Cinema

செரின்,பிரியா வாரியரை மிஞ்சி வில்லால் வித்தை காட்டிய ஷோ சூயூ

By  | 

தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருப்பது கொரிய அழகி ஷோ சூயூ.இவர் ஒரே ஒரு வீடியோவில் செரின் பிரியா வாரியரை மிஞ்சி ‘ஓகோ’ என பிரபலமாகியிருக்கும் ஷோ சூயூ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

* வில் அழகி பிறந்தது தைவானில். அங்குள்ள தைனன் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

* வில்லு விட்டு அசத்தியிருக்கும் நம்ம ஆளு, உண்மையிலேயே வில் வித்தை வீராங்கனை இல்லையாம். இவர் ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், நாடகத் தொடர்களில் நடித்து பிரபலமானவர். உண்மையை சொல்லப்போனால், இவர் ஒரு நடிகை.

* தென் கொரியாவில் வருடந்தோறும் நடிகர்-நடிகைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடப்பது வழக்கமான ஒன்று. ‘ஐடியல் ஸ்டார் அத்லட்டிக் சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் நாடக நடிகர்கள், மேடை நாடக கலைஞர்கள், சினிமா நடிகர்கள் கலந்துகொண்டு தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அப்படி நடந்த போட்டியில்தான் நம்ம ஆளு, வில் அழகியாக பிரபலமாகியுள்ளார்.

* இவர் அம்பு விட்டதும், அம்பின் நுனி இவரது தலைமுடியை கோதி செல்ல, அது வீடியோவாக வெளியாகி, வைரலாகியது. இவரது தலைமுடி பறந்ததை பார்த்து ரசித்த நாம், அந்த அம்பு இலக்கை எட்டியதா என்பதை பார்க்க மறந்துவிட்டோம். உண்மையில் அந்த அம்பு, இலக்கை துளைக்கவில்லையாம். அதற்கு மாறாக இளைஞர்களின் இதயத்தைதான் துளைத்திருக்கிறது.

* இன்று வில் விட்டு அசத்தியிருக்கும் ஷோ, ஒரு காலத்தில் இதழ்களை குவித்து அசத்தியவர். ஆமாங்க, ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்தவர் தனது இதழ்களை முத்தம் கொடுப்பது போல குவித்து ஒரு வீடியோ எடுத்திருக்கிறார். அது இணையத்தில் பரவ, அன்று அது வைரலாகியதாம்.

* இன்று பல நாடகங்கள், மேடை நிகழ்ச்சிகளில் நடித்து அசத்தும் ஷோ, சிறுவயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆம்..! சிறுவயதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது போன்று தத்ரூபமாக நடித்து பலமுறை வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவர அவரை பள்ளியை விட்டு நிறுத்தியிருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் முழு நேர நடிப்பிற்கு தயாராகியிருக்கிறார். இருப்பினும் பெற்றோரின் கரிசனத்தில் மீண்டும் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

*வில் அழகிக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதுவும் அவரது செல்லப்பிராணியான ‘கூஷி’ நாயை அதிக நேரம் கொஞ்சுவாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *