Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

பல் டாக்டரை பார்க்க போனேன் அங்க லேடி டாக்டர் இருந்தாங்க திரும்பி வந்துட்டேன் ஏன்னா….

நாம எந்த பொண்ணுகிட்டயும் பல்லை காட்டி நிற்க கூடாதுல….

****************************************************************

உன் பேர் என்ன?

ராமராஜன் சார்?

வீட்டுல எப்படிக் கூப்பிடுவாங்க?

கிட்ட இருந்தா மெதுவா…

தூரமா இருந்தா சத்தமா…

****************************************************************

மனைவி எல்லை தாண்டிய பயங்கரம் அப்படினா என்னங்க…..

நீ என்மேல பூரிக்கட்டைய தூக்கி எறியும் போது அது தெருவுல போறவங்க மேல படுதுல்ல அதுதான்….

****************************************************************

என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்க முடியாது,
அவ பேச ஆரம்பிச்சா பைத்தியம் பிடிச்சிடும்,
யோவ் … பேங்க்ல வந்து
ஏன்யா இதையெல்லாம் சொல்றே…
நம்ம கஷ்டத்தை சொன்னாதான்
லோன் கிடைக்கும்னு
சொன்னாங்க!

****************************************************************

சார் சார் என் பொண்டாட்டிய காணோம் …
யோ இது போஸ்ட் ஆபிஸ்….

அய்யோ சந்தோஷத்துல எங்க போறதுன்னே
தெரியல…!

****************************************************************

டாக்டர்: தண்ணியை காய்ச்சி வடிகட்டி குடிக்க சொன்னேனே செஞ்சியா

வேலு: அப்படி செஞ்சதுக்கு தான் பொலிஸ்ல புடிச்சிட்டு போயிட்டாங்க டாக்டர்

****************************************************************

ஒரு கவிதை சொல் என்றாள்
அவள் பெயர் சொன்னேன்….
அவள் முகத்தில் வெட்கம் வந்தது…

இன்னுமோர் கவிதை சொல் என்றாள்…
அவள் தங்கச்சி பெயர் சொன்னேன் …
என் மூக்கில் இரத்தம் வந்தது.

என்னா அடி

****************************************************************

என்னடி இப்பல்லாம் மேனேஜர்
உன்னை பார்த்து சிரிக்கிறதில்லை

நீங்க சிரிக்கும்போது எங்க
தாத்தா மாதிரியே
இருக்கீங்கன்னு சொன்னேன்
அதான்…!

****************************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *