Cinema

உலக நாயகனுடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்

By  | 

‘இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996, மே 9ல் வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தில் கமல் தந்தை – மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகைகள் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் 2-ம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *