Biodata

நட்சத்திரங்களின் வாழ்க்கைத் துணை: மனந்திறக்கிறார் நடிகர் விஜய் அண்டனி

By  | 

கல்­யாண வாழ்க்­கையைப் பத்­தின கன­வுகள் எதுவும் எனக்கு இருந்­த­தில்லை. எனக்கு அப்பா கிடை­யாது. அம்­மாவும் தங்­கச்­சியும் மட்­டும்தான். அவங்­க­ளோட பாசத்தைத் தவிர வேற எதுவும் தெரி­யாது. ஒவ்­வொரு முறை கல்­யாணப் பேச்சு வரும்­போதும், எனக்­குள்ளே ஒரு கேள்வி எழும். ‘யாரோ முகம் தெரி­யாத, பழக்­க­மில்­லாத ஒரு பொண்­ணால, நம்­ம­கிட்ட எப்­படி அன்பைக் காட்ட முடி­யும்’னு தோணும். ‘அது சாத்­தி­யமே இல்­லை’ன்னு எனக்கு நானே பதிலும் சொல்­லிக்­குவேன். மனசு நிறைய அன்­பி­ருந்­தாலும், அதை எப்­படி வெளிப்­ப­டுத்­த­ணும்னு தெரி­யாது எனக்கு. யாருக்­கா­வது பிறந்த நாள்னா, கிஃப்ட் வாங்கிக் கொடுக்­க­ணும்­னு­கூட தெரி­யாது. அப்­ப­டிப்­பட்ட என்னை யாரா­வது காத­லிப்­பாங்­களா? ‘காத­லிக்­கவோ, காத­லிக்­கப்­ப­டவோ லாயக்­கில்­லா­த­வன்’­கி­றது என்னைப் பத்­தின என்­னோட சுய மதிப்­பீடு.’’ என்ற எனது எண்­ணத்தை மாத்­தி­ன­வங்க ஃபாத்­தி­மாதான் என தன் மனைவி பற்றி பேச ஆரம்­பிக்­கின்றார் இசை­ய­மைப்­பா­ளரும் நடி­க­ரு­மான விஜய் அண்­டனி.

யாரந்த ஃபாத்­திமா?
மிகவும் பிர­ப­ல­மான நிகழ்ச்சித் தொகுப்­பா­ளினி ஃபாத்­திமா ஹனி­டியூ!
ஃபாத்­திமா ஹனி­டி­யூவை, விஜய் ஆண்­டனி காதல்!
நான் இசை­ய­மைச்ச முதல் பட­மான ‘சுக்ரன்’ ரிலீ­சா­கி­யி­ருந்த நேரம்… எனக்கு ஒரு போன் வந்­தது. அந்தப் பக்கம் ஒரு இனி­மை­யான பெண் குரல். ‘சுக்ரன்’ பாட்டு கேட்டேன். பிர­மா­தமா பண்­ணி­யி­ருந்­தீங்­கன்னு ஆரம்­பிச்சு, கிட்­டத்­தட்ட பதி­னஞ்சு நிமிஷம் பேசி­னாங்க. அந்தப் பேச்சு வாழ்நாள் முழுக்க தொட­ரப்­போ­கு­துன்னு சத்­தி­யமா அப்போ நினைக்­கலை. இது நடந்­தது ஒரு நாள் மாலை ஆறரை மணிக்கு. ரெண்டு பேர் வீடு­களும் ஒரே ஏரி­யாங்­கி­றது தெரிஞ்­சதும், அன்­னிக்கு நைட் எட்­டரை மணிக்கு நாங்க நேர்ல சந்­திச்சோம். அவங்­கதான் ஃபாத்­திமா ஹனி­டியூ. முதல் சந்­திப்­பு­லேயே பல வருஷம் பழ­கின மாதிரி ஓர் அன்­யோன்­யத்தை உணர்ந்தேன். எங்க வீட்­டுக்கு வந்­தாங்க. எங்­கம்­மா­வுக்கும் அவங்­களைப் பார்த்­ததும் பிடிச்சுப்போச்சு.
அடுத்த நாள் நான், என் அம்­மா­கூட அவங்க வீட்­டுக்கு டின்­ன­ருக்கு போனேன். எங்­கம்­மாவும் அவங்­கம்­மாவும் பேசிக்­கிட்­டி­ருந்­தப்ப, ஃபாத்­தி­மா­வுக்கு மாப்­பிள்ளை பார்த்­திட்­டி­ருக்­கிற விஷ­யத்தை அவங்­கம்மா சொன்­னாங்க. கிளம்பும்போது, ஃபாத்­தி­மா­கிட்ட போய், ‘உங்­க­ளுக்கு மாப்­பிள்ளை பார்க்­கி­றதா உங்­கம்மா சொன்­னாங்க. அந்த லிஸ்ட்­டுல என் பேரையும் சேர்த்­துக்­கோங்­க’ன்னு சொன்னேன். என்னைப் பொறுத்த வரை அதுதான் புர­போசல். எப்­படி ரியாக்ட் பண்­ணு­வாங்­க­ளோன்னு பயந்­தப்ப, அவங்­க­ளோட சிரிப்பு எனக்கு சம்­ம­தம்னு சொல்­லாம சொல்­லுச்சு. அடுத்த நாள் எஸ்.எம்.எஸ்ல நிறைய பேசிக்­கிட்டோம். நாலா­வது நாள் அவங்க மறு­படி எங்க வீட்­டுக்கு வந்­தாங்க. அப்போ என் ஃபிரெண்ட்ஸ்­கிட்ட அவங்­களை ‘என் ஒயிஃப்’னு அறி­மு­கமே படுத்­திட்டேன். வெறும் நாலே நாள்ல எல்லாம் நல்­ல­ப­டியா நடந்து முடிஞ்­சது. ‘அட… என் வாழ்க்­கை­யி­லேயும் காதல்… என்னை நேசிக்­கவும் ஒருத்­தி’ங்­கிற அந்த ஃபீலிங் ரொம்ப வித்­தி­யா­சமா இருந்­தது…’’

அந்த டைம்ல நான் இவ்ளோ பிர­பலம் இல்லை. நிறைய படங்கள் பண்­ணலை. ‘நீ எப்­படி லும் எனக்குப் பர­வா­யில்லை. உன்னை நான் நேசிக்­கி­றேன்’னு என் வாழ்க்­கைக்­குள்ளே வந்­த­வங்க அவங்க. 2005 டிசம்பர் 30ஆம் திகதி கல்­யாணம். ஒரு படத்­துக்கு மியூசிக் போடு­றப்ப, குறிப்­பிட்ட சில பாடல்கள், அந்த வருஷம் சூப்பர் ஹிட் ஆகும்னு மன­சுக்­குள்ள ஒரு நம்­பிக்கை வரும். ஃபாத்­தி­மாவை கைப்பிடிச்ச அந்தத் தருணம் அப்­ப­டித்தான் இருந்­தது எனக்கு. ‘இவங்­கதான் நமக்­கேத்த லைஃப் பார்ட்னர். இனி எல்லாம் சுகம்’னு அந்தக் கணம் ஒரு நம்­பிக்­கையைக் கொடுத்­தது. அந்த வகை­யில நான் ரொம்ப அதிர்ஷ்டக்­காரன். மனசு சொன்­னதைக் கேட்டேன். அது இன்­னிக்கி வரைக்கும் தப்­பா­கலை…’’

சந்­தோஷம்!
அன்பு, பாசம், காதல்னு வாழ்க்­கையை ரச­னை­யோட வாழக் கத்துக் கொடுத்­த­வங்க என் ஒயிஃப்தான். நமக்குப் பிடிச்ச ஒரு ஃபிரெண்ட், எப்­போதும் நம்ம கூடவே… ஒண்ணா சாப்­பிட்டு, ஒண்ணா தூங்கி நம்ம நிழல் போல இருந்தா எப்­படியிருக்கும்? ஃபாத்­திமா எனக்கு அப்­ப­டித்தான். எங்­கேயோ பிறந்து, வளர்ந்த யாரோ ஒரு மூணா­வது மனு­ஷிக்கு நம்ம மேல எப்­படி அன்பு வரும்னு யோசிச்ச எனக்கு, அந்த அன்பை திகட்டத் திகட்ட காட்டி, திக்கு முக்­காட வச்­ச­வங்க என் ஒயிஃப். என்னை எனக்கே அறி­மு­கப்­ப­டுத்­தின அற்­புத மனுஷி அவங்க.

தொழில் வேறு; குடும்பம் வேறு
ஆணோட வெற்­றிக்குப் பின்­னால ஒரு பெண் இருப்­பாள்னு சொல்­றது என் விஷ­யத்­துல நூத்­துக்கு இரு­நூறு சத­வி­கித நிஜம். என் மனை­விக்குப் பெரிய இசைப் பின்­ன­ணியோ, ஞானமோ கிடை­யாது. கல்­யா­ணத்­துக்கு முன்­னா­டியும் சரி, கல்­யா­ணத்­துக்குப் பிறகும் சரி, என்­னோட பாடல்கள் எதையும் நான் அவங்­க­ளுக்குப் போட்டுக் காட்டி, அபிப்­ராயம் கேட்­ட­தில்லை. என்னைப் பொறுத்த வரை தொழில் வேறு; குடும்பம் வேறு. அதை அவங்க ரொம்பத் தெளிவா புரிஞ்­சுக்­கிட்­ட­தா­லதான், என்­னால இத்­தனை தூரம் வர முடிஞ்­சது.

தாயைப் போன்ற மனைவி
நான் ஒரு டெக்­னீ­ஷியன். சரி­யான நேரத்­துல மியூசிக் கொடுக்க வேண்­டி­யது என் கட­மைன்னு அவங்­க­ளுக்கு நல்­லாவே தெரியும். என் வேலை­யில உள்ள அழுத்­தங்கள், சுமை­கள்னு எல்லாம் புரிஞ்­ச­வங்க. சரா­சரி கணவன் மாதிரி என்­னால அவங்­க­ளுக்­காக நேரம் ஒதுக்க முடி­யாது. சொன்னா கொஞ்சம் காமெ­டியா இருக்கும். கல்­யா­ண­மாகி இத்­தனை வரு­ஷங்­க­ளா­கியும், இன்னும் நாங்க ஹனிமூன் கூட போகலை. அதுக்­காக ஒரு­நாள்­கூட என்­கிட்ட சண்டை போட்­ட­தில்லை அவங்க. குடும்ப விஷ­யங்கள் எது­வுமே என்னை பாதிக்­காத அள­வுக்கு அத்­தனை அழகா வழி­ந­டத்­து­வாங்க. என் வேலை­யில எந்த டென்­ஷனும் வந்­துடக் கூடா­துங்­கி­ற­துல கவ­னமா இருப்­பாங்க. நான் தூங்­க­றேன்னா, அந்த இடத்தை அவ்­வ­ளவு அமை­தியா வச்­சி­ருப்­பாங்க. சுருக்­கமா சொன்னா, என்­னையும் சேர்த்து அவங்­க­ளுக்கு ரெண்டு குழந்­தைங்க. ஒரு அம்மா, தன் குழந்­தையை எப்­ப­டி­யெல்லாம் செல்­லமா, அன்பா பார்த்­துப்­பாங்­களோ, அதே மாதிரி என்­னையும் கவ­னிச்­சுப்­பாங்க.

நடிகர் அவ­தாரம்
நடிக்கப் போறேங்­கிற என் எண்­ணத்தைச் சொன்­னதும் முதல்ல ரொம்பத் தயங்­கி­னாங்க. நடிப்­புங்­கி­றது சாதா­ரண விஷ­யமா, அது அவ­சி­ய­மான்னு நிறைய கேள்வி கேட்­டாங்க. ‘இசைங்­கி­றது கடவுள் கொடுத்த வரம். அது எல்­லா­ருக்கும் கிடைக்­கா­து’ங்­கி­றது அவங்க எண்ணம். அதுவும் அப்ப நான் பயங்­கர பீக்ல இருந்த டைம்… நடிப்பு தேவை­யான்னு ரொம்ப யோசிச்­சாங்க. ஆனா, எனக்கு அந்த விஷ­யத்­துல மறு­ப­ரி­சீ­ல­னையே இல்லை. காலை­லே­ருந்து ராத்­திரி வரைக்கும் நடிப்­புக்­கான விஷ­யங்­கள்ல பிஸியா இருப்பேன். ராத்­திரி எல்­லாரும் தூங்­கின பிறகு என் மியூசிக் வேலை­களைப் பார்ப்பேன்.

கொஞ்ச நாள் இதை­யெல்லாம் கவ­னிச்­சிட்­டி­ருந்த என் ஒயிஃப், மனசு மாறி­னாங்க. நடிப்பு வேணாம்னு சொன்ன அவங்­கதான், எனக்­காக பார்த்துப் பார்த்து டயட் சாப்­பாடு சமைச்சுக் கொடுக்­கி­ற­து­லே­ருந்து, என் பட வேலை­களைப் பார்க்­கி­றது வரை எல்லா பொறுப்­பு­க­ளையும் விரும்பி ஏத்­துக்­கிட்­டாங்க.

‘நான்’ பட ரிலீஸ் டைம்ல, ராத்­திரி ரெண்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி, ஒவ்­வொரு ஏரி­யாவா நேர்ல போய் பார்த்து, போஸ்­ட­ரெல்லாம் சரியா ஒட்­டி­யி­ருக்­காங்­க­ளான்னு செக் பண்­ணிட்டு, விடிஞ்ச பிற­குதான் வீட்­டுக்கே வரு­வாங்க. அவங்­க­ளோட அந்த அர்ப்­ப­ணிப்பும், என் மேல உள்ள அக்­க­றையும் பல முறை என்னை நெகிழ வச்­சி­ருக்கு. இப்ப என் படங்­க­ளுக்கு ஒரு புரொ­டி­யூ­சரா ஒர்க் பண்ற அள­வுக்கு அவங்­க­ளுக்கு என் மேல நம்­பிக்கை வந்­தி­ருக்கு. இன்­னிக்கு நான் சோர்ந்து போய் உட்­கார்ந்­தா­கூட, ‘உங்­க­ளால முடியும்…’னு சொல்லி, என்னை என்­கரேஜ் பண்­றதே அவங்­கதான். நடிக்­கி­ற­தோட என் வேலை முடிஞ்­சுடும். பூஜை­யில தொடங்கி, படம் தியேட்­ட­ருக்கு வர்ற வரைக்­கு­மான அத்­தனை வேலை­களும் அவங்க பொறுப்­புதான்!

எளிமை விரும்பி
எந்தக் கால­கட்­டத்­து­லேயும், எந்த இடத்­து­லேயும் விஜய் ஆண்­ட­னிங்­கிற மியூசிக் டைரக்­ட­ரோட மனை­வியா தன்னை தனிச்சுக் காட்­டிக்­கி­ற­தையோ, விளம்­ப­ரப்­ப­டுத்­திக்­கி­ற­தையோ விரும்ப மாட்டாங்க. காய்கறிக் கடைக்குப் போறதையும், மீன் மார்க்கெட் போறதையும் விரும்பற சாதாரண இல்லத்தரசியா வாழறதையே விரும்புவாங்க. அப்படியோர் எளிமை விரும்பி அவங்க.

ஆசை
‘வாழ்க்கையில உனக்கென்ன ஆசை’ன்னு கேட்டா, அவங்க எப்போதும் சொல்ற விஷயம் ஒண்ணே ஒண்ணுதான். ‘எப்போதும் உங்க பக்கத்துல நான் இருக்கணும். ஒரு சின்ன ரூம்… ஒரு கப் கோப்பி… விடிய விடிய பேச்சு… அதுதான் சொர்க்கம்’பாங்க. சிம்பிளான அந்தக் கோரிக்கையை நிறைவேத்தறதுதான் எனக்கும் பெரிய சவால். வரப்போற வருஷத்துலேருந்து வாரத்துல ஒரு நாள் குடும்பத்துக்காக மட்டும்னு சபதம் எடுக்கலாம்னு இருக்கேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *