Cinema

சமந்தாவின் தோல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி

By  | 

நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவுக்கு ஆரம்ப காலத்தில் வெயிலின் தாக்கத்தால் தோல் நோய் இருந்து வந்தது. இதனால் முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்களில் நடிக்க முடியாமல் போனது. தற்போது அந்த பிரச்னையெல்லாம் நீங்கி விட்டதாக சமந்தா கூறியுள்ளார்.

தற்போது வெயில் காலங்களிலும் படங்களில் நடிக்க மறுப்பதில்லை நடிகை சமந்தா. சமந்தாவின் இந்த தோல் பிரச்னையை தீர்த்து வைத்தவர் பாடகி சின்மயிதானாம். அவர் கொடுத்த டிப்ஸால்தான் அது குணமானதாம்.

நடிகை சமந்தா, சின்மயிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமந்தா ஒரு பெட்டியை திறக்கிறார். அந்த பெட்டியில் தோலை பாதுகாக்கும் பிரத்யேக அழகு சாதன பொருட்கள் உள்ளன. இதனை சின்மயிதான் சமந்தாவுக்கு அனுப்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *