Interview

இலாபம் பெருக்கும் வடகம் தயாரிப்பு

By  | 

“உள்ளூர் உற்­பத்­தி­க­ளுக்கு ஊக்­கு­விப்­புக்கள் சிறப்­பாக அமை­யு­மாயின் சுய­தொழில் முயற்­சியை சிறப்­பா­ன­தா­கவும் சுகா­தார முறை­யிலும் செய்ய முடியும்” என ‘டொப் ஆரோக்­கியம்’ எனும் பெயரில் மூலிகை மற்றும் ஏனைய உற்­பத்­தி­களை செய்­து­வரும் திரு­மதி. அ.கலா­சோதி தெரி­விக்­கிறார்.

காய்­கறி விலை உயர்வு, பர­ப­ரப்­பான வாழ்க்கை முறையில் சமைக்க நேர­மின்மை ஆகிய கார­ணங்­களால் வீட்டு உணவில் ‘வடகம்’ அதிகம் இடம்­பி­டிக்­கி­றது.
பாரம்­ப­ரிய வட­கத்தில் மாற்­றங்­களை புகுத்தி தயா­ரிப்­பதால், அனைத்து தரப்­பி­னரும் விரும்பி சாப்­பி­டு­வார்கள். இதனால் வட­கத்­துக்கு நிரந்­தர விற்­பனை வாய்ப்பு உள்­ளது. அக்­கம்­பக்க வீடு­க­ளுக்கு வாடிக்­கை­யாக விற்­கலாம். கடை­க­ளுக்கும் விற்­பனை செய்­யலாம்.

வடகம் தயா­ரிப்­பது எளி­தான வேலை. வித­வி­த­மான சுவை மற்றும் வடி­வங்­களில் தயா­ரிக்க கற்­றுக்­கொண்டால் வடகம் தொழிலில் நல்ல இலா­பத்தை எதிர்­பார்க்­கலாம். வடகம் உட­லுக்கு மிகவும் உகந்­தது. இது நோய் எதிர்ப்பு சக்­தி­மிக்க ஓர் உண­வா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

நந்­தாவல் லேன், தாவடி என்னும் முக­வ­ரியில் வசித்­து­வரும் திரு­மதி. அ.கலா­சோதி 1998ஆம் ஆண்டு முதல் இவ்­வுற்­பத்தித் தொழிலை செய்து வரு­கிறார். இவர் கண­வனை இழந்து 4 பிள்­ளை­க­ளுடன் சுய­தொழில் உற்­பத்­திகள் மூலம் தனது குடும்­பத்தை மட்­டு­மன்றி இரு­வ­ருக்கு தொழில் வாய்ப்­பினை வழங்கி வரு­கின்றார்.

நீண்ட கால­மாக இந்த சுய­தொ­ழிலில் ஈடு­பட்டு வரு­ப­வ­ருடன் இம்­மு­யற்­சிகள், அனு­ப­வங்கள் தொடர்­பாக கேட்டபோது இவ்­வுற்­பத்­திகள் பற்­றிய விப­ரங்கள், அவற்றை செய்யும் முறை குறித்து சுவா­ரஸ்­ய­மாக, மிகுந்த அவ­தா­ன­மாக எம்­முடன் உரை­யா­டினார்.

“வட­கத்தில் வாழைப்பூ வடகம், வேப்­பம்பூ வடகம், பாகற்காய் வடகம், கொவ்­வைக்காய் வடகம் போன்­ற­வற்றை செய்­வ­துடன் ஊருகாய் வகைகள், மோர் மிளகாய், வத்தல், மூலிகை வடகம் முத­லிய உற்­பத்­தி­க­ளையும் நாங்கள் செய்து வரு­கின்றோம்.
குறிப்­பாக மூலிகை வட­கத்தில் குறிஞ்சா, மான்­பாஞ்சான், கரி­ச­லாங்­கன்னி, பென்­னா­வ­ரசு, சிறு­கு­றிஞ்சா, மிளகாய், உப்பு, செத்தல் மிளகாய் இவற்­றினை சேர்த்து மூலிகை வட­கத்­தினை உற்­பத்தி செய்­கின்றோம்.

வடகம் ஒன்­றினை செய்­வ­தாயின் அய­லி­லுள்­ள­வர்கள் மற்றும் ஏனை­ய­வர்­க­ளிடம் வேப்­பம்­பூக்­களை பெற்­றுக்­கொள்வோம். அவற்றை முறை­யாகத் துப்­பு­ரவு செய்வோம். வடகம் செய்­யும்­போது குறித்த பூக்­களை நன்­றாக கழுவிச் சுத்தம் செய்து, வெயிலில் காய­விட்டு, பின் அவற்றை எடுத்து 2 கிலோ வேப்­பம்­பூ­வுக்கு 2 கிலோ உழுந்து, தேவை­யான அளவு பெருஞ்­சீ­ரகம், எள்ளு, வெங்­காயம், பச்சை மிளகாய், உப்பு, செத்தல் மிளகாய் சேர்த்து ஒன்­றாக குளைத்து குறிப்­பிட்ட அளவு எடுத்து வட்­ட­மாக தட்டி வெயிலில் காய­வைக்க வேண்டும்.

குறிப்­பிட்ட நேரத்­துக்குப் பிறகு அவற்றை ஒவ்­வொன்­றாக எடுத்து மறு­பக்கம் திருப்பிக் காய­விட வேண்டும். இப்­படிச் செய்­வ­தற்கு மூன்று பேர் தேவை. இதை செய்து முடிக்கும் போது சுமார் கிலோ வரை­யி­லான வட­கங்­களை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்­வா­றாக வடகம் தயா­ரிக்கும் போது காலத்­துக்­கேற்ப விலை­களில் மாற்றம் ஏற்­படும். பூ இருக்கும் காலங்­களில் மலி­வான விலையும் அதன் பின்­ன­ரான சூழலில் வேறொரு விலையும் கால­நிலை மாற்­றத்­துக்கு மற்­றொரு விலை­யு­மாக விற்­பனை செய்வோம்.

இது­போன்ற காலங்­களில் எமது உற்­பத்திப் பொருட்­க­ளுக்கு மதிப்பு அதிகம்.
அது­போன்ற காலத்தில் ஒரு கிலோ வடகம் சுமார் 350 ரூபாவில் இருந்து 700 ரூபா வரை விற்­ப­னை­யாகும். வர்த்­தக நிலை­யங்­களில் என்றால் இரட்­டிப்­பாக விற்­ப­னை­யாகும்.
யாழ்.மாவட்­டத்தில் இவ்­வா­றான தொழில் முயற்­சியை பலரும் செய்­கின்­றார்கள். சுமார் 50 பேர் வரை­யா­வது இதனைச் செய்து வரு­கின்­றார்கள். எனினும், சுத்­த­மா­கவும் சுகா­தா­ர­மா­கவும் ஒரு சிலரே செய்து வரு­கின்­றார்கள். நான் எனது உற்­பத்­தி­யினை சந்­தைப்­ப­டுத்தும்போது அதனைப் பெற்­றுக்­கொள்­ப­வர்கள் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் என்­னிடம் முறை­யி­டுவர். குறிப்­பாக வேப்­பம்பூ வடகம் செய்­வ­தாயின் தமது வீட்­டி­லுள்ள பூவி­னையே பயன்­ப­டுத்த முடியும். வெளியே காசு கொடுத்தும் இல­வ­ச­மா­கவும் அதனைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

இவற்றை நாங்கள் செய்­கின்­ற­போது அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். குறிப்­பாக மழை, காற்று தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். மழைக் காலங்­களில் காய­வைக்­கப்­படும் வட­கத்தில் மழைத்­தூறல் படு­மே­யானால் அவை சக்­குப்­பி­டித்து பழு­தா­கி­விடும். அனைத்தும் பாவ­னைக்கு உத­வாமல் போய்­விடும். இவ்­வா­றான நிலையில் அவற்றைப் பாது­காப்­ப­தற்கு ஏற்ப திட்­டங்­களை வகுக்க வேண்டும்.
எமது உற்­பத்­தி­களை சந்­தைகள், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு வழங்­கு­வது மட்­டு­மன்றி வெளி­நாட்­டி­லுள்ள உற­வு­க­ளுக்கும் அனுப்பி வைக்­கின்றோம். அவர்கள் இத­னையே விரும்பி விசே­ட­மாக தெரி­யப்­ப­டுத்­து­வார்கள். நானும் அதற்­கேற்ப வட­கங்­களைத் தயா­ரித்து அவர்­க­ளிடம் ஒப்­ப­டைப்பேன்.

தற்­போ­தைய சூழலில் என்­னி­ட­மி­ருந்து பொருட்­களைப் பெற்­றுக்­கொண்­ட­வர்கள் என்­னிடம் கேட்­ட­றிந்து அவர்­க­ளா­கவே உற்­பத்தி செய்து சந்­தைப்­ப­டுத்­து­கின்ற நிலையும் ஏற்­பட்­டுள்­ளது. இது எனக்கு மகிழ்வைத் தரு­கின்­றது.

அதே­வேளை இந்த சுய முயற்­சியால் உள்ளூர் உற்­பத்­தி­களை நாங்கள் மேற்­கொள்­கின்­ற­போது சுகா­தாரப் பரி­சோ­த­கர்­களின் அனு­ம­தி­யினை பெற்­று­க்கொள்­வதில் பல தடைகள் உள்­ளன.

சுகா­தாரப் பரி­சோ­த­கர்­களின் அனு­ம­திக்­கேற்ப நாங்கள் இடத்­தினைத் தெரிவு செய்து முறைப்­படி உற்­பத்­தி­களைச் செய்­கின்­ற­போது உற்­பத்திப் பொருட்­க­ளுக்­கான முத்­தி­ரையை பயன்­ப­டுத்த வேண்டும். இதன்­போது மாகாண இறை­வரித் திணைக்­க­ள­மா­னது குறித்த உற்­பத்­திகள் தொடர்பில் பதி­வு­களை மேற்­கொள்­ளு­மாறும் அதற்­கான வரி­யி­ருப்­புக்­களைக் கட்­டு­மாறும் விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை அனுப்­பு­கின்­றது.

நாம் எமது பொரு­ளா­தார வாழ்­வா­தா­ரத்­துக்­கான சுய­தொழில் முயற்­சி­களை செய்­து­வ­ரு­கின்­ற­போது பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­கர்கள், இறை­வரித் திணைக்­களம் போன்­றவை எம்மைத் தடை­செய்­கின்ற வகையில் செயற்­ப­டு­வார்­க­ளானால் நாம் என்ன செய்­வது?

எமது உற்­பத்­தி­களை திறம்­பட செய்­வ­தற்கு சரி­யான ஊக்­கு­விப்பு தேவை­யெனக் கரு­து­கின்­ற­போது இவ்­வா­றா­ன­வர்­களின் விண்ணப்பப்படிவங்கள் எமக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.” என்கிறார்.

வடக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம். பத்து ஆண்டுகள் அண்மித்த நிலையில் முறையான அபிவிருத்தியோ குடும்பங்களில் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளோ இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்­பங்­களில் சிலர் தாமா­கவே சுய­தொழில் முயற்­சி­களை மேற்­கொண்டு முன்­னேறி வரு­கின்­ற­போது இவ்­வா­றான அரச திணைக்­க­ளங்கள் சுய­தொழில் முயற்­சி­யா­ளர்­களை மழுங்­க­டிக்க நினைப்­பது முறை­யா­னதா? அரச திணைக்­களத் தலை­வர்கள் அர­சி­யல்­வா­திகள் குறித்­த­ வி­ட­யங்­களை கவனத்தில் எடுப்பார்களா?

எம்.நியூட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *