Cookery

வீட்டில் பீட்சா தயாரிப்பது எப்படி?

By  | 

தேவையான பொருட்கள்

  • மைதா – 5 கப்
  • ஈஸ்ட் (விரைவில் நொதித்து போகும் பொருள்) – 15 கிராம்
  • உப்பு – 2 டீ ஸ்பூன்
  • சுடு தண்ணீர் – 2 கப்
  • காலிபிளவர் – 1 கப் (நறுக்கியது)
  • கத்தரிக்காய் – 1/4 கப் (நறுக்கியது)
  • வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
  • கேரட் – 1/4 கப் (நறுக்கியது)
  • காப்ஸிகம் (மிளகாய்) – 1/4 கப் (வெட்டியது)
  • கீரை – 1/2 கப் (நறுக்கியது)
  • தக்காளி (விதை நீக்கப்பட்டது) – 1 (நன்றாக நறுக்கியதும் கூட)
  • பீட்சா சாஸ் – 1/2 கப்
  • லெமன் ஜூஸ் – 2 டீ ஸ்பூன்
  • கரம் மசாலா பவுடர் – 1 டீ ஸ்பூன்
  • சாட் மசாலா தூள் – 1/4 டீ ஸ்பூன்
  • பூண்டு – 1 டீ ஸ்பூன் (அரைத்தது)
  • ஆலிவ் ஆயில் – 1/2 டீ ஸ்பூன்
  • சீஸ் – கையளவு வெட்டப்பட்டது (தேவைப்பட்டால் மட்டும்)
  • பிளாக் ஆலிவ் – கொஞ்சம் (தேவைப்பட்டால் மட்டும்)

செய்முறை:

  • 1. ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, மைதா, ஈஸ்ட் மற்றும் உப்பை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • பத்து முதல் பன்னிரெண்டு நிமிடம் வரை நன்றாக பிசைந்துக்கொண்டு மாவின் மென்மையை சரிப்பார்த்து கொள்ளவும்.
  • அந்த பிசைந்த மாவை பந்து போல் உருட்டிக்கொண்டு, மெல்லிய கவர் கொண்டு இறுக மூடிக்கொள்ளுங்கள்.
  • பத்து நிமிடங்களுக்கு வைத்திருந்தால் பீட்சா செய்வதற்கான மாவு ரெடி.
  • முதலில் பீட்சா சாஸ், பூண்டு, கரம் மசாலா பவுடர், சாட் மசாலா தூள், மஞ்சள் பவுடர் மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவற்றை மிக்ஸ் செய்துக்கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் பிடிக்காத (நாண் ஸ்டிக்) கடாயில் எண்ணெய்யை சுடவைக்க வேண்டும்.
  • அதில் காலிபிளவர், கத்தரிக்காய், கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக கிண்டி கொள்ள வேண்டும்.
  • சாஸ் மிக்ஸரை பீட்சா மாவில் தடவிக்கொள்ள வேண்டும். கொஞ்சமாக தனியாய் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும்.
  • அந்த சாஸின் மேலே நறுக்கிய காய்கறி மற்றும் தக்காளியை தூவி கொள்ளுங்கள்.
  • மீதம் வைத்திருந்த சாஸை காய்கறியின் மேலே ஊற்றிக்கொள்ளுங்கள்.
  • அப்படியே அதை எடுத்து ஓவனில் வைத்து பத்து நிமிடங்களுக்கு காத்திருக்க வேண்டும். ஓவன் விட்டு வெளியில் எடுத்து பார்த்தால், அதன் தன்மை மொறுமொறுவென தங்க பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • சூடான பீட்சா இதோ ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *