Women Achievers

சாதனைப் பெண்: கவிக்குயில் சரோஜினி நாயுடு

By  | 

சரோ­ஜினி நாயுடு 13.02.1879 அன்று இந்­தி­யாவின் ஹைத­ராபாத் மாநி­லத்தில் ஒரு வங்­காள குலின் பிரா­மணக் குடும்­பத்தில் மூத்த மக­ளாகப் பிறந்தார். இவர் பிறந்த தினத்­தி­லேயே இந்­தி­யாவில் அனேக பெண்கள் மகளிர் தினத்தை கொண்­டா­டு­கி­றார்கள்.

சரோ­ஜினி தனது 12ஆவது வயதில் மெட்­ரி­கு­லேஷன் பரீட்­சையில், சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்தில், மாநில அள­வி­லேயே முத­லிடம் பெற்றார். பல்­வேறு மொழி ஆற்றல் கொண்ட இவர் உருது, தெலுங்கு, ஆங்­கிலம், பார­சீகம், பெங்­காலி என தன் வசம் கொண்­டவர் சரோ­ஜினி நாயுடு. ‘சரோ­ஜினி சட்­டோ­வத்­யாய’, ‘இந்­தி­யாவின் நைட்­டிங்கேல்’ என்ற பெயர்கள் கொண்டும் அழைக்­கப்­ப­டு­கிறார்.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மட­மையைக் கொளுத்­துவோம். வைய வாழ்வு தன்னில் எந்த வகை­யிலும் நமக்­குள்ளே தாதர் என்ற நிலை­மாறி ஆண்­க­ளோடு பெண்­களும் சரி­நிகர் சம­னாக வாழ்வோம் இந்­நாட்­டிலே….” என்று பார­தியார் கூறிய பெண்­ணாக வாழ்ந்து காட்­டிய பெண்­களில் ஒருவர் சரோ­ஜினி நாயுடு. இவரால் பல நற்­செ­யல்கள் ஆற்­றப்­பட்­டுள்­ளன. பெண் சமூ­கத்­துக்கு சிறப்­பா­கவும் முன்­மா­தி­ரி­யா­கவும் இருந்­துள்ளார். இவர் கவி­ஞ­ரா­கவும் சமூக ஆர்­வ­ல­ரா­கவும் திகழ்­வ­துடன் சிறு­முது அறி­ஞ­ராக, எழுத்­தா­ள­ராக, சுதந்­திரப் போரா­ளி­யாக பல துறை­களில் ஈடு­பட்­டுள்ளார்.

இவர் ஒருங்­கி­ணைந்த மாகா­ணங்­க­ளான ஆக்ரா மற்றும் ஓத்தின் முதல் ஆளு­ந­ராக 2 ஆண்­டுகள் பொறுப்பில் இருந்தார். அது மட்­டு­மல்­லாமல் இந்­திய மாநி­லத்தின் முதல் பெண் ஆளு­நரும் இவர்தான். இந்­திய தேசிய காங்­கி­ரஸின் முதல் பெண் தலை­வ­ரா­கவும் இருந்­துள்ளார். அர­சி­ய­லிலும் ஈடு­பட்டு பெண்­களின் அர­சியல் பங்­க­ளிப்­புக்கு வித்­தா­கவும் தூண்­டு­கோ­லா­கவும் இருந்த பெண் என்­பது நாம் அறியவேண்­டிய ஒன்றே.

அது­மட்­டுமா? சத்­தி­யா­கி­ரகப் போராட்­டத்தில் பங்­கு­பற்­றிய ஒரே பெண் என்ற பெரு­மையைக் கொண்ட இவர் “அச்­ச­மில்லை அச்­ச­மில்லை அச்சம் என்­பது இல்­லையே” என்று தன் வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்­தவர்.

மகாத்மா காந்தி மற்றும் மதன் மோகன் மால­வி­யா­வுடன் வட்ட மேசை மாநாட்டில் பங்­கு­பெற்றார். இத­னா­லேயே இவர் “இந்­தி­யாவின் நைட்­டிங்கேல்” என சிறப்­புப்­பெயர் கொண்டு அழைக்­கப்­ப­டு­கின்றார். மேலும் உத்­த­ரப்­பி­ர­தேச முதல் பெண் ஆளு­நரும் இந்­திய தேசிய காங்­கி­ரஸின் இரண்­டா­வது பெண் தலை­வ­ரா­கவும் செயற்­பட்டு வந்­துள்ளார். சரோ­ஜி­னியின் இல்­லற வாழ்க்­கையை நோக்­கினால், இவர் தனது 19ஆவது வயதில் மருத்­து­வ­ரான முத்­யாலா கோவிந்­த­ராஜு நாயுடு என்­ப­வரைக் காதல் திரு­மணம் செய்­து­கொண்டார். இத்­தி­ரு­மணம் சாதி­யிடை திரு­ம­ணங்கள் அனு­ம­திக்­கப்­ப­டாத கால­கட்­டத்தில் நடை­பெற்­றது.

சாதிக்கு எதி­ராக திரு­மணம் நடை­பெற்­றாலும் சரோ­ஜினி நாயு­டுவின் தந்தை முற்­போக்கு சிந்­த­னை­யாளர் என்­பதால் திரு­மணம் சிறப்­பாக நடை­பெற்­றது. 1915 – 1918 ஆண்­டு­க­ளுக்­கி­டையில் இந்­தியா முழு­வதும் இளைய சமு­தா­யத்தின் நல்­வாழ்வு, பணி­யாளர் நலன், பெண் கொடுமை, தேசிய பற்று குறித்து பல்­வேறு சொற்­பொ­ழி­வு­களை மேற்­கொண்­டுள்ளார். இவரின் கவிதைத் திற­மையை பிர­தி­ப­லிக்கும் கண்­ணா­டி­யாக பல கவி­தைகள் உதா­ரணம் காட்­டப்­ப­டு­கி­றது. அவற்றில்,
‘The Golden Threshold’, ‘The Bird of Time’, ‘Songs of Life, Death & the Spring’, ‘The Gift of India’ என்­பன சிறப்­பான கவிதை படைப்­பு­க­ளாக அமை­யப்­பெற்­றுள்­ளன.
“Shall Hope prevail where clamorous hate is rife, Shall Sweet love prosper or high dream have place, Amid the tumult of reverberant strife twixt ancient creeds, twixt race and ancient race, That mars grave, glad purpose of life, leaving no refuge save thy succoring face?” இது சரோ­ஜினி நாயு­டுவின் வரிகள்.

சரோ­ஜினி அவர்கள், “ஓர் எதிர்ப்பு ஏற்­பட்டால், நாம் வெளிப்­ப­டுத்த வேண்­டிய ஒரே ஒரு சுய­ம­ரி­யாதை இது. இன்று நிறை­வ­டையும். ஏனெனில், என்­னு­டைய உரி­மையே நியாயம்” என்று கூறு­கிறார். மேலும் “நீங்கள் வலி­மை­யா­ன­வ­ராக இருப்பின், வலிமை குறைந்த ஆண் அல்­லது பெண்­ணுக்கு பணி மற்றும் விளை­யாட்டு ஆகிய இரண்­டிலும் உதவி புரிய வேண்டும்” என்றும் கூறு­கிறார்.

மிக நீண்ட பய­ணங்கள், ஓய்­வற்ற அலைச்சல் கார­ண­மாக அவ­ரது உடல் நலம் கொஞ்சம் கொஞ்­ச­மாக சீர்­கு­லைந்­தது. 1949 மார்ச் மாதம் இரண்டாம் திகதி தனது அலு­வ­ல­கத்தில் பணி புரியும் நேரத்தில் அவர் உயிர் துறந்தார். “யாரும் எதுவும் பேச வேண்டாம். ஏதா­வது ஒரு பாடலைப் பாடு” என்று பணிப்­பெண்­ணிடம் கூறி­ய­துதான் அவ­ரது கடைசி வார்த்­தைகள். விடு­த­லைக்­காக ஏங்­கிய இந்தக் குயில், விடை­பெற்று உலகை விட்டு பிரி­யும்­போது விரும்­பி­யது ஒரே ஒரு பாட­லைத்தான். அவரைத் தவிர வேறு யாருக்கு ‘கவிக்­குயில்’ என்ற பெயர் பொருந்தும்?

இன்­றைய நவீன இலக்­கிய உலகில் கவ­னிக்­கத்­தக்க அளவு பெண் கவி­ஞர்கள் பர­வ­லாக இயங்­கிக்­கொண்டும் சம­கால சமூக சிக்­கல்­களை துணிச்­ச­லுடன் எதிர்­கொண்டு தங்கள் சிந்­த­னை­களைப் பதிவு செய்­த­ப­டியும் இருக்­கின்­றார்கள். தமிழ் இலக்­கிய வர­லாற்றில் தேசிய அளவில் மகா­கவி பார­தியார், இர­வீந்­தி­ரநாத் தாகூர், வள்­ளத்தோள் எனப் பலர் அறி­யப்­பட்­டாலும் பெண் கவி­ஞர்­களில் அதே­ய­ளவு கவ­னிக்­கப்­பட்­டவர் என்று சொன்னால் அது கவிக்­குயில் சரோ­ஜினி நாயுடு மட்­டுமே. இவ்­வா­றான பெண் கவிக்குயிலை இழந்தது எம் துரதிர்ஷ்டமே.

லோகநாதன் மேனகா,
டிக்கோயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *