ஒவ்வொரு நாளும் ஏதாவது சிறப்பு கொண்டதாகத் தான் இருக்கிறது. ஜூலை 29 ஆம் திகதியை தேசிய லிப்ஸ்டிக் தினமாகக் கொண்டாடுகிறது அமெரிக்கா. அதே நாளில் உலகளவில் பல நாடுகளிலும் பியூட்டி சலூன்கள் இந்த நாளை கடைபிடித்துவந்தன.

சமீப காலமாக இந்தியாவில் அழகுப் போட்டிகளும் சர்வதேச அழகிப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களும் அதிகரித்து வரும் நிலையில் இங்கும்கூட பியூட்டி சலூன்களால் லிப்ஸ்டிக் தினம் கொண்டாடப்படுகிறது.

அப்படித்தான் மும்பையைச் சேர்ந்த பியூட்டி அண்ட் காஸ்மெடிக் நிறுவனம் லிப்ஸ்டிக் தினம் கொண்டாடுவதாகவும் அதற்கென சலுகைகளையும் அறிவித்துள்ளது.

முன்னணி பிராண்டுகள் லிப்ஸ்டிக்கை அன்றைய தினம் 30% சலுகையில் விற்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

லிப்ஸ்டிக் தின குறுவரலாறு..
2016-ல் அழகுக் குறிப்புகள் எழுதும் வலைபதிவரும் தொழில் முனையும் இளம் பெண்ணுமான ஹூதா கட்டன் ஜூலை 29 ஆம் திகதியை லிப்ஸ்டிக் தினம் என சுயமாக அறிவித்தார்.

இந்த தினம் அமெரிக்காவில் பிரபல பியூட்டி சலூன்களில் பிரபலமானது. அதன் பின்னர், 3 ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் லிப்ஸ்டிக் தினம் அனுசரிக்கப்படுகிறது.