Children

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சுலபமாக இப்படியும் சாப்பிட வைக்கலாமே

By  | 

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைப்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ.

* குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் திணிக்காதீர்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களை அவசரப்படுத்தக் கூடாது.

* இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும்.

* நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், பருப்பு வகைகளை கொடுங்கள். இது அவர்களுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

* குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறு, பானகம், மோர், மில்க் ஷேக், இளநீர் ஆகியவற்றை கொடுக்கலாம்.

* காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, சாண்ட்விச்சுகளாகவும், வெஜ் நூடுல்ஸாகவும், ஃப்ரைட் ரைஸாகவும் கொடுங்கள். கலர்ஃபுல்லான காய்கறிகளை சேர்த்து, உணவை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள்.

* காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

* தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி போன்றவற்றின் வடிவங்களை மாற்றி குழந்தைகளுக்கு பரிமாறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *