Fashion

நம் நாட்டு பெண்களின் ஆடைகள் சொல்லும் கதை

By  | 

ஒரு நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பிரதான காரணியாக ஆடை விளங்குகிறது. அதில் பெண்களின் உடை மிக முக்கியம் வாய்ந்தது ஆகும். எமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள சேலை, ஒசரி மற்றும் சுடிதார் ஆகிய இனங்களுக்கிடையிலான வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றது.

சேலை

 

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு என்ற பாடலுக்கு ஏற்ப பெண்களின் அழகை மெருகூட்டுகிறது சேலை. இலங்கையில், சேலையானது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. திரௌபதியின் முடிவில்லாத வஸ்த்திரம் என போற்றப்படட்டு ஆதி காலத்தில் இந்தியர்கள் மத்தியில் பிரபலமான சேலையானது, தற்போது இந்தியாவில் மாத்திரமன்றி இலங்கை பெண்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான ஆடையாக மாறியுள்ளது. சேலை அணிவதானது, இந்தியர்களால் எமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கலாசாரத்தின் அடிப்படையில் எமது நாட்டு பெண்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

இந்திய பெண்களின் சேலை கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டு கால வரலாறு கொண்டதாகும். இந்திய பெண்களின் ஆடைகளில் ஒன்றாக பிரபலமடைந்த சேலையானது, இன்றைய காலத்தில் நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை பெண்களின் நிரந்தர பாவனையாக உருமாறியுள்ளது. தென்னிந்தியாவின் செல்வாக்கின் காரணமாக கண்டி யுகம் தொட்டு சிங்கள பெண்களும் சேலை அணிந்துள்ளனர். இதேவேளை, பலவித நவீன பாணியில் அணிவதற்கும் சேலை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அன்று முதல் இன்று வரை சேலை இலங்கை சமூகத்தின் மத்தியில் பிரபலம் வாய்ந்தது போலவே முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இந்த நவீன காலத்தில் நவநாகரீக ஆடை முறைக்கு ஏற்ப சேலையை பயன்படுத்திக் கொள்வதையும் காணக் கூடியதாக உள்ளது.

ஒசரிய

17ஆம் நூற்றாண்டில் சிங்களவர்களின் ஆடை பயன்பாடானது குலத்தை அடிப்படையாகக் கொண்டே விளங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி உன்னதமாக குலத்தினர் தங்கம், வெள்ளி, முத்து, கற்கள் பதித்த ஆபரணங்களுடன் கூடிய ஆடம்பரமான பாணியில் உடை அணிவர். சாதாரண மக்கள் முழங்காலில் இருந்து சற்று கீழே பாதி மூடப்பட்ட வகையில் உடை அணிவர்.

மேலைத்தேய மன்னர் காலத்திலிருந்தே ஒசரி பாவனையில் இருந்தமைக்கு சாட்சிகள் உள்ளன. இந்திய இளவரசிகளின் உடை பாணியை அடுத்து கண்டிய இராச்சியத்தினரின் உடை பாவனை நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன். சேலை மற்றும் ஒசரிக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் சேலை வகைகளை ஒசரியாக வடிவமைத்துக் கொள்ள சிங்கள பெண்கள் பழகிக் கொண்டுள்ளனர்.

சுடிதார்

கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஆடையாக சுடிதார் விளங்குகிறது. இது பொதுவாக பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆடை என்ற போதிலும், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் கிரேக்க மற்றும் ஒட்டோமான் துருக்கியர்களின் அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட பால்கன் ஆகிய பகுதிகளில் பாவனையில் இருந்துள்ளது.

பழங்காலத்திலிருந்து சேலை முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகக் காணப்பட்டதுடன், சேலையின் முந்தானையால் தலையை மூடி, தங்களது கலாசாரத்தையும் பாதுகாக்கும் வகையிலும் செயற்பட்டனர்.

உடல் அழகை மெருகூட்டும் வகையில் ஆடை அணிதல் சேலை, ஒசரி மற்றும் சுடிதார் போன்ற ஆடைகளின் மூலம் உடலின் அழகை மெருகூட்டி காட்டுகின்றன.

சேலை அல்லது ஒசரியின் அழகை மெருகூட்டுவதற்கு அதற்கு மிகவும் பொருத்தமான சேலை ரவிக்கை அணிதல் வேண்டும். சேலைக்கான ரவிக்கை உடம்புடன் ஒட்டி காணப்படுவதே சேலைக்கான ரவிக்கைக்கும், சாதாரண மேலங்கிகளுக்கும் இடையிலான வித்தியாசம்.

இவ்வாறு அணிவதன் மூலம் உடலின் வடிவம் அழகாக வெளிக்காட்டப்படுவதுடன், சேலையின் அழகையும் மேலும் மெருகூட்டிக் காட்டும். தற்காலத்தில் நவநாகரீகத்திற்கு ஏற்ற வகையில் நவீன வடிவங்களில் ரவிக்கைகளை தைத்துக் கொள்ள முடியும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *