Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: மாதுவால் மாறிப்போன மது வாழ்க்கையில் இருந்து மீள்வது எப்படி?

By  | 

கேள்வி
எனது அண்ணாவுக்கு காதல் தோல்வி! அவ­ருக்கு வயது 32. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அவரது ஆறு வருட காதல் முடிவுக்கு வந்தது. அவர் காதலித்த பெண்ணுக்கு திருமணமாகி இந்தியா­வில் வசித்து வருகிறார். ஆனால், எனது அண்ணா தான் பார்த்து வந்த வேலையையும் விட்டுவிட்டு வீட்டிலேயே முடங்கி­­விட்டார். எங்கள் தந்தை சில வருடங்களுக்கு முன் காலமாகி­விட்டார். எனது அண்ணாவை இயல்பு நிலைக்குக் கொண்டுவர நானும் அம்மாவும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்துவிட்டோம். ஆனால், இன்னும் பலனில்லை. எப்படி அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது?

பதில்:
என்னவொரு ஆச்சரியம்!
காதல் தோல்வியால் ஒருவர் – அதிலும் ஒரு ஆண் – இத்தனை தூரம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கேட்க, இந்தக் காலத்தில் இப்படியொருவரா? என ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அவர் குடிக்கு அடிமை­யாகிவிட்டார் என்பதால் நீங்களும் அவரைத் தொந்தரவு செய்வதில்லை போலும்! அது அவருக்கு வசதியாகிவிட்டது. இவ்வாறு மனோரீதியாகப் பாதிக்கப்­பட்டவர்களை ஒதுக்கவோ, ஒதுங்க­விடவோ கூடாது. நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிட நினைக்கும் அவர்களை வலுக்­கட்டாயமாக வெளியே கொண்டுவர வேண்டும்.

உதாரணமாக, உங்கள் அண்ணா­விடம் நீங்களோ, உங்கள் அம்மாவோ ‘பரிதாப’ எண்ணத்துடன் அணுகுவீர்களேயானால் அது அவருக்கு வசதியாகப் போய்விடும். கொஞ்ச நாள் அவரை அப்படியே விட்டுவிட்டாலும் கூட, ஒரு சில நாட்களில் அவரை யதார்த்தமாக நடத்த ஆரம்பிக்க வேண்டும். அப்போது­தான் அவர் அதிலிருந்து மீள முடியும்.

மாறாக, ‘என் மகன் இப்படியாகி­விட்டானே’ என்று தான் குமுறுவது மட்டுமன்றி, அதைத் தன் மகனுக்கும் வெளிக்காட்டினால் அவரது கவலை அதிகரிக்கவே செய்யும்.
இளைஞர்களின் இதுபோன்ற ரணங்களை குணப்படுத்த ‘நட்பு’ என்ற ஒரு மருந்தும் இருக்கிறது. உங்கள் அண்ணாவுக்கு நண்பர்கள் இல்லையா? அல்லது இருந்தும் அவர்களை நீங்கள் உங்கள் வீட்டில் அனுமதிப்பதில்லையா?

ஒருவேளை அவருக்கு நண்பர்களே இல்லை என்றாலும் புதிய நட்புக்­களைப் பூக்கச் செய்வதன் மூலம்தான் அவரை வெளிக்கொண்டுவர முடியும்.முடியும் என்றால் உங்கள் வசிப்பிடத்தை வேற்றிடத்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அந்த இடமாற்றம் அவருக்குள்ளும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம். மேலும் அங்கிருக்கும் அயலவர்­களுக்கு உங்களது அண்ணனின் கடந்த காலம் பற்றித் தெரியாது என்பதால், அவரும் ஒருவேளை சகஜமாகப் பழக முன்வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *