Entertainment

எமோஜி பற்றி அறியாத விஷயங்களை தெரிந்துகொள்வோம்

By  | 

ஜப்பானியர்களின் மொழியே சித்திர எழுத்துகள்தான் என்பதால், அவர்களே எமோஜிக்கு முன்னோடிகளாக உள்ளனர். ‘எமோஜி’ என்ற ஜப்பானிய மூலச்சொல்லானது, படத்தின் மூலம் ஒரு விடயத்தை எழுதிக் காட்டுவது என்பது பொருள். இதில் E என்பது படம் Moji என்பது எழுத்து எனக்கொள்ளலாம்.

இதை எமோட்டிகான் (Emoticon) உடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. அது எழுத்துக்களைக் கொண்டு படத்தோற்றத்தை உண்டாக்குவது. இது படங்களையே எழுத்து போல் பயன்படுத்துவது. உதாரணமாய், சிரிக்க எமோட்டிகானில் எமோஜியில்.

எமோஜி முதன்முறையாக 1998 வாக்கில் ஜப்பானில் அறிமுகமானது.

இவை தற்போது முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உரையாடலையும் வார்த்தைகள் ஏதுமின்றி இந்த எமோஜிக்களால் நிகழ்த்தி விடலாம் என்பது  இதன் சிறப்பம்சமாகும். அல்லது ஒரு கட்டுரையையே எமோஜியில் எழுதி விடலாம். ‘இன்று உலகெங்கிலும் அதிவேகமாக வளர்ந்துவரும் மொழி எமோஜி’ என ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். 2013 இல் இச்சொல் ஒக்ஸ்ஃபோர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டது என்பதே இதன் பரவலை உணர்த்தப் போதுமானது.

இன்று எல்லா பிரபல ஸ்மார்ட் போன்களின் கீபோர்ட்களிலும் எமோஜியைச் சேர்த்து விட்டார்கள். இங்கிலாந்தில் பத்தில் எட்டு பேர் எமோஜி பயன்படுத்துவதாக டாக்டாக் மொபைல் நிறுவனம் செய்த சர்வே ஒன்றின் மூலம் தெரிய வருகிறது. 18 முதல் 25 வயதுடையோரில் 72% பேர் சொற்களை விட எமோஜிக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த பொருத்தமாக இருப்பதாய்ச் சொல்லி இருக்கின்றனர்.

29% பேர் தங்கள் மெசேஜ்களில் பாதியையாவது எமோஜியில் அனுப்புகின்றனர்.ஏற்கனவே வாட்ஸ் அப் குரூப்களில் எமோஜிக்கள் கொண்டு பாடலை அல்லது படத்தைக் கண்டுபிடிக்கும் விடுகதைகள் பிரபலமாக உலா வருகின்றன.

சமீபத்தில் ஆப்பிள் ஐஃபோன்களில் பயிலும் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் 8.3 ரிலீஸில் விதவிதமான தோல் நிறங்களைக் கொண்ட ‘டைவர்ஸி எமோஜி’க்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது வெள்ளைக்காரர்கள், கறுப்பினத்தவர்கள், இந்தியர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இனரீதியாய்ப் பாகுபடுத்தப்பட்ட எமோஜிக்கள். இது உரையாடல்களில் தம்மை இன்னும் நெருக்கமாய் முன்வைக்க உதவும்.

15 ஆண்டுகளாக உலகெங்கிலும் அச்சு ஊடகங்களிலும், மின் ஊடகங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைப் பட்டியலிட்டு அறிவித்து வரும் குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் அமைப்பு, 2014 இல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லாக ஹார்ட் எமோஜியை அறிவித்திருக்கிறது. இப்படி நடப்பது இதுவே முதல் முறை.
எமோஜிபீடியா என்ற தளம் ஒவ்வொரு எமோஜிக்கும் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம்களிலும் ட்விட்டர்,வாட்ஸ் அப் போன்ற app-களிலும் தற்போதைய வடிவம் என்ன, முந்தைய வடிவம் என்ன என ஒப்பீடு செய்து பட்டியல் தருகிறது.எமோஜி ட்ராக்கர் என்ற தளம் ட்விட்டரில் எந்தெந்த எமோஜி அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை லைவாகக் கணக்கிட்டுச் சொல்கிறது. அதன்படி இதுவரை அங்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது ஆனந்தக் கண்ணீர் எமோஜி! இதுவரை சுமார் 80 கோடி முறை அது ட்விட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நாம் பயன்படுத்தும் எமோஜிக்களைக் கொண்டு நம் மனதைப் படிக்க முயல்கிறார்கள் ‘எமோஜி அனலைசிஸ்’ என்ற வலைத்தளத்தில். நீங்கள் சமீபமாகப் பயன்படுத்திய எமோஜிக்களை உள்ளிட்டால், உங்கள் மனதில் உள்ள பிரச்னை என்ன என்பதையும் அதற்கான தீர்வு ஒன்றையும் சிபாரிசு செய்கிறது அந்தத் தளம்.

வங்கி ஏடிஎம், மொபைல் லாக் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் நான்கு எண்களால் ஆன PINகளுக்குப் பதிலாக எமோஜிக்களைப் பயன்படுத்தவும் இப்போது ஆராய்ந்து வருகிறார்கள். 10 எண்களை மாற்றிப் போட்டால் சில ஆயிரம் PINகள்தாம் சாத்தியம். ஆனால், எமோஜிக்களைக் கொண்டு கோடிக்கணக்கான கோர்வைகள் சாத்தியம் என்பது ஒரு காரணம். மனிதர்களுக்கு தகவல்களை விட காட்சிகளை நினைவிற்கொள்வது எளிது.

இன்னொரு பக்கம் இயற்கைப் பேரிடர்களுக்கான குறியீடுகளை எமோஜிக்களாக உருவாக்கினால், அனைவருக்கும் எச்சரிக்கைகளை விடுப்பது எளிதாக இருக்கும் என்பதால், அது குறித்த ஆய்வுகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.

எந்த எமோஜிக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

 

நீங்கள் சந்தோஷமாக இருந்தால் அல்லது மகிழ்ச்சியான செய்திக்கு பதில் அளிக்கும்போது இந்த எமோஜியை பயன்படுத்துங்கள்.

வெட்கம். உங்களை யாராவது வெட்கப்பட வைத்தால் அல்லது காதலில் வெட்கப்பட்டு கன்னம் சிவந்தால், அவர்களுக்கு இந்த எமோஜி கொண்டு பதில் கூறுங்கள்.

கடும் கோபம். உங்களை கோவப்பட வைத்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இந்த எமோஜி பயனளிக்கும்.

 

துக்கம் பெருக்கெடுத்து கண்களில் கண்ணீர் ஓடினால், இந்த எமோஜியை தவிர வேறு எந்த எமோஜியாலும் உங்கள் உணர்ச்சியை தெளிவாக பேச முடியாது.

 

‘சும்மா கடுப்ப கிளப்பாத’ என்று சொல்லாமல் சொல்லும் எமோஜி இது. நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தால் செம்ம கடுப்பில் இருந்தால் இந்த எமோஜி போட்டு மெச்சேஜ் அனுப்புங்கள்.

 

ஏமாற்றம். வெளியே செல்ல திட்டமிட்டு இறுதியில் உங்கள் நணபர்கள் சொதப்பிவிட்டார்களா? அந்த ஏமாற்றத்தை இதில் காமியுங்கள்.

 

அதிர்ச்சி. வாயை பொளக்கும் அளவிற்கு ஷாக்கான ஒரு செய்தி உங்களுக்கு வந்துள்ளதா? அதற்கு தான் இந்த எமோஜி.

கீழே விழுந்து அடிப் பட்டுவிட்டதா? அல்லது தலையில் ஏதேனும் பலமான அடி விழுந்ததா? அப்போது இந்த எமோஜி பயன்படுத்துங்கள்.

 

‘என்ன கொடுமை சார் இது?’ என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த எமோஜி. அடக் கண்றாவியே என்றுக் கூட தலையில் அடித்துக்கொள்ளலாம் அது உங்கள் விருப்பம்.

 

கண்ணில் நீர் வரும் அள்விற்கு ஏதோ ஒரு காமெடி நடந்திருக்கிறது. வயிறு வலிக்க சிறித்து மெச்சேஜ் அடிக்க முடியவில்லையா? இந்த எமோஜியை மட்டும் ஒரு தட்டு தட்டிவிடுங்கள்.

யாரையாவது கேலி செய்ய வேண்டுமா? நீங்கள் போடும் மெச்சேஜுக்கு பின்னால் இந்த எமோஜியும் சேர்த்து போடுங்கள்.

 

இவ்வளவு விஷயம் பேசிட்டு காதல் பற்றி கூறாமல் இருக்கலாமா? உங்கள் மனதில் காதல் அருவி போல் வழிந்தோடுகிறதா? அல்லது உங்கள் காதல் வைரம் போல் பிரகாசமாய் இருக்கிறதா? உங்கள் பயன்பாட்டிற்காகவே இந்த எமோஜி.

ஜாலியாக பார்ட்டி பண்ணலாம் என்று தோன்றுகிறதா? அல்லது டேன்ஸ் ஆடணும் போல இருக்கா? அப்போ இந்த எமோஜியை போட்டு ஒரு ஆட்டம் போடுங்க.

செம்ம டென்ஷனாக இருந்தால் இந்த எமோஜி உபயோகப்படும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *