Biodata

நட்சத்திரங்களின் வாழ்க்கைத் துணை: மனந்திறக்கிறார் நடிகர் ஷாம்

By  | 

‘கல்­யா­ணத்தில் முடி­கிறபோது காதல் தோற்­றுப்­போ­கி­ற­து’­ என்று சொல்­வார்கள். இப்­படி சொன்­ன­வர்கள் நடிகர் ஷாமை சந்­தித்தால் நிச்­சயம் கருத்தை மாற்றிக்கொள்­வார்கள்.கல்­யா­ணத்தில் முடிந்­தாலும் ஷாம் விஷ­யத்தில் இன்­னமும் உயிர்ப்­பு­டனும் இருக்­கி­றது காதல்.

மனைவி கஷிஷ் பற்றி ஷாம்
பெங்­க­ளூ­ருல பி.காம் படிச்­சிட்­டி­ருந்தேன். கஷிஷும் பி.காம் பண்­ணிட்­டி­ருந்­தாங்க. ரெண்டு பேரும் ஒரே பேட்ச்… வேற வேற காலேஜ். பொது­வான ஃப்ரெண்ட்ஸ் மூலமா அறி­மு­க­மானோம். அவங்க எல்லாம் படிக்­கிற கேங். நானோ ஃப்ரெண்ட்ஸ், சினிமா, பார்ட்­டின்னு ஊர் சுத்­தற ஆளு. மன­சுக்­குள்ளே சினிமா ஆசை வேற றெக்கை கட்டிப் பறந்­திட்­டி­ருந்த டைம் அது. மொட­லிங்கும் பண்­ணிட்­டி­ருந்தேன்… ‘எல்லா சப்­ஜெக்ட்­லயும் ஃபெயி­லா­கறே… படிப்பைப் பத்­தின சீரி­யஸ்­னஸே இல்­லை’ன்னு சொல்லி ஒரு ஃப்ரெண்டா எனக்கு அவங்க டியூஷன் எடுக்க ஆரம்­பிச்­சாங்க.

காதல்
என் மேல அவங்க காட்­டின அக்­க­றையும் அன்பும் அவங்க பக்கம் என்னை ஈர்த்­தது. நட்பு காத­லாச்சு. ஒரு நல்ல நாள்ல அவங்­கக்­கிட்ட என் காதலைச் சொன்னேன். பெரிசா எந்த ரியா­க் ஷனும் காட்­டலை. ‘நல்­லாத்­­­­தானே போயிட்­டி­ருக்கு… ஃப்­ரெண்ட்ஸா சந்­தோ­ஷ­மாத்­தானே இருக­்­­கோம்… எதுக்கு உனக்கு இப்­ப­டி­யொரு ஆசை’ன்னு கேட்­டாங்க. அவங்­க­ளோட தயக்­கத்­­துக்குக் காரணம் எங்க ரெண்டு பேரோட மதம். நான் முஸ்லிம். அவங்க இந்து பஞ்­சாபி. ‘இதெல்லாம் சரி வராது… எதுக்கு நாமே சிக்­கலை உரு­வாக்­கிக்­­கிட்­டு’ன்னு ரொம்ப யோசிச்­சாங்க. நானோ அவங்கதான் என் மனை­விங்­கி­ற­­துல உறு­தியா இருந்தேன்…அதை அவங்­களுக்குப் புரி­யவும் வச்சேன்.

‘12பி’
நாங்க இஸ்­லா­மியக் குடும்பம். அப்பாதான் எனக்குப் பெரிய சப்போர்ட். நான் கஷிஷ்­கிட்ட காதலை வெளிப்­­­ப­டுத்தி சில மாதங்கள் இருக்கும். அப்பா இறந்­துட்டார். நான் பிர­மா­த­­மான ஃபுட்போல் பிளேயர். அந்த நேரத்­துல அம்மா எனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்­தாங்க. ஒண்ணு… ஃபுட்போல் விளை­யாட்­டுல தீவி­ர­மா­க­றது. இல்­லைன்னா அப்­பா­வோட பிசி­னஸை பார்த்­துக்­க­றது… மன­சுக்­குள்ள சினிமா வெறி பத்தி எரிஞ்­சிட்­டி­ருந்த எனக்கு அந்த ரெண்­டை­யுமே ஏத்­துக்க முடி­யலை. கஷிஷ்­கிட்ட ‘நாம நினைச்ச மாதிரி எதுவும் சரியா வராது. என்னை மறந்­து­டு’ன்னு சொல்­லிட்டு மும்­பைக்கு போயிட்டேன். ‘என்­னால உன்னை மறக்க முடி­யாது… நான் காத்­தி­ருக்கேன். நீ நிச்­சயம் ஜெயிப்பே… எனக்கு நம்­பிக்கை இருக்­கு’ன்னு சொன்­னாங்க அவங்க. ஒன்­றரை வருஷத் தேடல்ல ‘12பி’ பட வாய்ப்பு கிடைச்­சது. அந்த சந்­தோ­ஷத்தை நான் பகிர்ந்­துக்­கிட்ட முதல் ஆள் என் அம்மா. அடுத்­தது… என் கஷிஷ்.

சம்­மதம்
‘12பி’ படத்­தோட ப்ரீமியர் ஷோவுக்கு அவங்­களைக் கூட்­டிட்டுப் போயி­ருந்தேன். விட்ட இடத்­து­லே­ருந்து மறு­படி பூக்க ஆரம்­பிச்­சது எங்­க­ளோட காதல்… ரெண்டு வருஷம் கழிச்சு அம்­மா­வுக்கு அறி­மு­கப்­ப­டுத்தி வச்சேன். ‘இது சரியா வரு­மா’ங்­கிற கேள்­வி­களை ரெண்டு பேர் வீட்­டு­லே­ருந்தும் தவிர்க்க முடி­யலை. கஷி­ஷுக்கும் அப்பா இல்லை. அவங்­கப்பா இறந்த பிறகு, அவங்க குடும்பம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆயி­டுச்சு. ‘வாழப் போறது நாங்க ரெண்டு பேர்… இதுல மதமோ, வேற எது­வுமோ முக்­கி­ய­மில்­லை’ன்னு சொல்லி சிர­மப்­பட்­டுத்தான் சம்­மதம் வாங்­கினோம்.

திரு­மணம்
2003ல இந்து முறைப்­படி ஒண்ணும், இஸ்­லா­மிய முறைப்­படி ஒண்­ணுமா எங்­க­ளுக்கு ரெண்டு கல்­யாணம் நடந்­தது. தாய்­லாந்தில் தேனி­லவு.

ஏமாற்றம், தனிமை
2004லேருந்து 2006 வரைக்­கு­மான பீரியட் அது. நான் நானா இல்­லைன்னு சொல்­லலாம். பணத்­துக்கு ஆசைப்­பட்டு நடிக்க வந்­த­வ­னில்லை நான். அத­னா­லேயே என்­னோட ஆரம்ப காலத்­­துல பணத்தை நான் பெரிசா நினைச்­சதே இல்லை. சம்­ப­ளமே இல்­லாம நடிச்ச கால­மெல்லாம் உண்டு. ஆனா, சினி­மா­வுல நான் நம்­பின சிலர் என்னை ஏமாத்­தி­னாங்க. அதுல நான் வாங்­கின அடியும் வலியும் என்னை ரொம்­பவே பாதிச்­சது. பல ராத்­திரி தூக்­க­மில்­லாமத் தவிச்­சி­ருக்கேன். நிறைய ஸ்மோக் பண்­ணினேன். ரொம்ப டிஸ்­டர்ப்டா இருந்தேன். அது வீட்­டுக்­­குள்­ளேயும் பிர­தி­ப­லிச்­சது. யார்­கூ­டவும் பேசாம, தனி­மை­யில புழுங்­கி­யி­ருக்கேன்.

இதுவும் கடந்து போகும்
அந்த நேரத்­துல என் வேத­னையைப் புரிஞ்­சுக்­கிட்டு ஒரு வார்த்தை பேசாம, ‘இதுவும் கடந்து போகும்’னு எனக்கு நம்­பிக்கை தந்­தது கஷிஷ். என் வாழ்க்­கை­யில நான் என் மேல வச்­சி­ருந்த நம்­பிக்­கை­யை­விட அவங்க என் மேல வச்ச நம்­பிக்­கைதான் அதிகம். அதுதான் என்னை இத்­தனை தூரம் கூட்­டிட்டு வந்­தி­ருக்­குன்னு நினைக்­கிறேன். அவங்க சொன்ன மாதி­ரியே எல்லாம் ஒரு நாள் மாறி­னது. மறு­படி சினி­மா­வுல நான் பிசி­யாக ஆரம்­பிச்சேன். வெற்­றியைப் பகிர்ந்­துக்­கி­றது யாருக்கும் சுலபம். தோல்­வியின் போது கூட இருக்­கி­ற­துக்கும் பாதிக்­கப்­பட்­ட­வங்­களை மனசு உடை­யாமப் பார்த்­துக் ­­க­ற­துக்கும் ரொம்பப் பெரிய மனசு வேணும். என் ‘கஷிஷ்’க்கு உண்­மை­­யி­லேயே ரொம்ப நல்ல மனசு.

பக்­குவம்
ஒரு காலத்­துல எனக்கு சினி­மாதான் எல்லாம். அரை மணி நேரம் கிடைச்­சாலும் ஏதா­வது ஒரு டிஸ்­க­ஷன்­லயோ, மீட்­டிங்­லயோ இருக்­க­ற­தைத்தான் விரும்­புவேன். மனை­வி­யோட வெளி­யில போக­ணும்னா எங்­களை மாதிரி பிர­ப­லங்­க­ளுக்கு ஒரே சாய்ஸ் ஸ்டார் ஹோட்டல்ஸ். மங்­க­லான வெளிச்­சமும் அமை­தி­யான அந்தச் சூழலும் எங்­க­ளுக்கு செயற்­கையா இருக்கும். மனசு அதுல ஒன்­றாது. அந்த லைஃப் ஸ்டைலுக்கு அட்ஜஸ்ட் பண்­ற­துல கஷிஷ் ரொம்பக் கஷ்­டப்­பட்­டாங்க. இப்ப எனக்­குள்ள நிறைய பக்­குவம் வந்­தி­ருக்கு. ரெண்டு நாள் பிரேக் கிடைச்­சாலும் வயிஃ­பையும் குழந்­தைங்­க­ளையும் பார்க்க ஓடி­டுறேன்.

காதல் ரோஜா
எங்க வீட்டைப் பொறுத்­த­வரை பர்த் டே, வெட்டிங் டே… எல்லாம் சாதா­ர­ணம்தான். அதெல்லாம் வரு­ஷத்­துக்­கொரு முறை வந்து போற நாட்கள்… ஜன­வரி 9, 1996 – இதுதான் எனக்கு ஸ்பெஷல் டே. என் காதலைச் சொன்ன நாள்! அன்­னி­லே­ருந்து ஒவ்­வொரு வரு­ஷமும் ஒவ்­வொரு மாசமும் 9ஆம் திக­தி­யன்­னிக்கு என் மனை­விக்கு ஒரு ரோஸ் கொடுக்­க­றது வழக்கம். நாளுக்கு நாள் அந்த ரோஜாக்­க­ளோட எண்­ணிக்கை அதி­க­ரிச்­சிட்­டேதான் போகுது, என் காதலைப் போல..!

என் குழந்­தைகள்!
‘‘மூத்த மகள் சமை­ரா­வுக்கு 6 வயசு. சின்­னவ கியா­ரா­வுக்கு ஒன்­றரை வயசு. முதல் பிர­ச­வத்தின் போது எனக்குத் தவிர்க்க முடி­யாத ஷூட்டிங். பக்­கத்­து­லயே இருப்­பேன்னு பிராமிஸ் பண்­ணின என்­னால, அப்­­படி இருக்க முடி­யலை. 4 மணி நேரம் லேட்! ‘உனக்கு எப்­போதும் உன் வேலைதான் முக்­கியம்… நம்ம குழந்­தையை நீதான் முதல்ல தூக்­க­ணும்னு எவ்ளோ ஆசையா காத்­தி­ருந்­தேன் தெரியுமா’ன்னு கஷிஷ் கோவிச்­சுக்கிட்டது இப்பவும் நினை­வி­ருக்கு. ரெண்­டா­வது பொண்ணு பிறந்­ததும் அவ­ளுக்குப் பேர் வச்­சது மூத்­தவ சமை­ராதான். ‘லயன் கிங்’ல வர்ற சிங்­கக்­குட்­டி­யோட பேராம் கியாரா!

மூத்­தவ சாயல், கேரக்­டர்னு எல்­லாத்­து­லேயும் அம்­மா­வோட ஜெராக்ஸ்னா, சின்­னவ அப்­ப­டியே என் ஜெராக்ஸ்! ‘என் ஃப்ரெண்ட்­ஸோட அப்­பா­வெல்லாம் ஈவினிங் 6 மணிக்கு வீட்­டுக்கு வந்து அவங்­க­ளோட டைம் ஸ்பென்ட் பண்­றாங்க. நீ மட்டும் ஏன் நடிக்­கிறே… யார், யாரோ ஆன்ட்­டி­யோட டான்ஸ் பண்­றே’ன்னு கேட்­டுக்­கிட்டே இருந்தா. அவ­ளுக்குத் தெரிஞ்ச ரெண்டே ஸ்டார்ஸ், ஷாருக்கானும் சூப்பர் ஸ்டாரும்தான். ‘நீயும் ஆக்­டர்­தானே… ஷாருக் அங்­கிளை பார்க்கக் கூட்­டிட்டுப் போயேன்’னு கேட்­கறா. என்­னோட படப்­பாட்டு எல்­லாத்­தையும் அவ­ளோட ஐபாட்ல வச்­சி­ருக்கா.

குழந்­தைங்க பிறந்­ததும் என் மனைவி மேல எனக்­கி­ருந்த மதிப்பும் மரி­யா­தையும் பல மடங்கு அதி­க­மா­யி­ருக்­குன்­னுதான் சொல்­லணும். ஒரு நிமி­ஷம்­கூட அவங்­களை விட்டுப் பிரிய மாட்­டாங்க. குழந்­தைங்­க­ளுக்­கான எல்லா வேலை­க­ளையும் அவங்­கதான் செய்­வாங்க. வேலைக்கு ஆள் இருந்­தாலும் அந்தப் பொறுப்­பு­களை மட்டும் யார்­கிட்­டயும் விட்டுக் கொடுக்க மாட்­டாங்க. குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண்­ணோட உலகம் அப்­ப­டியே தலைகீழா மாறிப்போகுது. தூக்கம், சாப்பாடு, சின்னச் சின்ன சந்தோஷங்கள்னு அவங்க நிறைய விஷயங்களைத் தியாகம் பண்ண வேண்டியிருக்கு. ஆனாலும், எதையுமே அலுத்துக்காம அன்பா, அக்கறையா செய்யற அந்த மனசு ஆண்களுக்கு வராது. தன்னோட வாழ்க்கையையே மறந்துட்டு, குழந்தைங்கதான் உலகம்னு மாறிப்போன என் மனைவிக்கு அடுத்த ஜென்மத்துல நான் அப்பாவா பிறக்கணும். அவங்களோட அப்பா விட்டுட்டுப் போன சந்தோஷங்
களையும், ஒரு அப்பாவா நான் என் குழந்தைங்களுக்கு செய்யத் தவறின விஷயங்களையும் சேர்த்து அவங்களுக்குச் செய்யணும்னு ஆசைப்படறேன்!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *