Cookery

மைசூர் பாக் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • கடலை மா – அரை கப்
  • சர்க்கரை – அரை கப்
  • சூரியகாந்தி எண்ணெய் – ஒரு கப்
  • நெய் – 4 தேக்கரண்டி
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • தண்ணீர் – 3 தேக்கரண்டி

செய்முறை

*முதலில் சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து சர்க்கரை உருகும் வரை கிளறவும்.

*முழுவதும் உருகியதும் எண்ணெயையும் நெய்யையும் சேர்த்து கிளறவும். கடலை மாவை அரை தேக்கரண்டி நெய் சேர்த்து வறுத்து வைக்கவும்.

*எண்ணெய் சிறிது சூடாகி கொதிக்க தயாரானதும் வறுத்த கடலை மாவை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும்.

*கைவிடாமல் கிளற கிளற கட்டியில்லாமல் நெய் சர்க்கரையுடன் கரையும்மாவை கிளறி தீயை மிதமாக வைக்க சிறிது நேரத்தில் கொதிக்கும் பின் நுரைக்கும்.

*கைவிடாமல் கிளறி பின் அவை மெல்ல திரண்டு கரண்டு சுழற்றும் அதே போல மாவு திரண்டு உருளும் சட்டியில் ஒட்டாமல் வரும் பதம் வந்ததும் தீயை அணைத்து விட்டு நெய் தடவிய பரந்த ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.

*சிறிது சூடாறியதும் வில்லைகள் போட்டு நன்கு ஆறியதும் கவிழ்த்து கொட்டி பரிமாறவும். சுவையான மைசூர் பாக் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *