Women Achievers

சாதனைப் பெண்: மலாலா யூசப்ஃசாய்

By  | 

பொது­வாக பெண்கள், சமூ­கத்தில் பல பிரச்­சி­னை­ க­ளுக்கு முகம்கொடுத்து வர வேண்­டிய சூழ்­நிலை காணப்­ப­டு­கி­றது என்­பது பல­ரது கருத்து. அவ்­வா­றான பிரச்­சி­னை­களை சமா­ளித்து பல பெண்கள் வாழ்க்­கையில் வெற்றி கண்­டுள்­ளனர். அனைத்து துறை­க­ளிலும் பெண்­களின் ஆதிக்கம் மேலோங்கி காணப்­ப­டு­வது சிறப்­பான விட­ய­மாகும். அந்த வகையில் மலாலா யூசப்ஃசாய் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்­மணி. இவரை உலகம் அறியும்போது இவர் ஒரு சிறு­மி­யாக இருந்தார் என்­பதே உண்மை.

பாகிஸ்தான் நாட்டில் மிங்­கோரா எனும் சிற்­றூரில் வசித்த மாணவி; பெண்கள் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்­தவர். குறிப்­பாக பெண் கல்வி முக்­கி­யத்துவம் பற்­றிய செயற்­பா­டு­க­ளுக்­காக அறி­யப்­ப­டு­பவர். பெண்­களின் கல்­விக்­காக தலி­பான்­களால் விதிக்­கப்­பட்ட தடையை மீறி பாட­சாலை சென்ற மலா­லாவை 2012 ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம் 09ஆம் திகதி தலிபான் அமைப்பு சுட்டுக் கொல்ல முயன்­றது. படு­கா­ய­ம­டைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மலா­லாவின் பிஞ்சி முகத்தை யாருமே பார்த்­தி­ருக்க முடி­யாது. 14 வயது சிறுமி கல்வி எனும் கடலை கற்க துணிந்ததன் விளைவு இவ்­வா­றா­கு­மென யாருமே எண்ணிப் பார்த்­தி­ருக்க முடி­யாது.

இவ்­வாறு கல்­வியை வேண்டி உயிர் பிழைத்து வந்த மலாலா அனைத்து நாட்டில் உள்ள மாண­வர்­க­ளுக்கும் சிறந்த முன்­னோ­டி­யாக திகழ் ­கிறார் என்­பது பெண் இனத்­துக்கு பெருமைவாய்ந்த விட­ய­மாகும். 2013ஆம் ஆண்டு மலாலா தனது16 வயது பிறந்­த நாள் அன்று ஐக்­கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு “உலகம் முழு­வதும் உள்ள குழந்­தைகள் கல்வி கற்க வேண்டும்” எனக் கேட்­டுக்­கொண்டார். இந்­நி­கழ்வு நடந்த நாளை ஐக்­கிய நாடுகள் சபை “மலாலா தினம்” என குறிப்­பிட்­டுள்­ளது. இச்­சி­றப்பு மலா­லா­வுக்கு மட்­டு­மல்ல பெண் கல்வி உரி­மைக்­காக போராடும் அனைத்து பெண்­க­ளுக்கும் பொருந்­தக்­கூ­டி­ய­தாகும்.

பல நாடு­களில் கல்வி கற்­ப­தற்­கான வச­திகள் நன்­றா­கவே காணப்­ப­டு­கி­றது. அதிலும் குறிப்­பாக இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் இல­வசக் கல்வி அளிக்­கப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் சில சிறு­வர்கள் இதை உணர்ந்து கல்வி கற்­பதை காண முடி­வ­தே­யில்லை. பல சிறுவர், சிறு­மிகள் பாட­சாலை கல்­வியை பாதி­யி­லேயே விட்­டு­விடும் நிலையை நம் சமூ­கத்தில் காணக்­கூ­டி­ய­தா­கவே உள்­ளது. காரணம், கல்­வியின் முக்­கி­யத்துவம் பற்­றிய போதிய அறிவு அவர்­களின் பெற்­றோர்­களால் சரி­யான முறையில் கொடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு இருக்­கையில் பெண்­க­ளுக்கு கல்வி மறுக்­கப்­பட்ட பிர­தே­சத்தில் பிறந்து வாழ்ந்து கல்வி கற்க முயன்ற மலா­லாவின் துணிச்சல் மிகவும் பாராட்­டுக்­கு­ரி­யது. இளம் வயதில் சிறுவர், சிறு­மிகள் கல்­வியை மட்டும் முழு மூச்­சாக கொண்டு செயற்­ப­டு­வ­தில்லை. காரணம், தொழில்­நுட்ப வளர்ச்சி பல சிறு­வர்­களை பாத­க­மான நிலைக்கு கொண்டு சென்­றுள்­ளது. ஆயினும், தங்­களை தாங்­களே உணர்ந்துகொண்­ட­ வர்­களே வாழ்க்­கையில் முன்­னேறு­கின்­றார்கள். அந்த வகையில் மலாலா நன்­ம­திப்­பு­டைய பெண்­ணா­கவே திகழ்­கின்றார் என்­பதில் ஐய­மில்லை.

மலா­லாவின் இன்­னு­மொரு சிறப்­புக்­கு­ரிய விட­யங்­களில் ஒன்­றாக நோபல் பரிசு வழங்­கப்­பட்­ட­மையை கூறலாம். அதா­வது, 2014 ஆம் ஆண்டு அமை­திக்­கான நோபல் பரிசு வழங்­கப்­பட்­டது. மேலும் மிக சிறுவயதில் அமைதி நோபல் பரிசு பெற்­றவர் என்ற பெருமை மலா­லா­வையே சென்­ற­டை­கின்­றது. இந்­நி­கழ்வு பல நாடு­களைச் சேர்ந்த பல மக்­களால் வர­வேற்­கப்­பட்­டது. மலா­லா­வுக்கு நோபல் பரிசு கிடைத்த அதே சமயம் இந்­தி­யாவை சேர்ந்த கைலாசு சத்­தி­யார்த்தி என்­ப­வ­ருக்கும் அமை­திக்­கான நோபல் பரிசு வழங்­கப்­பட்­டது. அதா­வது 2014ஆம் ஆண்­டுக்­கான நோபல் பரிசு இந்­தியா மற்றும் பாகிஸ்­தானை சேர்ந்த இவ்­வி­ரு­வ­ருக்கும் வழங்­கப்­பட்­டது. இதுவும் மிக அற்­பு­த­மான விட­ய­மாகும்.

பெண்­களின் உரி­மைக்­கா­கவும் கல்­விக்­கா­கவும் போராடி தன் கல்வி நிலை­யையும் உயர்த்தி கொண்டிருக்கும் மலாலா ஒரு சிறந்த பெண்­ம­ணி­யா­கவே அனை­வ­ருக்கும் தெரி­கின்றார். மேலும் அவர் வழியை பின்­பற்றி அனைத்து சிறார்­களும் தமக்­கான கல்­வியை சரி­யான முறையில் தேர்ந்­தெ­டுத்து கல்வி பயில வேண்டும். அப்­போதுதான் உல­கத்தின் தரம் இன்னும் உயர் நிலையை அடையும். இன்றும் பல நாடு­களில் சில பயங்­க­ர­வாத அமைப்­புகள் மக்­களை கட்­டுப்­ப­டுத்தி கஷ்­டத்­துக்கு உள்­ளாக்கி வரு­கின்­றது என்­பது நாம் ஒவ்­வொரு நாளும் அறியும் செய்­தி­யா­க­வே­யுள்­ளது. இவ்­வா­றான பல நாடு­களில் பல சிறு­வர்­களின் கல்வி மோச­மான நிலையில் உள்­ளது. அது மட்­டு­மன்றி பெண்­களின் நிலை எண்ணிப் பார்க்க முடி­யா­த­ள­வுக்கு மிகவும் துன்­ப­க­ர­மாக உள்­ளது. இந்த நிலை மாறவேண்டும். மலாலா போன்று துணிச்­ச­லுடன் செயற்­பட முன்­வர வேண்டும். அப்­போதுதான் வள­மான எதிர்­கா­லத்தைப் பெறமுடியும். உண்­மை­யி­லேயே மலா­லாவின் துணிவே அவ­ருக்கும் அவர் சார்ந்த மாணவ சமு­தா­யத்­துக்கும் நல்ல விடி­யலைத் தேடித்­தந்­துள்­ளது. “எதுவுமே கஷ்டப்படாமல் கிடைப்பது இல்லை” என பலர் கூறுவது நிஜமே. அது போலவே மலாலா தான் அடைந்த பல கஷ்டங்களையும் தாண்டி தற்போது நல்ல நிலையில் மிளிர்வது என்பது மகிழ்ச்சியை தரும் விடயமாகும்.

மலாலா தனது கல்­வியில் பல சாத­னை­களை புரிந்து பெண்­ணி­னத்­துக்கு எடுத்­துக்­காட்­டாக வாழவேண்டும் என்­பதே அனை­வ­ரது பிரார்த்­தனையாகும்.

உதயகுமார் துர்க்கா,
செங்கலடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *