Cinema

சன்னி லியோன் வாழ்க்கையின் உண்மை கதை!

By  | 

சன்னிலியோனின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘கரேன்ஜித் கவுர்: த அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பாலிவுட் இயக்குனர்களுக்கு இருக்கும் அதீதமான தைரியம் என்னவென்றால் பிரபலங்களின் வாழ்க்கை கதையை பயோக்ராபியாக எடுப்பது. வாழும் அல்லது மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பது பாலிவுட்டில் ஒரு ஃபேசனாகவே மாறிவிட்டது.

ஆபாச நடிகையாகவும், பாலிவுட் பிரபலமாகவும் இவரைப்பார்த்த ரசிகர்களுக்கு அவரது மற்றொரு முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்த சன்னி லியோன், வாடகைத்தாயின் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயாகியது கூட அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த பின்னரே எல்லோருக்கும் தெரிய வந்தது.

இந்நிலையில் கரேன்ஜித் கௌராக பிறந்து வளர்ந்தவர் எப்படி சன்னி லியோனாக மாறினார் என்ற உண்மை பக்கத்தை கூறும் படமாக கரேன்ஜித் கவுர்: த அன்டோல்ட் ஸ்டோரி தயாரியுள்ளது. இப்படம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சன்னி லியோன், நான் இந்த படத்தில் நடிக்கவில்லை , நானே இருக்கிறேன் என்றும் என் வாழ்க்கை சுருக்கத்தை இதில் கூறியுள்ளனர் என்றும் இதில் என்னை பற்றி தெரியாத சில செய்திகளும் உள்ளன என்றும் பதிவிட்டுள்ளார்.

ஜீ டி.வி(Zee TV) தயாரித்திருக்கும் இப்படம் வெப் சீரியஸாக வெளியாகவுள்ளது.  இந்த படத்தின் ட்ரைலர் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *