
Cookery
வீட்டில் சிக்கன் பர்கர் தயாரிப்பது எப்படி?
தேவையானவை
- சிக்கன் பிரெஸ்ட்- 250 கிராம்
- உப்பு – 2 டீ ஸ்பூன்
- மிளகு தூள் – 1 டீ ஸ்பூன்
- மசாலா பவுடர் – 1 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீ ஸ்பூன்
- முட்டை – 1 டீ ஸ்பூன்
- ரொட்டி தூள் – தேவைக்கு ஏற்ப
- எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
- பர்கர் பன்
- சீஸ், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், முட்டை கோஸ், கேரட்- தேவைக்கு ஏற்ப
செய்முறை
சிக்கனை மிக்ஸியில் நன்கு அரைத்து அதனுடன் உப்பு, மிளகு தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் சேர்த்து நன்கு பிரட்டி 1/2 மணி நேரம் ஊர வைத்து, வட்டமாக தட்டி அடித்து வைத்த முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி தவாவில் எண்ணெய் ஊற்றி பொரித்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு பர்கர் பண்ணில் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், முட்டை கோஸ், கேரட் எல்லாம் வட்ட வடிவமாக கட் செய்து வைத்து,இதற்கு மேல் பர்கர் ஷீஸ் வைத்து பொரித்த சிக்கன் கட்லட்டையும் வைத்து மைக்ரோ அவனில் 2 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான சிக்கன் பர்கர் தயார்.
குழந்தைகள் அதிகம் விரும்பக்கூடிய பர்கரை வீடிலேயே செய்து அசத்துங்கள்.
0 comments