Love

யாதுமாகினாள்…

By  | 

பனித்துளி
மூடிய புல்வெளியாய் நான்
காலைக் கதிரவனாய்
வந்தாள் அவள் உடல் சிலிர்த்து
எழுந்தேன்

வரண்டு போன
பாலைவனமாய் நான்
கார் கால மேகங்களாய்
வந்தாள் அவள்

நான் முகிழ்ந்து எழுந்தேன்

மாலை நேரத்தின்
மல்லிகை
தன் மலர்வுக்காய் காத்திருந்த போது
வந்தாள் அவள்

வாசமாய் சேர்ந்தாள்
ராத்திரி நேரத்தின்
திருடனாய் வந்தாள் அவள்
கவர்ந்த போனாள்
என் காதலை

உடலோ உள்ளமோ
யாவிலும் சேர்ந்தாள்

நான்
சிறகுகள் விரித்தது
வான் வழி பறந்தேன்

அவள்
என்னுள்
யாது மாகினாள்

மா .சிவா,
கராவெட்டி மேற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *