Cinema

தன்யா பாலகிருஷ்ணன் கதாநாயகியானார்!

By  | 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான படம் ‘ராஜா ராணி’. இந்தப் படத்தில் நயன்தாரா, ஆர்யா, ஜெய் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் படத்தில் நயன்தாரவின் தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணன். இவர் பாலாஜி மோகன் இயக்கிய ‘ஐ ஆம் சபரிங் ப்ரம் காதல்’ என்ற வெப் சீரியலில் நாயகியாக நடித்தார்.

தற்போது தன்யா பாலகிருஷ்ணன் ‘ரக்த சண்டனா’ என்ற கன்னடப் படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை

‘நாவிலடவரு’, ‘அமராவதி’, ‘மைத்ரி’, ‘அத்வைதா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கிரிராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

படத்திற்கு அபி, ஜோல் இணைந்து இசையமைக்கிறார்கள். இதே கதை விரைவில் வெப் சீரியலாகவும் தயாராகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *