Cinema

விஜயுடன் இணைந்த பாலிவுட் முன்னணி நடிகை!

By  | 

அட்லி இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட்டின் முன்னணி நடிகை கைரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்க்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக அட்லி & விஜய் இணையவுள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கும் நாயகி குறித்து தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பாலிவுட்டின் பிரபல நாயகி கைரா அத்வானி, விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் நடிகை கைரா அத்வானி, ‘எம்.எஸ். தோனி’ படத்திலும் மகேஷ் பாபு நடித்த ‘பாரத் அனே நேனு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *