Antharangam

அந்தரங்க கேள்வி பதில் தொகுப்பு: ஏன் இந்த விபரீத ஆசை?

By  | 

கேள்வி
எனக்கு வயது 47. எனது கணவர் இறந்து 6 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில், குடும்பத்தைப் பிரிந்து வாழும் ஒரு 63 வயது நபர், தன்னுடைய பாலியல் பங்காளராக இருக்குமாறு என்னைக் கேட்டார். நான் மறுத்துவிட்டேன். ஆனால், தற்போது அவருடைய விருப்பத்துக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்று எண்ணுகிறேன். இதனால் நான் கர்ப்பம் தரித்துவிடுவேனோ என்று பயமாக உள்ளது. எனக்குத் தகுந்த ஆலோசனையை வழங்கி உதவுங்கள்.

பதில்
உங்களுக்கு இன்னமும் மாதவிலக்கு ஏற்படுகிறது என்றால், நிச்சயமாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், ஏன் இந்த விபரீத ஆசை என்று சற்று எண்ணிப் பாருங்கள்.

உங்களது பிரச்சினை பற்றிச் சொல்லியிருக்கும் நீங்கள், உங்கள் குடும்ப விபரம் எதையும் தெரிவிக்கவில்லை. உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கினறனரா? நீங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறீர்களா? உங்களைப் பற்றிய உங்கள் அயலவர்களின் எண்ணம் எவ்வாறிருக்கிறது என்பன பற்றிய விபரங்களை நீங்கள் தரவில்லை.

உடல் வேட்கையானது, ஓரிரு மணித்துளிகளுக்குள் அடங்கிவிடும். ஆனால், அது  உண்டாக்கும் மனக் குழப்பம் பல்லாண்டு காலம் நிலைத்து நிற்கும். ஒருவேளை, உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் இதுபற்றி அறிந்துகொண்டால், அவர்கள் மனதில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் சுற்றம் சூழ வாழ்ந்து வருகிறீர்கள் என்றால், இந்த விடயம் தெரியவரும் பட்சத்தில், நிச்சயமாக அவர்கள் உங்களை விலக்கியே வைப்பார்கள். அதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?

இளம் வயதில் கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்வதில் உள்ள தயக்கமே இன்னும் நம் சமூகத்தை விட்டு விலகாத சூழலில், இந்த வயதில், இப்படியொரு ஆசைக்கு நீங்கள் அடிமையாவது நிச்சயம் உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் பல வழிகளில் பாதிக்கும்.

உங்களது ஆசை தவறானது என்று யாரும் சொல்லிவிட முடியாது; சொல்லவும் கூடாது. ஏனெனில், அது உங்களது தனிப்பட்ட விருப்பம். ஒருவேளை உங்களுக்கு சாதகமாக நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், பாதுகாப்பான நாட்களில், பாதுகாப்பான முறைகளை பின்பற்றி அவருடன் பாலியல் உறவில் ஈடுபடலாம். இதனை நீங்கள் ஒரு முறை பரீட்சார்த்தமாக முயற்சித்து பாருங்கள் என்று பரிந்துரைக்கிறோம். ஆனால், நாம் இந்த சமுதாயத்தில் தனித்தனி மனிதர்களாக வாழவில்லை. ஒரு மக்கட்தொகுதியாக இணைந்தே வாழ்கிறோம். அப்படி வாழும்போது, அந்த மக்கட்தொகுதிக்கென்றான சில பண்புகளை நாம் விரும்பியோ, விரும்பாமலோ கடைப்பிடித்தே ஆகவேண்டும். அதில் தவறும் பட்சத்தில், பாதிப்புகள் பாரதூரமானவையாக இருக்கும்.

எனவே, நம்முடைய சமூகத்தில் தொடர்ந்தும் இணைந்து வாழ உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த விபரீத விளையாட்டைத் தவிர்ப்பதே நல்லது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *