Cookery

க்ரன்சி சீஸ் போல்ஸ் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • சீஸ் – 1 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் – சிறிதளவு
  • சீஸ் பிஸ்கட் -தேவைக்கேற்ப
  • முட்டை- 3
  • மா -1/2 கப்

செய்முறை

*சீஸ் ,வெண்ணிலா எசன்ஸ் மற்றம் சர்க்கரை கலந்து நன்கு பீட் செய்யவும்.

*பீட் செய்த கலவையில் க்ரீம் சேர்த்து 2 நிமிடங்கள் பீட் செய்யவும்.

*நன்கு பீட் செய்த கலவையை பிரிஜில் 45 நிமிடம் வைக்கவும்.

*45 நிமிடம் பிரிஜில் வைத்த கலவையை எடுத்து தட்டு ஒன்றில் ஒயில் பேப்பர் போட்டு ஐஸ் கிரீம் ஸ்கூப்பில் எடுத்து வரிசையாக வைக்கவும்.

*பின்பு அதை 2 மணித்தியாலங்கள் பிரிஜில் வைக்கவும்.

*சீஸ் பிஸ்கட்டை மிக்சியில் அரைத்து தூள் செய்து கொள்ளவும்.

*2 மணித்தியாலங்கள் பிரிஜில் வைத்த சீஸ் போல்ஸை எடுத்து மாவில் தோய்த்த பின்னர், முட்டை,சீஸ் பிஸ்கட் தூளில் தோய்க்கவும்.

*பின்னர் மறுபடியும்  முட்டை, சீஸ் பிஸ்கட் தூளில் தோய்த்து எடுக்கவும்.

* தோய்த்த சீஸ் போல்ஸை பிரிஜில் 15 நிமிடங்கள் வைக்கவும்.

*எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி  நன்கு சூடேற்றி சீஸ் போல்ஸை பொரித்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *