Cookery

குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்..!

By  | 

தேவையான பொருட்கள்

  • ஸ்வீட் கார்ன் – ஒன்றரை கப்
  • துருவிய சீஸ் (பாலாடைக்கட்டி) அரை கப்
  • ரவா – ஒரு கப்
  • கொத்துமல்லித் தழை – சிறிது
  • வெங்காயம் – ஒன்று
  • கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
  • சாட் மசாலா – ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
  • மைதா அல்லது கோதுமை மாவு – 2 தேக்கரண்டி
  • பால் – 2 கப்
  • பிரெட் க்ரம்ஸ் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை
1. முதலில் ரவையை பொன்னிறம் வரும் வரை வறுத்தெடுத்து, பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை ரவையை வேக விடவும்

2. இதனுடன் பொடியாக நறுக்கிய கார்ன், வெங்காயம், சீஸ், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு மற்றும் கொத்துமல்லித்தழை போன்றவற்றை சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளவும்

3. ஒரு பாத்திரத்தில் மைதா அல்லது கோதுமை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்; பின்னர், பிசைந்து வைத்துள்ள கார்ன் கலவையை எடுத்து, ரோல் போல உருட்டி, மைதா அல்லது கோதுமை மாவுக்கரைசலில் தோய்த்தெடுக்கவும்

4. இவ்வாறு தோய்த்தெடுத்த ரோலை, பிரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்த பின், வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், அதில் ரோலினைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்

5. இதேபோல் மீதமுள்ள கலவையிலும் ரோல்களைத் தயார் செய்து, பொரித்தெடுக்கவும்

அவ்வளவு தான், குழந்தைக்கு பிடித்த, சுவையான, சத்தான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் ரெடி! இப்பொழுது இதை குழந்தைக்ளுக்கு நீங்கள் பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *