Cookery

பால் பணியாரம் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 100 கிராம்
  • உளுந்து – 75 கிராம்
  • பசும்பால் – 200 கிராம்
  • தேங்காய் பால் – ஒரு டம்ளர்
  • சர்க்கரை – 100 கிராம்
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு
  • பொரிக்க (எண்ணெய்) – தேவையான அளவு

பால் செய்முறை

பசும் பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமயம் கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். அதில் சர்க்கரை, ஏலப்பொடி சேர்க்கவும்.

செய்முறை

  • பச்சரிசியையும், உளுந்தையும் ஐந்து மணிநேரம் ஊற வைத்து கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைக்கவும்.
  • இந்த மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
  • வெள்ளை நிறமாக பொறித்து எடுக்கவும். பொறித்து எடுத்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும் சுவையான பால் பணியாரம் ரெடி….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *