Biodata

நட்சத்திரங்களின் வாழ்க்கைத் துணை: மனந்திறக்கிறார் நடிகர் பிரசன்னா

By  | 

சூர்யா- – ஜோதிகாவுக்குப் பிறகு ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்றால்… சந்தேகமேயில்லை அது பிரசன்னா- – சினேகா ஜோடிதான். இவர்கள் இணைந்து நடித்த ‘அச்சமுண்டு அச்ச முண்டு’ படத்தில் ஜோடிப்பொருத்தம் எப்படியோ… ஆனால், நிஜத்தில் பர்ஃபெக்ட்!
சினேகா பற்றி மனம் திறக்கிறார் பிரசன்னா…

காலேஜ் படிச்சிட்டிருந்த டைம்… சுஹாவோட (சினேகாவை ‘சுஹா’ என்றே அழைக்கிறார் பிரசன்னா) ‘ஆனந்தம்’ படம் ரிலீசாகியிருந்தது. ‘ஒற்றை நாணயம்…’ பாட்டு பசங்க­ளைப் பாடாப்படுத்திட்டிருந்தது அப்ப… சினேகாங்கிற நடிகையை மத்த பசங்க எல்லாம் எப்படி ரசிச்சாங்களோ அதே மாதிரி ஒரு ரசிகனா நானும் ரசிச்சிருக்­கேன். அந்த சிரிப்புக்காகவே அவங்களை அவ்ளோ ரசிச்சிருக்கேன்… அவங்க இருந்த அதே சினிமாவுக்கு நானும் வந்தது, ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணினது, நட்பானது, காதலாகி, இப்போ கல்யாணம் வரைக்கும் இணைஞ்ச­தெல்லாம் அந்த ஆண்டவன் ஏற்கனவே போட்டு வச்சி­ருந்த கணக்குன்னு அப்ப நினைச்சுக்­கூடப் பார்த்ததில்லை..

சினேகாவின் கரம்பிடித்த பிரமிப்பு பிரசன்னாவிடமிருந்து இன்னும் விலகவில்லை!
‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்துல முதல்முறையா ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சோம். அந்தப் படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட ரெண்டரை மாசமா அமெரிக்காவுல நடந்தது. ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு நட்பு மலர்ந்தது. சக நட்சத்திரமா ரெண்டு பேரும், ரெண்டு பேரோட படங்களைப் பத்திப் பேசிக்கிட்டோம். என் படங்களை அவங்க பார்த்ததே இல்லைன்னு சொன்னாங்க. நானும் அவங்களோட முக்கியமான சில படங்களை மிஸ் பண்ணியிருந்தேன். ரெண்டு பேரும் ரெண்டு பேரோட முக்கியமான படங்களைப் பார்க்கிற­துன்னு அப்போ ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கிட்டோம். படங்களைப் பத்தி, அதுல எங்க கேரக்டர் பத்தி நிறைய பேச ஆரம்பிச்சோம்.

என் நடிப்பைப் பத்தி ரொம்ப நேர்மை­யான கமெண்ட்ஸ் சொல்வாங்க. இ­ன்னும் பெட்டரா பண்ண என்ன செய்ய­லாம்னு அட்வைஸ் கொடுப்­பாங்க. ஒரு ஃபிரெண்டா அவங்க என்மேல காட்டின அக்கறை என்னை ரொம்ப நெகிழ வச்சது. ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் ரிலீசாகறதுக்கு முன்னாடியே எங்க ரெண்டு பேருக்கும் ‘லவ்’வுன்னு வதந்தி கிளம்பிருச்சு. சொன்னா நம்ப மாட்டீங்க… அதைக் கேட்டு ரெண்டு பேரும் அவ்ளோ சிரிச்சிருக­்கோம்… சத்தியமா எங்களுக்கு அப்போ அப்படியொரு ஐடியாவே இல்லை!

நோ ‘ஐ லவ் யூ’
ஒருநாள் அந்த நட்பை அடுத்தக்­கட்டத்­துக்குக் கொண்டு போனா என்னன்னு என் மனசுக்குள்ள சின்னதா ஒரு பொறி தட்டுச்சு… ஏன்னா, எனக்கு மனைவியா வரப் போற பொண்ணுகிட்ட எனக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தது. குடும்பத்­துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். உறவுகளை மதிக்கவும் நேசிக்கவும் தெரியணும். எங்கம்மா, அப்பாவுகேத்த மருமகளா நடந்துக்கவும் தெரியணும். அதே நேரம் என்கூட பார்ட்டிக்கு வரும்போது மொடர்னா நடந்துக்கவும் தெரிஞ்சிருக்கணும்னு நிறைய கற்பனை பண்ணி வச்சிருந்தேன். சுஹாவோட பழகப் பழக… நான் எதிர்பார்த்த அத்தனை அம்சங்களும் அவங்க­கிட்ட இருக்கிறதை உணர்ந்தேன். என்னையும் அறியாம அவங்க மேல ஒரு ஈர்ப்பு வந்தது.

அவங்களுக்கும் அதே மாதிரிதான்னு நினைக்கிறேன். கல்யாணத்தைப் பத்தி ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். சுஹாவுக்கு வீட்ல மாப்பிள்ளை பார்த்­திட்டிருந்தாங்க. ‘எனக்கு வரப்போறவர் இப்படியெல்லாம் இருக்கணும்’னு சுஹா சொல்ற ஒவ்வொரு முறையும், ‘அடமுட்டாளே… அது நீதாண்டா’ன்னு அவங்க எனக்கு சொல்லாம சொல்ற மாதிரி நினைச்சுப்பேன். அவங்­களுக்கு நிச்சயம் என்னைப் பிடிக்கும்னு நம்பினேன். ரெண்டரை வருஷ ஃபிரெண்ட்ஷிப், அடுத்த ஸ்டேஜுக்குப் போக ஆரம்பிச்சது… ‘ஐ லவ் யூ’வெல்லாம் சொல்லிக்கலை. ஆனா, சேர்ந்து வாழறதைப் பத்தி நிறைய பேசினோம்.

சம்மதம்
ரெண்டு பேருக்கும் அவங்கவங்க குடும்பங்கள் ரொம்ப முக்கியமா இருந்தது. ‘இது சரி வருமா’ன்னு நாங்க நிறைய பேசி, ஒரு தீர்மானத்துக்கு வந்த பிறகு, ரெண்டு பேர் வீடுகளைப் பத்தி யோசிச்சோம். சுஹாவோட அம்மா, அப்பா வெளிநாட்டுல இருந்தவங்க. சினிமா உலகத்தோட நிறைய பரிச்சயம் உண்டு அவங்களுக்கு. ஆனா எங்கம்மா, அப்பாவுக்கு வீடுதான் உலகம். நானும் சுஹாவும் வேற வேற கம்யூனிட்டி. எங்கம்மாகிட்ட மெதுவா மேட்டரை ஓபன் பண்ணினேன். ‘அப்பாவுக்கு ஓ.கேன்னா எனக்கும் ஓ.கே’ன்னாங்க. சுஹா எனக்கு அறிமுகமாகறதுக்கு முன்னாடியே எங்கப்பாவுக்கு அறிமுகம். ஆனா, எங்க காதலைப் பத்தி சொன்னதும் அப்பாவை அத்தனை சுலபத்துல சம்மதிக்க வைக்க முடியலை. அவருக்கு சுஹாவோ, அவங்க குடும்பமோ பிரச்சினையில்லை. கம்யூனிட்டி… சொந்தக்காரங்க… சமுதாயம்… இப்படிப் பல விஷயங்களைக் காரணமா சொன்னார். எங்க சொந்தக்காரங்க எல்லார்கிட்டேயும் நானே பேசினேன். எல்லாரும் சம்மதிச்சதோட, எனக்காக என் அப்பாகிட்ட சப்போர்ட் பண்ணிப் பேசி, சம்மதமும் வாங்கினாங்க.

  

சுஹா வீட்டுலேயும் பேசி சம்மதம் வாங்கியாச்சு… எந்த முறைப்படி கல்யாணம்னு ஒரு கேள்வி வருமே…. ரெண்டு பேர் தரப்பையும் திருப்திப்படுத்த, ரெண்டு முறைப்படி கல்யாணம் நடந்து, ரெண்டு முறை சுஹா கழுத்துல தாலி கட்டினேன். லட்சக்கணக்கான ரசிகர்கள்… பேர், புகழ்னு அவ்ளோ உயரமான இடத்துல இருந்த ஒரு பொண்ணால, ஒரே நாள்ல எப்படி எல்லாத்தையும் மறந்துட்டு, அன்பான மனைவியா, அனுசரணையான மருமகளா மாற முடியும்னு இப்பவும் என்னால புரிஞ்சுக்க முடியலை.

ஹனிமூன்
ஹனிமூனுக்கு நியூசிலாந்து போயிருந்தோம். ரெண்டு பேரும் மட்டும் தனியா டிராவல் பண்ணின முதல் ட்ரிப் இது. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு உள்ள அக்கறையை முழுசாப் புரிய வைக்க இந்த ட்ரிப் உதவியா இருந்தது. மே 11 எங்களுக்குக் கல்யாணம். ஜூன் 11 நாங்க நியூசிலாந்துல இருந்தோம்.

கிஃப்ட்
முதல் மாச நிறைவைக் கொண்டாட நான் அவங்களுக்கு ஒரு சன் கிளாஸ் கிஃப்ட் பண்ணினேன். ‘என் வாழ்க்கையில நீ எவ்ளோ முக்கியம்’னு சொல்ற மாதிரி அவங்க எனக்கொரு கிரீட்டிங் கார்டு கொடுத்தாங்க. வாழ்க்கையில ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வையும் சந்தோஷமாகவும் சர்ப்ரைஸாகவும் மாத்தறது சுஹாவுக்குக் கை வந்த கலை. என்னோட ஒரு பிறந்த நாளைக்கு என்கூட ஸ்கூல்ல படிச்ச ஃபிரெண்ட்ஸை எனக்கே தெரியாம வரவழைச்சு, சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்தாங்க. ஒவ்வொரு விஷயத்தையுமே இப்படி யோசிச்சு யோசிச்சு ரிசர்ச்சே பண்ணி அசத்துவாங்க. அவங்களுக்கு என்ன வாங்கிக் கொடுக்கிறதுன்னு நான்தான் மண்டையை உடைச்சுப்பேன்.

ஒருநாள் ரெண்டு காய்ஞ்சு போன ரோஜா இதழ்களைக் காட்டி ‘ஞாபகமிருக்கா’ன்னு கேட்டாங்க. ‘ஹேய்… காஞ்சு, வாடிப் போனதைப் போய் ஏன் வச்சிருக்கே’ன்னு கேட்டேன். ‘ஏர்போர்ட்ல நீ கொடுத்த பொக்கே…. அதை முழுசா பத்திரப்­படுத்த முடியாதேன்னு, ஞாபகார்த்தமா ரெண்டே ரெண்டு இதழ்களை மட்டும் பத்திரப்­படுத்தி வச்சிருக்கேன்’னு சொன்னப்ப, நெகிழ்ந்து போயிட்டேன். ரோஜாவோ… வைர நெக்லஸோ… சுஹாவை பொறுத்தவரை எல்லாம் ஒண்ணு­தான். அன்பளிப்பைப் பார்க்­காம, அதுல உள்ள அன்பை மட்டுமே பார்க்கிற அருமையான மனுஷி!

திருமணத்துக்குப் பிறகு பிரசன்னா­விடம் தோற்றம், தோரணையில் நிறைய மாற்றம் தெரிகிறதே?
சுஹா என் பக்கத்துல வந்த பிறகுதான் என் வாழ்க்கையே அழகா மாறியிருக்குன்னு சொல்லலாம். எப்படி டிரெஸ் பண்ணணும், எப்படி அழகா காட்டிக்கணும், உடம்பை எப்படி மெயின்டெயின் பண்ணணும்னு ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து எனக்குக் கத்துக் கொடுத்தாங்க. எனக்கு எது நல்லாருக்கும், எது நல்லாருக்காதுன்னு என்னைவிட அவங்களுக்குத்தான் அதிகம் தெரியும்.

பிராமிஸ்
ஒரு சாதாரண பெண்ணோட வாழ்க்கை­யில உள்ள எந்த சந்தோஷத்­தையும் அவங்க அனுபவிச்சதில்லை. காலேஜ் லைஃப், ஃபிரெண்ட்ஸ்கூட சுத்தறதுன்னு சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட மிஸ் பண்ணி­யிருக்காங்க. கல்யாணத்துக்குப் பிறகு, ஒரு குடும்பப் பெண்ணா, மனைவியா தன்னோட ரோலை மிஸ் பண்றதுல அவங்களுக்கு விருப்பமில்லை.

சுஹாவுக்கு நிறைய கனவுகள் இருக்கு… அவங்களோட கனவுகளை நிறைவேத்தறதா நானும் எக்கச்சக்கமா பிராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்கேன். ‘கல்யாணத்துல என் கழுத்துல தாலி கட்டும் போது, நெத்தியில கிஸ் பண்ணணும், முடியுமா’ன்னு கேட்டாங்க. பிராமிஸ் பண்ணினேன். ‘உன்னால முடியாது. சொந்தக்­காரங்கல்­லாம் சுத்தியிருப்பாங்க. எப்படி பண்ணுவே’ன்னு அவங்களுக்கு நம்பிக்கையே இல்லை. பிராமிஸ் பண்ணின மாதிரியே, ரெண்டு முறைப்­படி தாலி கட்டும் போதும், அவங்க நெத்தியில கிஸ் பண்ணினேன்.

உலகம் முழுக்க டிராவல் பண்ண­ணுங்கிறது அவங்களோட இன்னொரு பெரிய கனவு. அதோட தொடக்கமாகத்தான் ஹனிமூனுக்கு நியூசிலாந்து கூட்டிட்டுப் போனேன். வருஷத்துக்கொரு முறை ஒரு மாசம், ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு பிராமிஸ் பண்ணியிருக்கேன்.

இதையெல்லாம் விட பெரிய பிராமிஸ் ஒண்ணு இருக்கு. ‘சினிமாக்­காரங்க கல்யாணம் எவ்ளோ நாள் நீடிக்கும்’னு ஒரு பேச்சு இருக்கு. எங்க மேலேயும் அப்படியொரு பார்வை இருக்கு. ‘அந்த எண்ணத்தை உடைச்சுக் காட்டுவேன்’னு எங்கம்மா, அப்பா, சுஹாவோட அம்மா, அப்பா, சொந்தக்காரங்கன்னு எல்லாருக்கும் பிராமிஸ் பண்ணியிருக்கேன்.

பிரசன்னாவின் சத்தியம் வென்று, புன்னகை இளவரசியின் முகத்தில் காலமெல்லாம் புன்னகை நிலைத்­திருக்கட்டும். மிஸ்டர் பிரசன்னா! நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *