Children

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க இதை ட்ரைப் பண்ணுங்க!

By  | 

அனைத்து பெற்றோர்களுக்குமே தங்களது குழந்தை நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். படிப்பு என்பது வேறும் புத்தக அறிவு மட்டுமல்ல.. குழந்தைகளுக்கு பல வெளியுல விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

பாட புத்தகங்களை தவிர உங்களது குழந்தைகளுக்கு வெளியுலகத்தை பற்றியும் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். படிப்பு அறிவை விட அனுபவ அறிவே சிறந்தது… நல்ல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களது புத்தி கூர்மையை தீட்டும் புத்தகங்களை உங்களது குழந்தையை வாசிக்க சொல்லுங்கள்..
மேலும் குழந்தைகளின் மூளை திறனை வளர்க்க அவர்களது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். இந்த பகுதியில் உங்களது குழந்தையின் மூளை திறனை அதிகரிக்க உதவும் உணவுகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன் பெருங்கள்….!

*பால் மற்றும் பால் பொருட்களில் அறிவாற்றலை பெருக்கும் புரோட்டின் ,பொட்டாசியம் ,கால்சியம் , வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது நரம்பு மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மூளை செல்களையும் நன்கு செயல்பட வைக்கிறது ,இதனால் அவர்களை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கிறது.

*ஸ்ட்ராபெர்ரி செர்ரி ,நெல்லி ,நாவல் போன்ற பழங்களில் மூளைக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஒமேகா 3சத்து மூளையின் வெளி பகுதியை பாதுகாக்கிறது. மேலும் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குகிறது.

*மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் கோலைன் சத்து செல் முட்டையில் அதிகம் உள்ளது .இதை குழந்தைகள் உண்பதால் மூளை களைப்படையாமல் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

*மீன்களில் ஒமேகா 3 சத்து அதிகம் உள்ளது ,இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவிகரமாகிறது .மற்ற உணவு பொருட்களில் இருப்பதைவிட மீனில் அறிவுக்கூர்மைக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன.

*பூசணி விதைகளில் அதிக அளவு ஜிங்க் உள்ளது. இதில் உள்ள மினரல்கள் நியாபக சக்தியை அதிகரிக்க அத்தியாவசியமானவை ஆகும்.

*பாதாம் மூளையின் திறனை அதிகரிக்க மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டுகள் அதிகளவில் உள்ளன. இவை மூளையின் திறனை அதிகரிக்கின்றன. இதில் விட்டமின் இ அதிகளவில் உள்ளது.

*கீரைகளை உங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். எனவே வாரத்தில் குறைந்தபட்டமாக 2 முறையாவது உங்களது குழந்தைகளின் உணவில் கீரை இருக்க வேண்டியது அவசியமாகும். இரவு நேரத்தில் கீரைகளை கொடுக்காதீர்கள். அவை செரிமானமாகாது.

*நட்ஸ்களில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின் இ, ஒமேகா ஃபேட்டி ஆசிட்டுகள், காப்பர், மெக்கனீசு மற்றும் பைபர் போன்ற மூளையின் திறனை ஊக்குவிக்க கூடிய சத்துக்களும் இதில் உள்ளன.

*ஒலிவ் ஒயில் குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் உள்ளது. இது மூளையின் திறனை மேம்படுத்தக் கூடிய அத்தியாவசிய சத்துக்களை தன் உள்ளடக்கியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *