Beauty

முடி வளர்ச்சிக்கு ஈஸ்ட் பயன்படுத்தலாமே!

By  | 

ஈஸ்ட்டை பயன்படுத்தி நீளமான கூந்தலை பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளதென்பது பலருக்கு தெரியாது. எப்படி என அறிந்து கொள்வோம்..

ஈஸ்டில் உள்ள நன்மைகள்?

* ஈஸ்டில் அதிகம் போலிக் அமிலம் உள்ளது.
* முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
முடியின் வேர்கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
* வேர்க்கால்கள் பலப்படுத்தப்படும்.
* முடிஉதிர்வினை கட்டுப்படுத்த முடியும்.
* சரும மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்ல பலன்களை தரும்.

தேவையானவை

  • முட்டையின் மஞ்சள் கரு – 2
  • ஈஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

* முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள்.

* பின்னர் தேன், ஈஸ்ட் போன்ற்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
தலைமுடியை ஈரப்படுத்துங்கள்.

* இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும்.

* 20 -30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும்
வாரம் இரண்டு நாட்கள் இவ்வாறு செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
  • கற்றாழை – 4 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

* 3 பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து கொள்ளவும்.

* க்ரீம் பதத்திற்கு கொண்டு வந்ததும் தலையில் தடவவும்.

* அரை மணி நேரம் கழித்து தலைமுடியில் அலச வேண்டும்
வாரம் ஒருமுறை செய்தால் நல்ல நீளமான கூந்தலை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *