Interview

எங்கள் முயற்சிக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை

By  | 

நம் முன்­னோர்கள் ஆரோக்­கி­ய­மான பற்­களைப் பெற எந்தப் பற்­ப­சை­யையும் பயன்­ப­டுத்­த­வில்லை. ‘ஆலும் வேலும் பல்­லுக்கு உறுதி! என்­பது முது­மொழி. அதற்­கேற்ப இயற்கை மூலிகைக் குச்­சி­க­ளையும் அவற்­றைக்­கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட மூலிகைப் பற்­பொ­டி­யை­யுமே பயன்­ப­டுத்­தி­னார்கள்.

வேப்­பங்குச்­சியால் பல் துலக்­கு­வதும் பழங்­கா­லத்தில் பின்­பற்­றப்­பட்­டது . இன்றும் கிராமப் பகு­தி­களில் பலரும் வேப்ப மரத்தில் இருந்து ஒரு குச்­சியை உடைத்து பல் துலக்­கு­வதைக் பழக்­க­மாக கொண்டிருக்­கின்­றனர். வேப்­பங்­குச்­சியால் பற்­களைத் துலக்­கினால் பற்கள் நன்கு சுத்­த­மாக, பளிச்­சென்று இருக்கும். துர்­நாற்றம் நீங்கும். அத்­தோடு பற்­களில் நோய்கள் எதுவும் வராமல் காக்கும் என்­பது அனு­ப­வத்­திற்கு உட்­பட்ட உண்­மை­யான விட­ய­மாகும்.

முல்­லைத்­தீவு மாவட்டம் முள்­ளி­ய­வ­ளையைச் சேர்ந்த சுய­தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளான உத­ய­ராசன் செல்­வ­கு­மாரி தம்­ப­திகள் தனது மகளின் பெய­ரான திவ்யா என்ற பெயரில் பற்­பொ­டியை முறைப்­படி உற்­பத்தி செய்து வரு­கின்றார். அவர் எங்­க­ளுடன் பகிர்ந்து கொண்ட விட­யங்கள் வரு­மாறு.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லேயே 2009 ஆம் ஆண்­டுக்கு முன்­னரே பற்­பொடி தயா­ரிப்பு, அப்­பளம் தயா­ரிப்பு போன்ற பயிற்­சி­களைப் பெற்­றுக்­கொண்ட நாம் இப்­போது செய்­து­வ­ரு­கின்றோம். எங்களுக்கு சுமார் பத்­து­வ­ருட அனு­பவம் உள்­ளது. இதனை நாம் சிறிய முயற்­சி­யா­கவே செய்து வரு­கின்றறோம். எங்­க­ளு­டைய பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக இயற்கை வளங்­களைப் பயன்­ப­டுத்தி எது­வித தடை­களும் இன்றி இந்த பற்­பொடி உற்­பத்­தியை செய்து வரு­கின்றோம். இந்த உற்­பத்­தியை நாங்கள் பெரி­ய­ளவில் செய்­வ­தற்கு யாரா­வது உதவி செய்ய முன்­வ­ரு­வார்­க­ளே­யானால் பல­ருக்கு வேலை­வாய்ப்­பினைக் கொடுக்­கக்­கூ­டிய வகையில் எங்­களால் முன்­னேற முடியும். எம் போன்ற சுய­தொழில் முயற்­சி­யா­ளர்­களின் பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு அரச, அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் உதவி புரி­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். முன்­வ­ரு­கின்ற நிறு­வ­னங்­களும் சுய­தொ­ழிலை யார் செய்­வார்கள், எவ்­வாறு செய்­வார்கள் என்­பதை முறை­யாக அடை­யாளம் கண்டு அவர்­களை ஊக்­கப்­ப­டுத்­து­கின்ற வகையில் சுய­தொழில் முயற்­சிக்­கான உத­வி­களை வழங்­க­வேண்டும். அரச நிறு­வ­னங்­களோ அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களோ எமது முயற்­சியை ஊக்­கப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வ­ரு­வ­தில்லை. உதவித் திட்­டங்கள் செய்­வ­தா­யினும் எத்­த­கைய முயற்­சியும் செய்­யா­த­வர்­க­ளுக்கே உத­வி­களைச் செய்­கின்­றார்கள்.

இது நீடித்து நிலைக்­காது. வெறு­மனே இத்­தனைப் பேருக்கு உதவி செய்­துள்ளோம் என்­பதை ஆவ­ண­மாக்­கவே அவர்­களும் உத­வி­களை செய்­து­வ­ரு­கின்­றனர்.நாங்­க­ளா­கவே சில தொழில் முயற்­சி­களை செய்­தாலும்­கூட பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­கர்கள் இதனைத் தடுக்கும் நோக்­குடன் பல சட்ட திட்­டங்­களை முன்­வைக்­கின்­றார்கள். இவ்­வா­றான நிலையில் நாம் எவ்­வாறு எமது சுய­தொ­ழிலை செய்து முன்­னே­ற­மு­டியும்?
பற்­பொடி உற்­பத்­தி­யா­னது சுகா­தார ரீதியில் உமிச்­சாம்பல், வேம்பு, நாவல், கலர் மற்றும் சில மருந்து பொருட்கள், பொலித்தீன், இதனை ஒட்­டு­வ­தற்­கான ஒட்டு இயந்­திரம், உற்­பத்­தியைக் காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்­கான லேபிள் போன்­றவை இருந்­தாலே இவ்உற்­பத்­தியை சிறப்­பாக செய்­ய­மு­டியும். எமது பிர­தே­சத்தைப் பொறுத்­த­வ­ரையில் நாம் எத்­த­கைய முயற்­சி­களை மேற்­கொண்­டாலும் அதனை ஊக்­கப்­ப­டுத்­து­வ­திலும் பார்க்க நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­களே அதிகம் உள்­ளது. எனினும் நாம் முறைப்­ப­டி­யாகச் செய்து வரு­கின்றோம்.

அப்­பளம் உற்­பத்­தி­யையும் என்னால் செய்­ய­மு­டியும். ஆனால் அதற்கு தள­பாட பொருட்கள் அதி­க­ள­வாகத் தேவைப்­ப­டு­வ­தனால் அதனை உட­ன­டி­யாக செய்­ய­மு­டி­யாது. பற்­பொ­டியைப் பொறுத்­த­வ­ரையில் சிறி­ய­ளவில் செய்­தாலும் எமது அன்­றாட தேவையை பூர்த்தி செய்­கின்­றது. நாம் செய்­கின்ற இந்த பற்­பொடி உற்­பத்தி எமது பகு­தியைச் சேர்ந்­த­வர்கள் தேடி வந்து வாங்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. அது மட்­டு­மன்றி ஊரி­லுள்ள ஒரு சில கடை­க­ளுக்கும் இவற்றை வழங்­கி­வ­ரு­கின்றோம்.

இந்த உற்­பத்­தியை நாம் பெரி­ய­ளவில் செய்­வோ­மானால் பல­ருக்கு வேலை­வாய்ப்­பினைக் கொடுக்க முடியும். அதற்­கான மூல­த­னத்­தினை யாரேனும் கட­னாக தரு­வார்­க­ளே­யானால் குறித்த மூன்று மாத காலத்­தி­லேயே அவர்­க­ளுக்கு அதனைத் திருப்பி வழங்­க­மு­டியும். ஆனால் இதற்கு எவ­ருமே முன்­வ­ரு­வ­தில்லை.

அரச திணைக்­க­ளங்­களில் கைத்­தொ­ழி­லுக்­காக கலந்­து­ரை­யா­டல்கள், செய­ல­மர்­வுகள் நடை­பெ­றும்­போது எமக்கு அழைப்பு விடுப்­பார்கள்.ஆனால் உத­விகள் கிடைத்­தப்­பா­டில்லை. உதவி செய்­யலாம் என்­றெல்லாம் கூறு­வார்கள் ஆனால் உதவிதான் கிடைப்பதில்லை. எமக்கு முறையான உதவி கிடைக்குமாயின் சிறு முயற்சியாக செய்கின்ற இந்த உற்பத்திகளை பெரியளவில் செய்து வெளிமாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யமுடியும். எம்மிடம் தொழில் செய்யக்கூடிய அனுபவங்கள் பயிற்சிகள் இருந்தும் உதவிகள் கிடைக்காமையினால் சிறியளவிலேயே செய்கின்றோம். நாம் இத்தகைய உற்பத்திகள் செய்வது பலருக்கும் தெரியும். ஆனால் உதவி செய்வதற்குத்தான் யாரும் முன்வருவதில்லை. எங்களை கையேந்தும் நிலைக்குள் வைத்திருப்பதையே அனைவரும் விரும்புகின்றனர் போல.

எம். நியூட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *