Cinema

விஜய் நடிக்கும் 62 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

By  | 

இளையதளபதி விஜய் நடிக்கும் 62 வது படத்தில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது!!

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை அடுத்து நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஜய் 62 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விஜய்- கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தின் தலைப்பிற்கு ’சர்க்கார்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இத்திரைப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு பரிசளிக்கும் விதமாக நேற்று மாலை 6 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்திற்கு “சர்கார்” என பெயரிடப்பட்டு விஜய் மாஸ் ஸ்டைலில் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *