Astrology

மித்திரனின் வார­பலன் 22.07.2018 முதல் 28.07.2018 வரை

By  | 

மேஷம்:நண்பர் மற்றும் உறவினர் உதவுவர். மனதில் தைரியம் வளரும். திட்டமிட்ட பணி சிறப்பாக நிறைவேறும். வாழ்வியல் நடைமுறை திருப்திகரமாகும். பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள். உடல் ஆரோக்கியம் பலம்பெறும். மனைவி உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவார். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: புதன்

ரிஷபம்:உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். சிறு பணியிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். உறவினர்களிடம் கூடுதல் அன்பு வளரும். பிள்ளைகளின் செயல்பாடு சிறக்க உதவுவீர்கள். நண்பர்க்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவியின் அன்பு நெகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடக்கும்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மிதுனம்:புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். அன்புக்கு உரியவரின் உதவி ஊக்கம் தரும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவர். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவி குடும்பத்தின் ஒற்றுமையை பாதுகாத்திடுவார். பெண்கள் மனம் விரும்பிய நகை, புத்தாடை வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கடகம்:செயல்களில் உற்சாகம் வெளிப்படும். உங்களின் நற்செயலை பலரும் பாராட்டி மகிழ்வர். பிள்ளைகள் செயலில் உருவாகும் குளறுபடியை சரி செய்யுங்கள். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும். மனைவி வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

சிம்மம்:மனதில் உற்சாகம் பிறக்கும். முக்கியமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பெற்றோரின் சொல்லை ஏற்பதில் தயக்கம் கொள்வர். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் கணவரின் அன்பை பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

கன்னி:இடம் சூழல் உணர்ந்து பேசுவீர்கள். செயல்களில் அளப்பரிய நன்மை கிடைக்கும். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு மற்றும் அறிவாற்றல் மேம்படும். மனைவி அதிக அன்புடன் நடந்து கொள்வார். வெளியூர் பயணம் மூலம் இனிய அனுபவம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

துலாம்:உங்கள் செயல்களில் மனிதாபிமானம் நிறைந்திருக்கும். விலகிச் சென்றவரும் விரும்பி அன்பு பாராட்டுவர். தாயின் அன்பும், ஆசியும் ஊக்கம் தரும். பிள்ளைகளின் மனதில் தெளிவும், அறிவுக்கூர்மையும் ஏற்படும். மனைவியின் கருத்தில் உள்ள நியாயங்களை உணர்ந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்..
அதிர்ஷ்ட நாள்: சனி

விருச்சிகம்:செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சமூக நிகழ்வு இனிய படிப்பினையை தரும். பிள்ளைகள் விரும்பிய பொருள் கேட்டு பிடிவாதம் செய்வர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பநலன் மேம்பட மனைவி உதவிகரமாக இருப்பார். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

தனுசு:உங்கள் நல்ல குணத்தை நண்பர் பாராட்டுவார். பேச்சு, செயலில் நிதானம் நிறைந்திருக்கும். குடும்பத்தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும். பிள்ளைகளின் அறிவாற்றல் செயல்திறன் மேம்பட உதவுவீர்கள். மனைவி உறவினர்களை உபசரித்து குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மகரம்:சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். கடந்த கால நற்செயல்களுக்கான பலன் கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோரின் சொல்லை ஏற்று செயல்படுவர். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனைவியின் அன்பு நிம்மதி அளிக்கும். பெண்கள் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: புதன்

கும்பம்:எதிர்பார்த்த சில நன்மை முழு அளவில் கிடைக்கும். உடன்பிறந்தவரின் செயலை குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகள் உங்கள் வார்த்தையை மதித்து செயல்படுவர். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை குறையும். மனைவி குடும்பநலன் பேணிக் காத்திடுவார். பெண்கள் சிக்கனம் பின்பற்றுவர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

மீனம்:தந்தை வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் ஓரளவு நிறைவேறும். பிள்ளைகளின் படிப்பு, உடல் ஆரோக்கியத்தை பேணிக் காத்திட வேண்டும். மனைவியின் சொல்லும், செயலும் குளறுபடியாகலாம். குடும்பத்தில் ஒற்றுமையை பாதுகாக்கவும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *