு.க ஆட்சியின் காரணமாக ஜானகியின் தலைமையில் ஒரு பிரிவாகவும் தொண்டர்களின்  விருப்பத்திற்கிணங்க ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு பிரிவாகவும் இயங்கி கொண்டிருந்தது. பின்னரே மு.கருணாநிதி முதல்வரானதும் அ.தி.மு.க கட்சி சார்ந்த மொத்தப் பொறுப்பும் ஜெ.யின் வசம் வந்தது என்பதும்  வரலாறு.

அ.தி.மு.க வின் பொதுச்செயலாளரான ஜெ  தற்போது அக்கட்சியின் தலைவராகவும் விளங்குகிறார்.  பிளவுப்பட்டு முடிவை சந்திக்கவிருந்த அ.தி.மு.க இன்று ஆட்சியில் தொடர்ந்து நிலைப்பெறுவதற்கு முக்கிய காரணம் ஜெயாவின்  விடாமுயற்சியே இவருடைய  காலத்தக்குப்  பின்னும் அ.தி.மு.க கட்சி தொண்டர்களின் பங்களிப்புடன் திறம்பட இயங்கும் என்பது முதல்வரின் நிதர்சனம்.

தலையை பணிக்காமல் கைகளால் மட்டுமே வணக்கம் தெரிவிக்கும் வித்தையைக் கண்டு வியக்காதவர் எவரும் இல்லை. சினிமாவில் நடிக்கும் காலத்தில் இவர் அணியாத ஆடைகளே இல்லை ஆனால்  தற்போது ஒற்றை கரையில் தனி  நிறப் புடைவைகளை தவிர  வேறேந்த ஆடைகளையும் அணிவதில்லை இருந்தும் அழகு, அறிவு,கல்வி, தைரியம், விடாமுயற்சி, வற்றாத தன்னம்பிக்கை அவரை இன்றும் அடையாளமிடுகின்றன.

நடிகை என்ற பார்வையை ‘ அம்மா ‘ என்ற ஸ்தானத்தை கொண்டு செல்ல அவர் பாடுப்பட்டாரா… அல்லது தானாக அப்படியே நிலை உருவானதா… அல்லது அதிர்ஷ்டமா என்றே இவரின்பின்புலத்தை அறியாத பலரும் நினைப்பார்கள் உண்மையில் இவர் கடந்து வந்த பாதையில் வெற்றிகளும் பாராட்டுகளும் வந்து குவிந்தாலும் பள்ள மேடு ஏற்ற இரக்கம், கரடு முரடுகளையும் சந்திக்காமல் இல்லை.

தொடர்ந்து பேசுவோம்……

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *