Stories

மனைக்கு உரியவள் மனைவி

By  | 

அவர் எதற்­கெ­டுத்­தாலும் மனை­வி­யுடன் சண்டை போட்­டுக்­கொண்டே இருந்தார்.

“ஒரு நாள் ‘ஒபீஸ்’ போய் வேலை செய்து பார். சம்­பா­திப்­பது எவ்­வ­ளவு கஷ்டம் என்று புரியும்” என்று அடிக்­கடி சவால் விடுவார்.

அவள் ஒரு நாள் பொறுமை இழந்து, “ஒரு நாள் நீங்க வீட்ல இருந்து பசங்­களை பார்த்­துக்­கோங்க.. காலைல குளிப்­பாட்டி சாப்­பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடை அணி­வித்து பள்­ளிக்கு அனுப்­புங்க. அதோடு சமைப்­பது துவைப்­பது எல்­லாத்­தையும் செஞ்­சுதான் பாருங்­களேன்” என எதிர் சவால்­விட்டாள்..

கண­வனும் அதை ஏற்­றுக்­கொண்டான்.அவன் வீட்டில் இருக்க இவள் ஒபீஸ் போனாள். ஒரே குப்பை, கூள­மாக கிடந்­தது ஒபீஸ். முத­லா­ளியின் மனைவி என்­பதை மனதில் கொள்­ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதி­வேட்டை சரி­பார்த்து தாம­தமாய் வரு­ப­வர்­களை கண்­டித்தாள். கணக்கு வழக்­கு­களைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்­டுக்குப் புறப்­பட நினைத்­த­போது, ஓர் அலு­வ­லரின் மகளின் திரு­மண வர­வேற்பு குறித்து உத­வி­யாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்­கிக்­கொண்டு கல்­யாண மண்­ட­பத்­துக்கு சென்றாள்.

கணவர் வரா­த­தற்கு பொய்­யான காரணம் ஒன்றை சொல்­லி­விட்டு, மண­மக்­களின் கட்­டா­யத்தால் சாப்­பிட சென்றாள். பந்­தியில் உட்­கார்ந்­த­வ­ளுக்கு சிந்­த­னை­யெல்லாம  வீட்டைப் பற்­றியே.

இலையில் வைத்த ‘ஜாங்­கி­ரியை’ மூத்­த­வ­னுக்கு பிடிக்கும் என்று கைப்­பையில் எடுத்து வைத்தாள். முறுக்கு கண­வ­னுக்குப் பிடிக்­குமே என்று அதையும் கைப்­பைக்குள் வைத்­துக்­கொண்டாள். அவள் சாப்­பிட்­டதை விட, பிள்­ளை­க­ளுக்கும் கண­வ­னுக்கும் என பைக்குள் பதுக்­கி­யதே அதிகம்.

ஒரு வழியாய் வீடு வந்து இறங்­கி­யவள், கணவன் கையில் பிரம்­போடு கோபத்­துடன் அங்கும் இங்­கு­மாக நடந்­து­கொண்­டி­ருந்­ததைப் பார்த்தாள்.

இவளை பார்த்­ததும், “பிள்­ளையா பெத்து வச்­சி­ருக்க..? அத்­த­னையும் குரங்­குகள். சொல்­றதை கேட்க மாட்­டேங்­குது. படின்னா படிக்க மாட்­டேங்­குது. சாப்­பி­டுன்னா சாப்­பிட மாட்­டேங்­குது. அத்­தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்­சி­ருக்கேன். பாசம் காட்­டு­றேன்னு பிள்­ளை­கள கெடுத்து வச்­சி­ருக்கே” என்று பாய,அவளோ “அய்­யய்யோ பிள்­ளை­களை அடிச்­சீங்­களா?” என்­ற­வாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழு­கையும் பொரு­ம­லுமாய் பிள்­ளைகள்.

விளக்கை போட்­டவள் அதிர்ச்­சி­யுடன், “ஏங்க. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்­சீங்க..? இவன் எதிர்­வீட்டு பைய­னாச்சே” என்றுஅலற “ஓஹோ…

அதான் ஓடப் பார்த்­தானா..!” என கணவன் திகைக்க, அந்த நிலையில் இரு­வ­ருக்கும் ஒன்று புரிந்­தது.

‘இல்லாள்’ என்றும் ‘மனைக்கு உரி­யவள் மனைவி’ என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதா­தை­யர்கள் சொல்­வது சும்மா இல்லை.

இல்­லத்தைப் பரா­ம­ரிப்­ப­திலும் பிள்­ளை­க­ளுக்கு வள­மான வாழ்க்­கையை அமைத்துக் கொடுப்­ப­திலும் ஒரு பெண்ணின் பங்கு தலை­யா­யது. அது­போல, பொரு­ளீட்டி வரக்­கூ­டிய ஆண்­களின் பங்கும் அளப்­ப­ரி­யது.

ஆனால் இரு­வரும் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்­ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது.

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால்தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *