Cookery

பூரி செய்முறை!

By  | 

தேவையானவை

  • கோதுமை மாவு – 2 கப்
  • சர்க்கரை, ரவை – தலா ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை – சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு

மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *