Beauty

பிஸியான அம்மாக்களுக்கான அழகு குறிப்புகள்

By  | 

பேபி ஆயில்
பேபி ஆயில் உங்களின் தோற்றத்தை மேம்படுத்தும். அது மட்டுமில்லாமல் இது வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. காலை நேரத்தில் முழு அலங்காரம் செய்ய நேரம் இல்லை எனில், சிறிது பேபி ஆயிலை உங்கள் கன்னங்களில் தடவிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் முகம் நாள் முழுவதும் பிரகாசமாக இருக்கும். விளம்பர படங்களில் வரும் மாடல்களும் இதை தான் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த எண்ணெய் உங்கள் சருமத்தில் கடினமாக செயல்படாது. இது சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

கண் வீக்கம்
இரவு நேரம் கழித்து தூங்கியதால், உங்கள் கண்கள் வீக்கத்துடன் உள்ளதா? கவலைப்படாதீர்கள். இதற்கான தீர்வு உள்ளது. நீங்கள் தயாராவதற்கு முன், ஒரு சிறிய கரண்டியை உங்கள் பிரிட்ஜ் freezerஇல் வையுங்கள். சிறிது நிமிடங்கள் கழித்து அதை எடுத்து வீங்கிய கண்களில் ஒத்தடம் கொடுங்கள். இதனால், உங்கள் கண்களின் வீக்கம் குறைந்துவிடும். கண் வீக்கத்தை குறைக்க மற்றொரு வழியும் உண்டு. உங்கள் தலையை சற்று உயரமாக வைத்து படுக்க வேண்டும். இதற்கு சற்றே உயரமான தலையணையை பயன்படுத்தலாம். அதே சமயம் உங்கள் கழுத்தில் அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

 நரை முடி
வேலை, குழந்தைகளை கவனித்தல், வீட்டை கவனித்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். இதனாலும் நரை முடி ஏற்படும். திடீரென்று காலையில் நரை முடி முளைத்திருக்கும். அதற்கு சாயம் பூச உங்களுக்கு நேரம் இருக்காது. இதற்கு உடனடி தீர்வாக நீங்கள் eye shadowவை பயன்படுத்தலாம். கருப்பு நிற eye shadowவை உங்கள் நரை முடிகளில் தடவிக்கொள்ளுங்கள். இது உங்கள் முடிகளுக்கு சாயம் பூசும் வரை தாக்குப்பிடிக்கும்.

 Foundation கிரீம்
சில நேரங்களில் உங்களின் foundation கிரீம் தீர்ந்து போயிருக்கும். நீங்கள் வேலைக்கு செல்லும் அவசரத்தில் தான் அது உங்களுக்கு தெரிய வரும். கடைசி நேரத்தில் உங்களால் புதிய கிரீமை தயார் செய்ய முடியாது. இந்த மாதிரி நேரங்களில் உடனடி கிரீம் ஒன்றை உங்களின் Concealer மற்றும் Moisturizer ஆகியவற்றை கொண்டு தயார் செய்து விடலாம். சம அளவில் Concealer மற்றும் Moisturizer எடுத்து கலந்துகொள்ள வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் அளவிற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவும். இவற்றை கலந்து முகத்திற்கு தடவவும். நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் foundation கிரீம் போலவே இதுவும் வேலை செய்யும்.

ஷேவ்
பல நேரங்களில் உங்களின் வேலை பழு காரணமாக உங்களின் உடலில் முடிகள் நீளமாக வளர்ந்திருப்பதை கவனிக்காமல் விட்டிருப்பீர்கள். இது நீங்கள் கிளம்பும் அவசரத்தில் தான் தெரியும். நீங்கள் ஏற்கனவே குளித்திருப்பதால் ஷேவ் செய்ய வேண்டுமா என்று தோன்றும். அதே சமயம் அப்படியே வெளியே செல்லவும் மனது வராது. கவலைப்படாதீர்கள்; இதற்கும் உடனடி தீர்வு உண்டு. Cold Cream! இது உங்கள் முடிகளை நீக்குவதோடு மட்டுமில்லாமல் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தையும் வழங்குகிறது. இதனால் நீங்கள் மறுபடியும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பெண்களே, உங்களுக்கு கடவுள் பரிசாக தந்த சிறந்த அணிகலன் உங்களின் புன்னகை தான். நீங்கள் நாள் முழுவதும் சிறப்பாக உணரவும் தோற்றமளிக்கவும் எப்போதும் ஒரு புன்னகையுடன் இருப்பதே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *