Cookery

முட்டை பிரியாணி செய்முறை 

By  | 

தேவையான பொருட்கள்

  • முட்டை – 5
  • அரிசி – 2 கப்
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 3
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  • மசாலா தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • தயிர் கால் கப்
  • தேங்காய் பால் – கால் கப்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • நெய் – 1 டீஸ்பூன்
  • பட்டை 1
  • கிராம்பு 2
  • ஏலக்காய் 2

செய்முறை 

*வெங்காயம், தக்காளியை வெட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

*பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் மசாலாதூள் போட்டு கிளறி விடவும்.

*அதனுடன் தேங்காய் பால், தயிர் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற கணக்கில் 4 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து அதன் பிறகு அரிசியை போடவும்.

*10 நிமிடம் கழித்து அதனுடன் முட்டையை பொன்னிறமாக பொரித்து கிளறி இறக்கி விடவும். கமகமக்கும் முட்டை பிரியாணி தயார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *