Cinema

தன் வாழ் நாளை சுருக்கி, நாம் வாழும் வரை நம் மனதில் ஆனந்த யாழை மீட்டும் நா. முத்துக்குமாரின் பிறந்த நாள் நினைவு தினம்

By  | 

இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிலையாய் நிற்கும் பாடல்களை எழுதிய  நா.முத்துக்குமாரின் பிறந்த நாள் நினைவு தினம்  .

1975-ஆம் ஜூலை மாதம் 12-ஆம் திகதி காஞ்சிபுரம் மாவட்டம் கனிகாபுரம் என்ற கிராமத்தில் நா.முத்துக்குமார் பிறந்தார்.இவருக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவருக்கு ஜீவலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 41  ஆவது வயதில் ஓகஸ்ட் 14, 2016 காலமானார்.

இவரது தந்தை அன்னை புத்தகம் என்ற நூலகத்தை தனது சொந்த முயற்சியில் வைத்திருந்தார். அப்போதிலிருந்தே முத்துக்குமாருக்கு புத்தகங்கள் வாசிப்பது, கவிதை, பாடல்கள் எழுதுவது என இலக்கியத்தில் தீராத காதல் ஏற்பட்டது.

இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் இயக்நர் பாலுமகேந்திராவிடம் 4 வருடங்களாக உதவியாளராக நா.முத்துக்குமார் பணியாற்றினார். பின்னர், சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ் திரைப்பட பாடலாசிரியராக தனது பயணத்தை அடியெடுத்து வைத்தார்.

தமிழை மிக அழகாக கையாண்டு இலக்கியத் தரத்துடன் பாடல்களை எழுதுவதில் நா.முத்துக்குமார் வல்லவர். இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

சமகால தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் அனைவருடனும் கிட்டத்தட்ட பணியாற்றியுள்ள நா.முத்துக்குமார், தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக உருவெடுத்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம் படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் அதிகப்படியான எண்ணிக்கையில் 103 பாடல்களை எழுதி கவிஞர் நா.முத்துக்குமார் சாதனை படைத்தார். எத்தனையோ மிகப்பெரிய பாடலாசிரியர்கள் கூட ஒரே ஆண்டில் இதுபோன்ற அதிகப்படியான பாடல்களை எழுதியது இல்லை.

பட்டாம் பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், ஆனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம் என்கிற பல்வேறு தலைப்புகளில் கவிதை தொகுப்பு, கட்டுரை, நாவல் உள்ளிட்ட படைப்புகளை நா.முத்துக்குமார் படைத்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ என்ற பாடலுக்கும், சைவம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழகே.. அழகே எல்லாம் அழகே.. என்ற பாடலுக்காகவும் இருமுறை தேசிய விருதை நா.முத்துக்குமார் பெற்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்றுள்ள அவர், சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *