Cookery

சிக்கன் பாப்கார்ன் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • சிக்கன் துண்டுகள் – 2 (எலும்பில்லாதது, சிறிதாக நறுக்கியது)
  • வெங்காயம் – 1
  • பூண்டு – 4 பற்கள்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்ல மிளகு தூள் – தேவையான அளவு

மாவுக் கலவைக்கு

  • மைதா – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்ல மிளகு – தேவையான அளவு

முட்டை கலவைக்கு

  • முட்டை – 1
  • பால் – 1 மேஜைக்கரண்டி

பாப் கார்ன் கலவைக்கு

  • பிரட் தூள்கள் – 1 கப்
  • சோளம்(Corn Flakes) – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்ல மிளகு – தேவையான அளவு

செய்முறை

  • தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  • சிக்கனை நறுக்கிக் கொள்ளவும்
  • வெங்காயம் மற்றும் பூண்டினை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்
  • லேசாக அரைத்துக் கொள்ளவும்
  • பின்பு அரைத்த விழுதுடன் சிக்கன், உப்பு மற்றும் நல்ல மிளகு தூள் சேர்க்கவும்
  • நன்கு கலக்கி தனியே வைக்கவும்
  • சோளத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்துக் கொள்ளவும்
  • அதன் மீது சப்பாத்திக் கட்டை வைத்து உருட்டவும். அப்போது சோளம் உடைந்து சிறிய துண்டுகளாகும்
  • பின்பு பிரட் தூள்கள், சோளம், உப்பு மற்றும் நல்ல மிளகை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்அவற்றை நன்கு கலக்கவும்
  • அதன் பின் மாவு, உப்பு மற்றும் நல்ல மிளகை மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  • அவற்றையும் நன்கு கலக்கி தனியே வைக்கவும்
  • பின்பு முட்டை மற்றும் பாலை வேறொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
  • முட்டையை நன்கு அடித்து கலக்கவும்அனைத்தையும் தயாராக வைக்கவும்
  • பின்பு ஊற வைத்த சிக்கனை எடுத்து மாவுக்கலவையில் போடவும்
  • மாவு அனைத்து பக்கங்களிலும் படுமாறு நன்கு கிளறவும்
  • பின்பு சிக்கன் துண்டுகளை முட்டையில் முக்கி எடுக்கவும்
  • அதன் பின் அதனை பிரட் கலவையில் போடவும்
  • பின்பு மீண்டும் முட்டையில் முக்கி எடுக்கவும்
  • அதன்பின் மீண்டும் பிரட் கலவையில் போட்டு எடுக்கவும்
  • அனைத்து துண்டுகளையும் இதே போல் செய்யவும்
  • பின்பு அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
  • பின்பு ஒரு மூடியால் மூடி விடவும்
  • பொன்னிறமாக பொரிக்கவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *