Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: “உணர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுங்கள்”

By  | 

கேள்வி:
எனக்கு திரு­ம­ண­மாகி இரண்டு மாதங்கள் ஆகின்­றன. என் வீட்டில் நான், எனது பெற்றோர் மற்றும் என் மனைவி ஆகியோர் மட்­டுமே இருக்­கிறோம். எனது வீட்­டுக்கும் அலு­வ­ல­கத்­துக்கும் நீண்ட தூரம் என்­பதால், காலை ஆறு மணிக்கே வேலைக்குக் கிளம்­பி­வி­டுவேன். இரவு பத்து மணி ஆகி­விடும் வீடு திரும்ப! ஞாயிறு அன்று மட்­டுமே விடு­முறை. அன்­றைய தினம் எனது மனை­வி­யுடன் சந்­தோ­ஷ­மாகப் கதைத்து மகிழ வேண்டும் என்று விரும்­பு­கிறேன். ஆனால், அவரோ என்­னிடம் முகங்­கொ­டுத்தும் கதைப்­ப­தில்லை. எப்­போது பார்த்­தாலும் என் பெற்றோர் பற்­றியே குறைகள் கூறு­கிறார். இதனால், அடிக்­கடி பிரச்­சி­னைகள் எழு­கின்­றன. இதைத் தவிர்ப்­பது எப்­படி?

பதில்:
கதைத்துத்தான்!
பிரச்­சினை உங்­க­ளிடம்தான் இருக்­கி­றது. உங்கள் மனைவி ஏன் கோபப்­ப­டு­கிறார்; உங்கள் பெற்றோர் மீது ஏன் குற்றம் சுமத்­து­கிறார் என்­பது இன்­னமும் உங்­க­ளுக்கு விளங்­க­வில்லை.

நீங்கள் வீட்டில் இருக்கும் நேரம் மிக மிகக் குறை­வாக இருக்­கி­றது. அந்தக் குறு­கிய நேரத்­திற்குள், உங்கள் மனை­விதான் வீட்டில் பிரச்­சினை ஏற்­ப­டுத்­து­கிறார் என்­பதை உங்­களால் எப்­படிச் சொல்ல முடியும்? அனேகம் பேர் ஒரு­வ­ரையே குறை சொல்­கி­றார்கள் என்­பதை வைத்து நீங்கள் இந்த முடி­வுக்கு வரு­வது தவறு. பிரச்­சி­னைகள் இரு தரப்­பி­ன­ராலும் ஏற்­ப­டலாம். இப்­படிச் சொல்­வதால், உங்கள் பெற்­றோரைக் குறை சொல்­வ­தாக நினைத்­து­வி­டா­தீர்கள்.

பெரும்­பாலும் குடும்­பத்தில் பிரச்­சி­னைகள் வரு­வது கருத்து வேறு­பா­டு­க­ளால்தான். கண­வன்-­ ம­னைவி இரு­வரும் ஒரு­வரை ஒருவர் முழு­மை­யாக புரிந்துகொள்­வ­தில்லை. முதலில் உங்கள் மனை­வியை ஆழ­மாக நேசி­யுங்கள்; நம்­புங்கள். நீங்கள் இத்­தனை வரு­டங்­க­ளாக உங்கள் குடும்­பத்­தி­ன­ரு­ட­னேயே இருக்­கி­றீர்கள். ஆனால், உங்கள் மனைவி? உங்கள் குடும்­பத்தைத் தன் குடும்­ப­மாக எண்ணி வாழப் பணிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இது­போன்ற சந்­தர்ப்­பத்தில் சில கருத்து வேறு­பா­டுகள், பழக்க வழக்க வேறு­பா­டுகள் என்று பல விட­யங்­க­ளிலும் அவர் விட்­டுக்­கொ­டுக்­க­வேண்­டி­யி­ருக்கும். அதற்கு அவ­ருக்கு உங்கள் உத­வியே முழு­மை­யாகத் தேவைப்­படும்.

முதலில், அவ­ரது உணர்­வு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுங்கள். அவ­ரது தேவை­களைப் புரிந்­து­கொண்டு நிறை­வேற்­றுங்கள். நீங்கள் உங்கள் மனை­வி­யிடம் ஒரு மடங்கு அன்பைக் காட்­டினால், அவர் பதி­லுக்கு நூறு மடங்கு அன்பைத் திருப்பித் தருவார். பெண்­மைக்கு மட்­டுமே உள்­ளது இந்த தாராள குணம். இதைப் புரிந்­து­கொண்டால் உங்கள் மனைவி உங்கள் மந்­திரத்­திற்குக் கட்­டுப்­பட்­டு­வி­டுவார். அவ­ருக்கு நீங்கள் சொல்­வதே வேதம் என்­றா­கி­விடும். சிலர் வார்த்­தை­களில் மட்­டுமே அன்பைக் காட்ட முயற்­சிப்பர். அன்பை வார்த்­தை­களில் மட்டும் காட்ட முடி­யுமா? நீங்கள் செய்யும் ஒவ்­வொரு செய­லிலும் அன்பு வெளிப்­பட வேண்டும். வெறும் இரண்டு மணி­நே­ரமே (ஆறு மணி­நேரம் நித்­தி­ரைக்குச் செல­வி­டு­வீர்கள் என்று வைத்­துக்­கொண்டால்) வீட்டில் இருக்கும் நீங்கள், உங்கள் மனைவி மீதான அன்பை எப்­படி வெளிக்­காட்­டு­கி­றீர்கள் என்று யோசி­யுங்கள். புதுப்­பெண்­ணுக்கு அன்பு அதிகம் தேவைப்­ப­டு­கி­றது. தாலி கட்­டி­னாலே அவள் நமக்கு அடி­மைதான் என்று ஒரு­போதும் எண்ணிவிடா­தீர்கள். அதேபோல், உங்கள் பெற்றோர் மற்றும் அண்ணன் குடும்­பத்­தினர் சொல்­வதை மட்­டுமே நம்பி, நீங்கள் மனை­வி­யுடன் கோபித்­துக்­கொள்­வது மிக மிகத் தவறு.

உங்கள் இரு­வ­ருக்­குள்ளும் உள்ள சுதந்­தி­ரத்தில் வேறு எவரும் தலை­யிட முடி­யாத அளவில் பார்த்­துக்­கொள்­ளுங்கள். தேவை­யற்ற குறுக்­கீ­டு­களைத் தடுத்து விடுங்கள்.
நீங்கள் உங்கள் மனை­வியை நேசிக்­கி­றீர்கள் என்­பதை உங்­க­ளது கேள்­வியே வெளிப்­ப­டுத்­து­கி­றது. ஆகையால், இந்தப் பிரச்­சி­னையை இல­கு­வாக உங்­களால் தீர்க்­கலாம்.
நிறைய மனம் விட்டுப் பேசுங்கள். ஒரு­வ­ரிடம் மற்­றவர் நெருங்கி வரும் சூழ்­நி­லை­களை உரு­வாக்­கிக்­கொள்­ளுங்கள். திரு­ம­ண­மான புதிதில், பெண்­ணுக்குப் பிறந்த வீட்டின் மீதான நினை­வுகள் அதி­க­மாக இருப்­பது இயற்­கைதான்.

அப்போது அவரை அவ­ரது உற­வி­னர்கள் வீடு­க­ளுக்கு அழைத்துச் செல்­வதோ அல்­லது குடும்­பத்­தி­ன­ருடன் பேசு­வ­தற்கோ வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுங்கள். முடிந்தால், நினைத்த மாத்­தி­ரத்தில் தொடர்­பு­கொள்ளும் வச­தி­களைச் செய்­து­கொ­டுங்கள். அப்­படிச் செய்­யும்­போது அவர் பாது­காப்­பா­கவும் குடும்­பத்­துடன் இருப்­பது­போ­லவும் உணர்வார்.

இதனால் அவருக்கு மனதில் உள்ள இறுக்கம் தளர்ந்து விடும். அவ­ரது உணர்­வு­க­ளுக்கு நீங்கள் முக்­கி­யத்­துவம் கொடுப்­பதால், அவ­ரு­டைய உள்­ளத்தில் நீங்கள் இடம்பிடித்­து­வி­டு­கி­றீர்கள். இரு­வ­ரது உற­வுக்கும் இடையில் உள்ள அன்­பிற்குப் பால­மாக இருப்­பது உட­லு­ற­வுதான். அதனால் அதற்கு நீங்கள் அவ­சியம் முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும்.இல்­லற வாழ்வை இனி­மை­யாக்க உத­வு­வது அன்பு ஒன்­றுதான். நீங்கள் இரு­வரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் அன்­பொ­ழுக நடந்துகொள்­ளும்­போ­துதான் இல்­லறம் மணக்கும்; இனிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *