Interview

கைவினைக் கலைஞர் மரினா இவாஞ்சலினாவுடனான ஓர் சந்திப்பு

By  | 

கணினி, கைப்­பேசி, ஐபேட், லப்டப் என நவீன தொழில்­நுட்ப யுகத்தில் உழலும் சமு­தா­யத்­திற்குள் நாம் வீசி எறியும் பொருட்­களை கொண்டு உருவம் கொடுத்து பெண் சமு­தா­யத்­திற்கு எடுத்­துக்­காட்­டாக வலம் வந்­து­கொண்­டி­ருக்கும் யாழ்ப்­பாணம் அரி­யாலை பூம்­பூ­காரைச் சேர்ந்த மரினா இவாஞ்­சலின் (வயது 64) என்­ப­வரை மித்­திரன் வாச­க­ருக்­காக சந்­தித்­த­போது…

ஆர்­வமும் உழைப்பும் கொஞ்சம் படைப்­புத்­தி­றனும் இருந்தால் வயது ஒரு பொருட்டே இல்லை என்­ப­தற்கு கைவினைக் கலைஞர் மரினா இவாஞ்­ச­லினா உதா­ர­ண­மா­கவும் கணினி, கைத்­தொ­லை­பேசி என்று நவீன யுகத்தில் இருக்கும் இன்­றைய இளைய சமு­தா­யத்­துக்கு எடுத்­துக்­காட்­டா­கவும் விளங்­கு­கிறார்.

இலங்­கையில் மட்­டு­மன்றி சீனா­விலும் தமது கைவினை உற்­பத்திப் பொருட்­களை காட்­சிப்­ப­டுத்தி அவற்றை விற்­ப­னையும் செய்து வரு­கின்றார்.
தொலைத்­தொ­டர்பு சாத­னங்­க­ளுடன் சதா பொழுதைக் கழிக்கும் இளைய சமு­தாயம் பொது நோக்கம் இல்­லாமல் சமு­தாய சிந்­த­னை­யில்­லாமல் இருப்­பது வேத­னை­யான விடயம் எனக் கூறும் அவர், தனது முயற்­சிகள் ஊடாக தன்­னு­டைய கிரா­மத்தில் உள்ள பெண்­களை உள்­வாங்கி விரைவில் மண்­பாண்ட தொழிற்­சா­லை­யொன்றை உரு­வாக்க போவ­தாக கூறு­கின்றார். அதன் மூலம் அப்­பெண்­களை சமு­தா­யத்­திற்கு எடுத்­துக்­காட்­டான முன்­மா­திரிப் பெண்­க­ளாக உரு­வாக்­கப்­போ­வ­தாக உறு­தி­யுடன் செயற்­பட்டு வரு­கின்றார். இதற்­காக கடன் வச­தி­யையும் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கிறார்.

எனது ஆரம்ப காலம் முதல் பல்­வே­றுப்­பட்ட துன்­பங்களை சந்­தித்­த­போதும் என்னால் சாதிக்க முடியும் என்ற விடா­மு­யற்­சிதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்­தி­யது. பாட­சாலைக் கல்­வியை முடித்­த­பின்னர் குடும்பம், பிள்­ளைகள் என்று இருந்­து­வி­டாது பல தொழில் முயற்­சி­களை மேற்­கொண்டேன்.

இடப்­பெ­யர்­வுகள் என பல துன்­பங்­களை சந்­தித்­த­போதும் தொழில் முயற்­சிக்­கான பயிற்­சி­களை பெற்­றுள்ளேன்.குறிப்­பாக மரு­த­நார்­மடம் பயிற்சி கல்­லூ­ரியில் நெசவுக் கைத்­தொழில் கற்றேன். அதனைத் தொடர்ந்து காரை­ந­கரில் நெசவு ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­றினேன். இதன் பின்னர் திரு­மணம் முடித்து 2 பிள்­ளை­க­ளுடன் இடப்­பெ­யர்­வுக்குள் சிக்கி பல்­வேறு வகை­யான துன்­பங்­க­யையும் துய­ரங்­க­ளையும் சந்­தித்தேன். எனினும், துவ­ள­வில்லை. கொழும்பில் இருந்­த­போது ஆடைத் தொழிற்­சா­லையில் ஆண்கள், பெண்­க­ளுக்­கான தையல் பயிற்­சி­களை பெற்றேன்.

2010ஆம் ஆண்டு எமது கிரா­மத்­திற்கு மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து எனது கிரா­மத்தில் குடி­யே­று­வ­தற்­காக காணி­களை துப்­ப­ரவு செய்து பதி­வு­களை மேற்­கொண்டு 2013ஆம் ஆண்டு மீள் குடி­ய­மர்ந்தேன்.

கைவே­லையில் உள்ள ஆர்வம் கார­ண­மாக கட­தா­சியில் கைவே­லை­களை செய்யத் தொடங்­கினேன் . எனது கைவேலை பொருட்­களை முதலில் அம­ல­மரித் தியா­கிகள் சபை­யி­னரால் நடாத்­தப்­ப­டு­கின்ற சமா­தா­னத்­திற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான நிலை­யத்தின் அருட்­தந்­தை­யி­டமே காண்­பித்தேன். அவர் அதனை பெற்றுக் கொண்­டது மட்­டு­மன்றி பாராட்­டு­த­லையும் தெரி­வித்தார். அது­மட்­டு­மன்றி தனக்கு 50 கிறிஸ்மஸ் வாழ்த்து அட்­டை­களை செய்து தரு­மாறு கேட்டுக் கொண்டார். அன்று 50 ரூபா வீதம் 50 வாழ்த்து அட்­டை­களை செய்து கொடுத்தேன்.அதன் பின்னர் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற மகளிர் தினத்தில் எனது கைவே­லை­களை காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தி­யையும் பெற்­றுத்­தந்தார்.

அன்று தொடங்­கிய இந்த பணியை இன்றும் தொடர்ந்துகொண்­டி­ருக்­கின்றேன். அன்­றைய கண்­காட்­சியில் பலரும் எனது கைவே­லையை பார்­வை­யிட்­ட­துடன் பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்­தனர், உற்­சா­கப்­ப­டுத்­தினர். இது மட்­டு­மன்றி அன்று வருகைதந்­தி­ருந்த மகளிர் அமைப்­புக்கள் அந்த திட்­டத்தை ஊக்­கப்­ப­டுத்­தி­ய­துடன் பெண்­க­ளுக்கு இதனை பயிற்­று­விக்­கவும், தொழில் முயற்­சி­யா­ள­ரா­வ­தற்கு எவ்­வாறு பதி­வு­களை செய்­வது போன்ற ஆலோ­ச­னை­களை வழங்­கினர்.

இவ்­வா­றாக ஆரம்­பித்த எனது பயணம் கடந்த வருடம் சீனாவில் நடை­பெற்ற சர்­வ­தேச வர்த்­தக கண்­காட்­சியில் யாழ். மாவட்­டத்தில் இருந்து செல்­வ­தற்கு தெரிவு செய்­யப்­பட்டேன். அங்கு என்னால் கொண்­டு­செல்­லப்­பட்ட கைவேலை பொருட்கள் யாவும் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் இந்­தி­யா­விற்கு சென்று பயிற்சி ஒன்­றினை மேற்­கொண்டு வந்­துள்ளேன். இது மட்­டு­மன்றி அரச, அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், மகளிர் அமைப்­புக்கள் பாட­சா­லைகள், கிராம அபி­வி­ருத்தி சங்­கங்கள் ஆகி­ய­வற்றில் கைவே­லை­களை பெண்கள், மாண­வர்­க­ளுக்கு கற்­பித்து கொடுப்­ப­தற்­காக அழைக்­கி­றார்கள். நானும் சென்று வரு­கிறேன்.

பல இடங்­களில் இடம்­பெற்­று­வரும் தொழிற்­சந்­தைகள், கண்­காட்சி கூடங்­க­ளுக்கும் சென்று எனது பொருட்­களை காட்­சிப்­ப­டுத்தி விற்­பனை செய்து வரு­கிறேன்.
என்­னிடம் பயிற்­சியை பெற்ற பலர் உள்­நாட்­டிலும் வெளிநாட்­டிலும் இத்­த­கைய தொழில் முயற்­சியை செய்­து­வ­ரு­கி­றார்கள். எனது உற்­பத்திப் பொருட்­களை இலங்கை மட்­டு­மன்றி சீனா, இந்­தியா, இலண்டன், கனடா போன்ற நாடு­க­ளிற்கும் அனுப்பி வரு­கிறேன். இலண்­டனில் உள்ள நம்­ம­வர்கள் இந்த பொருட்­களை ஆர்­வத்­துடன் பெற்றுக் கொள்­கி­றார்கள். மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­த­டவை எனது பொருட்­களை அனுப்பி வரு­கிறேன்.

திரு­மண அழைப்­பி­தழ்கள், பிறந்­தநாள் அழைப்­பி­தழ்கள், வாழ்த்து அட்­டைகள் இவை மட்­டு­மன்றி பென்­சில்கள் வைப்­ப­தற்­கான (கோல்­டர்கள்) எனப் பல­வ­கை­யான அலங்­காரப் பொருட்­களை செய்து வரு­கின்றேன். என்னால் கட­தாசி மூல­மாக அலங்­க­ரிக்­கப்­படும் திரு­மண அழைப்­பி­தல்­க­ளுக்கு அச்­சக வேலைகள் முடிந்­ததும் அதற்­கான கைவே­லை­களை செய்து கொடுப்­ப­தற்­கான வேலைகள் (ஓடர்கள்) வரு­கின்­றன.

இது மட்­டு­மன்றி எங்­கெல்லாம் சுய­தொழில் முயற்­சிக்­கான பயிற்­சிகள் வழங்­கப்­ப­டு­கி­றதோ அல்­லது பிர­தேச செய­லகம், மகளிர் அமைப்­புக்கள், சுய­தொழில் முயற்­சிக்­காக அழைக்கிறார்களோ அங்கு சென்று பயிற்சிகளை பெற்று வருகின்றேன். மட்பாண்ட பயிற்சி, சிரட்டை உற்பத்திப் பொருட்களுக்கான பயிற்சி, மெழுகுதிரி உற்பத்தி பயிற்சி, ஆடைகளை சலவை செய்வதற்கான சலவை கரைசலுக்கான பயிற்சி (சலவைத்லிக்கியுட்) பேன்றவற்றில் பயிற்சி பெற்றுள்ளதுடன் பல பயிற்சிகளை தொடர்ந்தும் பெற்று வருகின்றேன். இன்னும் இரண்டு மாதத்தில் எனது கிரா­ம­மான அரி­யாலை பூம்­பு­காரில் மண்­பாண்ட தொழிற்­சா­லையை உரு­வாக்­க­வுள்ளேன். எனது கிரா­மத்தில் உள்ள ஆர்­வ­மான பெண்­களை இணைத்து பயிற்­சி­களை வழங்கி ஆளு­மை­யுள்ள பெண்­க­ளாக உரு­வாக்­குவேன்’ என்கிறார்.

(எம்.நியூட்டன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *